டைட்டானிக் கப்பல் மோதிய ஐஸ் பாறை இது தான்! இதுவரை யாரும் பார்க்காத வரலாற்று புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

யாராவது கதைகளை சொல்ல ஆரம்பித்தால் அந்த காட்சிகளை அப்படியே மனதில் ஓடவைத்து பார்ப்பது வழக்கம். நமக்கு தெரிந்த, அல்லது நமக்கு நல்ல பரிச்சியமான ஒரு விஷயம், இடம் என்றால் அதனை எளிதாக நம்மால் நினைவுக்கு கொண்டு வர முடியும், ஆனால் இதே வரலாற்றுக்கு தொடர்புடைய

இடங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைப்பெற்ற சம்பவங்கள் என்றால் எப்படி சாத்தியம்?

அந்த காலத்தை, அப்போதைய சூழ்நிலையை நினைவுக்கு கொண்டு வந்து நினைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கக்கூடும். அதனைப் போக்க இங்கே உங்களுக்கு சில படங்களை கொடுத்திருக்கிறோம். இதுவரை ஓவியமாகவும், எழுத்துக்களாகவும் படித்து வந்த சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில சம்பவங்களின் புகைப்படத் தொகுப்பு இங்கே உங்களுக்காக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஆபிஸ்லயே சாப்பாடு, உக்காந்த இடத்துல டீ காபி எல்லாம் வரும் தெரியுமா என்று இன்றைய இளைஞர்கள் தான் புகழ் பாடுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அந்த காலத்திலேயே அதாவது 1961 ஆம் ஆண்டே டிஸ்னிலேண்டில் இது சாத்தியப்பட்டிருக்கிறது.

இந்தப் படம் டிஸ்னிலேண்டில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் கேஃபெடேரியாவில் உட்கார்ந்து சாப்பிடுகிற காட்சி.

Image Courtesy

#2

#2

நம் தேசப்பிதா காந்தி தாத்தாவின் இறுதி ஊர்வலம். மக்கள் அலைகடலென திரண்டு அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தும் காட்சி இது. ஒருவர் காந்தியின் முகத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று சொல்லி மிகவும் ஆபத்தான மின் கம்பத்தில் ஏறி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Image Courtesy

#3

#3

சிங்கம் ஒன்று குப்புறப்படுத்துக் கொண்டு இருக்கும் மாதிரியான ஒரு படம் சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. எம்.ஜி.எம் லோகோவிற்கான சிங்கத்தை இப்படித்தான் படம் பிடித்தார்கள் என்றார்கள். ஆனால் அது போலியான புகைப்படம்.

உடல்நலிவுற்று இருந்த சிங்கத்தை சிகிச்சையளிக்க அப்படி படுக்க வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இணையத்தில் வேறு பெயரில் கிளப்பிவிட்டார்கள். தற்போது உண்மையிலேயே லோகோ தயாரிக்க சிங்கத்தை இப்படித்தான் படம் பிடித்திருக்கிறார்கள்.

Image Courtesy

#4

#4

இது ஆபிரகாம் லிங்கனின் சிலைக்கு பின்புறம் நின்று கொண்டு மார்ட்டீன் லூதர் கிங் ஆற்றிய உரையின் போது எடுக்கப்பட்ட படம்.

இதுவரை இந்தக் காட்சிகளை ஓவியமாக கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இந்தபுகைப்படம் அப்போதைய சூழ்நிலையை கச்சிதமாக படம் பிடித்துக் காட்டுகிறது.

Image Courtesy

#5

#5

முதலாம் உலகப்போர் முடிவுக்கு கொண்டு வந்தது ட்ரீட்டி ஆஃப் வெர்சைல்ஸ். வரலாற்றில் மிகவும் முக்கியமான இந்த காலத்தில் முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது என்று கையெழுத்திட்டனர். அதனை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

Image Courtesy

#6

#6

1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பெரிய ஐஸ் பாறையில் மோதி மூழ்கியது. டைட்டானிக் கப்பலைப் பற்றிய பல்வேறு சர்ச்சைகள் இன்றளவும் எழுப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் டைட்டானிக் கப்பல் மோதியதாக சொல்லப்படும் ஐஸ் பாறை இது தான்.

Image Courtesy

#7

#7

ஜாக்குலின் கென்னடி, இவர் ஜான் ஃப்.கென்னடியின் மனைவி. ஜான் கென்னடியும் ரிச்சர்ட் நிக்‌ஷனும் விவாதித்துக் கொண்டிருப்பதை மனைவி ஜாக்குலின் பின்னால் திரைக்கு மறைவிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1960

Image Courtesy

#8

#8

என்ன இந்த மக்கள் ஏதோ குப்பை கூலங்களுக்கு நடுவில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறார்களா? இது குப்பைகள் அல்ல கொண்டாட்டத்தின் ஒரு பகுதி. அப்படி எதைத் தெரியுமா இவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகு வண்ணக்காகித பட்டாசுகளை வெடிக்கச் செய்து கொண்டாடி மகிழ்ந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

Image Courtesy

#9

#9

ஐஸ் பாறையில் மோதி மூழ்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் கடைசி புகைப்படம் இது.

Image Courtesy

#10

#10

பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களை தயாரிக்கும் இடமாக விளங்கிக் கொண்டிருக்கும் ஹாலிவுட்லேண்ட் 1923 ஆம் ஆண்டு எப்படியிருந்தது தெரியுமா? இன்றைக்கு உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பங்களுடன் விளங்கும் இந்த இடம் 1923 ஆம் ஆண்டு இப்படித் தான் இருந்திருக்கிறது.

Image Courtesy

#11

#11

ரைட் சகோதரர்கள் பல கட்டமுயற்சிகளுக்குப் பிறகு விமானத்தை பறக்க வைத்து சாதனை படைத்தார்கள். இந்த கதை எல்லாருக்கும் தெரியும் தான். ஆனால் இந்தப் படத்தில் பார்ப்பதும் ஓர் சாதனை அதிசயம் தான். மனிதனால் பறக்கவே முடியாது என்ற போது, இல்லை மனிதனாலும் இயந்திரத்தின் உதவியுடன் பறக்க முடியும் என்று நிரூபித்து சாத்தியப்படுத்தினார்கள்.

இல்லை இல்லை மனிதானல் ஓரளவுக்குத் தான் உயரமாக பறக்க முடியும். அதிக உயரத்திற்கு எல்லாம் செல்ல முடியாது என்று சொன்னபோது அதையும் பொய்யாக்கி அமெரிக்காவின் லிபர்ட்டி சிலையின் உயரத்திற்கு ரைட் சகோதரர்கள் பறந்தது போது 1909 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

Image Courtesy

#12

#12

1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் நாகசாகியில் அட்டாமிக் பாம் வீசப்பட்டத்து. அதன் வீரியத்தில் நூற்றாண்டிற்கு அந்த மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தார்கள். அதன் தாக்கம் இன்றும் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

அத்தகைய அட்டாமிக் பாம் வீசப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

Image Courtesy

#13

#13

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை கட்டப்படும் போது 1884 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். இன்றைக்கு ஒய்யாரமாய் உயர்ந்து நிற்கும் சிலையை நிற்க வைக்க, அப்போதைய மக்கள் எத்தனை பேர் உழைத்திருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.

Image Courtesy

#14

#14

இராக்கில் இருக்கும் எண்ணெய் கிணறுகளில் 1990 ஆம் ஆண்டு வெடி விபத்து நிகழ்ந்தது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு அருகில் கூட செல்ல முடியவைல்லை. வானம் முழுவதும் கருப்புப்புகை படர்ந்து பகல் நேரமெல்லாம் இரவு போலவே காட்சியளித்தது,இந்நிலையில் இரானின் ராணுவ வீரர் ஒருவர் எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய் கிணற்றை பார்வையிடும் காட்சி.

Image Courtesy

 #15

#15

அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற கொத்திக் பெயிண்டிங் முன்பாக நின்று அதற்கு போஸ் கொடுத்த தம்பதிகள் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார்கள்.

Image Courtesy

#16

#16

ஜான்.ஃப்.கென்னடியின் இறுதிச்சடங்கு 1963 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. அப்போது எடுக்கப்பட்ட பறவையின் பார்வையில் எனப்படுகிற பேர்ட்ஸ் ஐ வியூ போட்டோ.

Image Courtesy

#17

#17

கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனிக்கு இடையில் இருந்த பெருஞ்சுவர் இடிந்து விழுந்ததையொட்டி பெர்லினில் அன்று ஏற்பட்ட வாகன நெரிசல் தான் இது. இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1989.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Shocking images for ancient historical moments

Shocking images for ancient historical moments
Story first published: Monday, January 22, 2018, 12:43 [IST]
Subscribe Newsletter