Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க..
Rava Aval Dosa With Tomato Onion Chutney Recipe In Tamil: காலையில் தோசை சுட மாவு இல்லையா? சட்டென்று காலை டிபனை செய்ய வேண்டுமா? வீட்டில் ரவையும், அவலும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு மொறுமொறுப்பான தோசையை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக தக்காளி வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த காம்போ மிகவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இது 10 நிமிடத்தில் சட்டென்று செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ரவா அவல் தோசையும், தக்காளி வெங்காய சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா அவல் தோசை மற்றும் தக்காளி வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பூண்டு - 4
* இஞ்சி - சிறிய துண்டு
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
தோசை மாவிற்கு...
* ரவை - 1 கப்
* வெள்ளை அவல் - 1/2 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் தோசை மாவிற்கு மிக்சர் ஜாரில் 1 கப் ரவை மற்றும் 1/2 கப்
வெள்ளை அவலை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் கோதுமை மாவு, 1/2 கப் அரிசி மாவு சேர்த்து, 3
டேபிள் ஸ்பூன் தயிரையும் சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை
ஊற்றி கலந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சட்னி செய்வதற்கு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து
குறைவான தீயில் வைத்து, நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, சீரகம்
ஆகியவற்றை சேர்த்து, வெங்காயமும், தக்காளியும் நன்கு வேகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி,
கொத்தமல்லியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி, மசாலாவின் பச்சை வாசனை போக வேக
வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான
அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான
தக்காளி வெங்காய சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் ஓரயளவ சூடானதும்,
கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி வேக வைத்து,
திருப்பி போடாமல் மடித்து எடுத்தால், மொறுமொறுப்பான ரவா அவல் தோசை
தயார்.



Click it and Unblock the Notifications