விலங்குகளுடன் மனிதர்களை அடைத்து வைத்து சித்திரவதை!

Subscribe to Boldsky

இப்போது அதிகரித்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இயந்திர மனிதர்கள், இயற்கை அழிப்பு போன்ற காரணங்களால் மனித இனம் முற்றிலுமாக அழிந்திடும் ஒரு கட்டத்தில் மனிதர்களை கூண்டில் அடைத்து மிருககாட்சி சாலைக்கு பதிலாக மனிதகாட்சி சாலைக்கு தான் சென்று பார்க்க வேண்டும் என்று விளையாட்டாக பேசிய விஷயம் உண்மையிலேயே நடந்திருகிறது.

ஆம், பல ஆண்டுகளுக்கு முன்னரே ஹுயூமன் ஜூ இருந்திருக்கிறது. கூண்டுக்குள் இருந்த மனிதர்கள் யார்? அவர்களை கண்டுகளித்தவர்கள் யார்? எந்த காரணத்தினால் அவர்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனவெறி :

இனவெறி :

மனித இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனவெறி தாக்குதல்களின் கொடூரத்தின் உச்சம் தான் இந்த ஹியூமன் ஜூ. காலனியர்கள் அதாவது வெள்ளையர்கள் தங்களை எல்லாரையும் விட உயர்ந்தவர்கள் என்று நினைத்தனர் கருப்பர்களை நினைத்துப் பார்க்க முடியாத அளவில் கொடுமைகளை செய்தார்கள்.

Image Courtesy

கூண்டுக்குள் :

கூண்டுக்குள் :

உள்நாட்டு மக்கள், ஆப்ரிக்க மக்கள் ஆகியோரை அந்த கூண்டுக்குள் அடைத்து வைத்தனர். மிருகக்காட்சி சாலையில் விலங்குகளை அடைத்து வைத்திருப்பார்களே அதே போல மனித வரலாற்றில் நடைப்பெற்ற மிகக்கொடூரமான சம்பவமாக இந்த சம்பவம் சித்தரிக்கப்படுகிறது.

Image Courtesy

என்ன செய்வார்கள் :

என்ன செய்வார்கள் :

கூண்டுக்குள் இருக்கும் மனிதர்கள் தங்களது பாரம்பரிய உடையில் கம்பிகளுக்கு உள்ளே தங்களது அன்றாட வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். அவர்களை கூண்டுக்கு வெளியிலிருந்து ஐரோப்பியர்கள் வேடிக்கை பார்ப்பார்களாம்.

Image Courtesy

வெளிநாடுகள் :

வெளிநாடுகள் :

சில நேரங்களில் இந்த கூண்டிற்குள் மனிதர்களுடன் விலங்குகளையும் அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த ஜூவைக் காண ஃபிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் இன்னபிற நாடுகளிலிருந்து எல்லாம் மக்கள் வந்திருக்கிறார்கள்.

Image Courtesy

18 மில்லியன் :

18 மில்லியன் :

இது பெரும் வரவேற்பை பெற்றது. வெள்ளையர்கள் இந்த மனித மிருககாட்சி சாலையை பார்க்க ஏராளமானோர் குவிந்தனர். 1889 ஆம் ஆண்டில் மட்டும் பதினெட்டு மில்லியன் மக்கள் வந்து பார்வையிட்டிருக்கிறார்கள். அவர்கள் பார்வையிட சுமார் நானூறு கறுப்பின மக்களை கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள்.

கூண்டுக்குள் இருப்பவர்கள் பெரும்பாலும் நிர்வாணமாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

Image Courtesy

1800களில்

1800களில்

ஐரோப்பாவில் 1800 துவக்கம் முதல் 1900 மத்தி வரையில் இந்த மனித மிருககாட்சி சாலை நடைமுறையில் இருந்திருக்கிறது. அந்த மக்களையும், அவர்களின் வாழ்க்கை முறை,அவர்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை கூண்டுக்கு வெளியே இருந்து பார்த்திருக்கிறார்கள்.

Image Courtesy

ஐந்து குழந்தைகள் :

ஐந்து குழந்தைகள் :

1934 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி கனடாவின் ஓண்ட்ரியோ மாகாணத்திற்கு அருகில் இருக்கும் கோர்பில் என்ற கிராமத்தில் வசிக்கும் எல்ஜிரே டியோனி என்பவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தை பிறந்தது. உலகிலேயே முதன் முதலாக ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள் என்று அவர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.

குறை பிரசவத்தில் பிறந்தாலும் ஐந்து குழந்தைகளுமே முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய செய்தி பரவியதும் மக்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு கனடாவில் இருக்கும் பெற்றோரிடமிருந்து பிரித்து குழந்தைகளுக்கு நல்ல உணவும், மருத்துவ வசதியும் தருகிறோம் என்று சொல்லி இந்த ஹுயூமன் ஜூவுக்கு கொண்டுவந்து விட்டார்கள்.

Image Courtesy

கண்காட்சி :

கண்காட்சி :

கைக்குழந்தையாக எடுத்துவந்தவர்கள் குழந்தைகளுக்கு ஒன்பது வயதாகும் வரை அங்கேயே வைத்திருந்தார்கள். முதலில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் கண்ணாடி வழியாக குழந்தையை காட்டுவார்கள் அதன் பின்னர் பிறரைப் போலவே இவர்களையும் கூண்டுக்குள் அடைத்தார்கள்.

இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து விளையாடுவது பேசுவதை மக்கள் கூண்டுக்கு வெளியே இருந்து பார்ப்பார்கள்.

Image Courtesy

பெண்கள் :

பெண்கள் :

இங்கு பின்புறம் பிட்டத்தின் அளவு பெரிதாக இருப்பவர்கள்,உதடுகள் நீண்டு இருப்பவர்களை இங்கே கொண்டு வந்து அடைத்தார்கள். இவர்களுக்கு மரபணு காரணமாக steatopygia எனப்படக்கூடிய இந்த குறைபாடு இருப்பதாக பின்னாட்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த அடையாளங்களுடன் இருப்பவர்களை எல்லாம் தேடிக் கொண்டு வந்து இங்கே சேர்க்க மக்கள் கூட்டம் வரிசை வரிசையாய் வந்து பார்த்துச் சென்றார்கள்.

Image Courtesy

20 வயது சாரா :

20 வயது சாரா :

இவர்களில் 20 வயதுடைய சாரா தான் இந்த கண்காட்சியில் ஹைலைட்டாக பார்க்கப்பட்டார். சாராவின் எலும்புக்கூடு, புகைப்படம்,மூளை, சாராவின் பாலியல் உறுப்புகள் ஆகியவற்றையும் கூட கண்காசிக்காக வைத்திருக்கிறார்கள்.

இது பாரிசில் இருக்கிற மியூசியம் ஆஃப் மேன்கைண்ட் என்னும் இடத்தில் தற்போதும் இருக்கிறது.

Image Courtesy

5000 மக்கள் :

5000 மக்கள் :

இந்த மனிதகாட்சி சாலை அமைக்க முப்பத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடத்தை இழந்திருக்கிறார்கள். தங்கள் பிறந்த வாழ்ந்த இடத்திற்கு வந்த ஐரோப்பியர்களின் வருகைக்கு பின்னர் குடும்பம் குடும்பமாக மொத்த கூட்டமுமே இடம்பெயர்கிறது.

Image Courtesy

மகிழ்ச்சி :

மகிழ்ச்சி :

இந்த கூட்டத்தினரில் உயரம் குறைவாக இருக்கும் மக்களை கண்காட்சியில் நடனமாட வர்புறுத்துவார்களாம்.வருகிற மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் அவர்கள் எவ்வளவு நேரம் சொன்னாலும் ஆடி வந்தவர்களை மகிழ்விக்க வேண்டும். அந்த மக்கள் ஏதேனும் கொண்டாட்டத்தின் போது அல்லது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த,சோகத்தை வெளிப்படுத்த மேற்கொண்ட விஷயங்களை எல்லாம் வந்திருந்தவர்களை கவர்வதற்காக தொடர்ந்து செய்ய வர்புறுத்தி செய்ய வைத்திருக்கிறார்கள்.

Image Courtesy

ஓட்டா பெங்கா :

ஓட்டா பெங்கா :

ஃபிலிப்போனோ என்ற இடத்திலிருந்து ஒட்டா பெங்கா என்ற இந்த பழங்குடியை யானையை பராமரிக்க வேண்டும் என்று சொல்லி அழைத்து வருகிறார்கள். ஆனால் இவரை குரங்கு இருக்கும் கூண்டிற்குள் அடைக்கிறார்கள். இந்த குரங்கை தான் பராமரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அதன் பிறகு தான் இந்த குரங்கும் நானும் ஒன்று என்று சொல்லி தான் இங்கு அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்கிறார்.

கூண்டுக்கு வெளியே வயது 23 , உயரம் 4 அடி 11இன்ச் எடை 103பவுண்ட். கண்டுபிடிக்கப்பட்ட இடம் காசாய் ஆறு , காங்கொ,ஆப்ரிகா மத்தி , கண்டுபிடித்தவர் - சாமுவேல் பி வெர்னர் என ஒட்ட பெங்காவின் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

இதயம் :

இதயம் :

ஒரு கட்டத்தில் அந்த மனிதகாட்சி சாலையிலிருந்து வெளியில் அனுப்பப்பட்டார். பல ஆண்டுகளாக தனியாக கூண்டுக்குள் அடைத்து வைத்ததால் மனச்சிதைவுக்கு ஆளாகியிருந்தார். அவர் பிறந்த இடமான ஆப்ரிகாவில் சிறிது காலம் வாழ்ந்தார் ஆனால் அங்கு அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பினார் ஆனால் அங்கும் அவரால் வாழ முடியவில்லை. இந்நிலையில் 1916 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

Image Courtesy

இன்றும் தொடர்கிறது :

இன்றும் தொடர்கிறது :

இது எதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாறாக இதனைப் பார்க்காதீர்கள். இன்றும் தொடர்கிறது . இந்தியாவின் அந்தமான் தீவுகளில் வாழுகிற ஜரவா என்ற பழங்குடியின மக்களை இப்படித் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 2012 ஆம் ஆண்டு ஒரு வீடியோ வெளியானது. அதில் சுற்றுலாப்பயணிகளை சஃபாரி ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சுற்றிக் காண்பிக்கிறார்கள்.

அப்படி செல்லும் வழியில் மிருகங்களை மட்டுமல்ல அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களையும் காட்டுகிறார்கள். தங்களை பார்க்க வண்டியில் வரும்போது இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுத்ததை அவர்கள் செய்ய வண்டியில் வந்தவர்கள் ரசிக்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync pulse
  English summary

  Shocking History of Human Zoo

  Shocking History of Human Zoo
  Story first published: Thursday, April 19, 2018, 14:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more