Latest Updates
-
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிய அமெரிக்காவின் ரகசிய ராணுவ இடத்தில் என்ன தான் நடக்கிறது?
அமெரிக்காவின் வான்படையைச் சேர்ந்த ஓர் ரகசிய இடம் தான் ஏரியா 51. அதுகுறித்த பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது அவை குறித்தான தகவல்கள்.
இந்தியாவை விட பல மடங்கு வளர்ச்சியில் முன்னேறிய நாடுகளில் ஒன்று அமெரிக்கா. அமெரிக்கா நம்மை விட மிகவும் நவீனமான தொழில்நுட்பங்க்ள் நிறையவே இருக்கிறது என்பது தெரியும். ஏதேனும் ஒரு காரணத்தில் பிற நாடுகளால் தங்கள் நாடு தாக்கப்பட்டால் தற்காத்துக் கொள்ளவும், எதிர் நாட்டுப் படையினரை பலிவாங்கவும் ரகசிய யுத்தியை வைத்திருக்கிறார்கள்.
அந்த ரகசியங்களில் ஒன்று தான் ஏரியா 51. இது குறித்த ஏராளமான புரளிகள், சர்ச்சைகள் தினம் தினம் கசிந்து கொண்டே தான் இருக்கிறது. ஏரியா 51 குறித்த செய்தி என்று சொன்னாலே அமெரிக்கர்களே பதறியடித்துக் கொண்டு படிக்கிறார்கள். இங்கே உலகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ஏலியன் குறித்தும், டைம் ட்ரவல் குறித்தும் ரகசிய தகவல்கள் அங்கே உறைந்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. உண்மையில் ஏரியா 51 என்றால் என்ன? அப்படி அந்த இடத்தில் என்ன தான் இருக்கிறது அந்த இடம் குறித்த மிகவும் சுவாரஸ்யத் தகவல்கள்.

#1
லாஸ் வேகாஸிலிருந்து 80 மைல் தொலைவில் இருக்கிற நெவேடா என்னும் இடத்தில் தான் ஏரியா 51 என்ற சீக்ரட்டிவ் மில்லிட்ரி டெஸ்டிங் இடம் இருக்கிறது. இந்த இடத்தை க்ரூம் லேக் என்றும் அழைக்கிறார்கள்.
இந்த இடம் மிகவும் ரகசியமாக பாதுகாக்கிறார்கள். இடத்தைச் சுற்றி ஏராளமான சென்சார்கள் இருக்கின்றன. ஒளிகூட ஊடுருவ முடியாத அளவிற்கு அவ்வளவு பாதுகாப்பு அடுக்குகள் இருக்கின்றன.

#2
அமெரிக்க ராணுவனத்தினர் பயன்படுத்தக்கூடிய ஓர் ரகசிய இடம் தான் இது. ஏரியா 51 என்று பெயர் இருப்பதால் அதற்கு முந்தைய இடங்கள் 1 முதல் 50 வரையிலான ரகசியமாக வெவ்வேறு இடங்களில் இருக்கும் என்று எண்ணாதீர்கள்.
நெவேடா நேஷனல் செக்யூரிட்டி சைட். இந்தப் பகுதியில் ஆள் நடமாட்டமே இருக்காது. இங்கே நூறுக்கும் மேற்பட்ட நியூக்ளியர் வெப்பன் சோதனைகள் நடந்திருக்கிறது. இங்கே ஏரியா 51 என்று அழைக்கப்படுவது நெவேடா டெஸ்ட் சைட்டின் ஒர் பகுதி தான்.

#3
தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன. ஜூலை மாதம் 1947 ஆம் தேதி ரோஸ்வெல் டெய்லி ரெக்கார்ட் என்ற பத்திரிக்கை தலைப்புச் செய்தியாக இந்த ஏரியா 51 இடத்தில் பறக்கும் தட்டு ஒன்று தரையிரங்கியது.அமெரிக்க மிலிட்டிரி இந்த அடையாளம் தெரியாத ஒன்றை வெதர் பலூன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றது.

#4
பறக்கும் தட்டா? எங்கிருந்து வந்தது... யார் அனுப்பியிருப்பார்கள் என்று கவனம் முழுவதும் ஏரியா 51 பக்கம் திரும்பியது. அப்போது கான்ஸ்பிரசி தியரிஸ்ட்கள் இது ஏலியன்கள் பயன்படுத்தக்கூடிய ஸ்பேஸ் க்ராஃப்ட் என்றார்கள். கூடவே பெரிய கண்களையுடைய க்ரே ஏலியன் வந்திறங்கியது என்றார்கள்.
தொடர்ந்து அது குறித்த சர்ச்சைகள் எழ ஆரம்பித்தன. இதனைத் தொடர்ந்து 1994 செப்டம்பர் மாதம் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இது சாதரண வெதர் பலூன் கிடையாது. அன்றைக்கு வந்தது அட்டாமிக் மானிடரிங் பலூன். நியூக்ளியர் டெஸ்ட்டிங் மேற்கொண்ட போது நடந்த வெடிவிபத்தை தடுக்கக்கூடியது என்றது.

#5
ராபர்ட் லசார் என்பவர் டிவிக்களில் திடிரென்று பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். அவர் மிகவும் மர்மமான இடம் என்று சொல்லப்படும் S-4 என்ற இடத்தில் தான் பணியாற்றுவதாக தெரிவித்தார். இந்த எஸ்-4 ஏரியா 51 க்கு மிக அருகில் இருக்கிறது.
அங்கே தரையிறங்கும் பறக்கும் தட்டுகளுக்கு ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்ததாக தெரிவித்தார்.

#6
இந்த விஷயம் பரபரப்பை கிளப்ப பெரும் சர்ச்சைகள் வெடித்தது. அதன் பின்னர் ஆராய்ந்த போது லசார் எம் ஐ டி மற்றும் கால்டெக்கில் படித்திருப்பதாகவும் லாஸ் ஆலமோஸில் இருக்கும் தேசிய ஆய்வகத்தில் வேலை பார்த்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அனைத்துமே பொய் என்று நிரூபணமானது.

#7
சில ரகசிய காப்பகங்கள், இடங்கள் என்றால் கூகுல் மேப்பில் கூட அந்த இடம் மறைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஏரியா 51 அப்படி ஒன்றும் மறைக்கப்படவில்லை.
இது பொதுமக்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகும். சுற்றிலும் வேலி அமைத்திருக்கிறார்கள். துப்பாக்கி ஏந்திய போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

#8
அங்கே காவலுக்கு இருப்பவர்களை கேமோ டூயுட்ஸ் என்று தான் அழைக்கிறார்கள். இவர்களிடத்தில் மிகவும் உயரிய தொழில்நுட்பங்கள் நிறைந்த விஷயங்கள் இருக்கும்.
குறிப்பாக மிகத் தொலைவான தூரத்தைக்கூட பார்க்ககூடிய கருவிகள், இருட்டில் பார்க்ககூடிய கருவிகள், ரோடு சென்சார் எல்லாம் இருக்கும்.
கூடவே ரேடியோ சென்சார் கூட இருக்கிறது. அதில் வாய்ஸ் கம்யூனிகேஷனுக்கு பதிலாக வெறும் ஓசைகளைக் கொண்டே தகவல்களை பரிமாறியிருக்கிறார்களாம்.

#9
அதைவிட இன்னொரு சர்ச்சை என்ன தெரியுமா? 1974 ஆம் ஆண்டு We Never Went to the Moon என்ற புத்தகத்தை கான்ஸ்ப்ரைசி தியரிஸ்ட் பில் கேசிங் வெளியிட்டார்.
அதில் அமெரிக்கா சொல்லிக் கொண்டிருப்பது போல நிலவுக்கு மனிதர்கள் செல்லவில்லை. நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நடப்பது போன்ற வீடியோ மற்றும் படங்கள் இந்த ஏரியா 51 என்ற இடத்தில் தான் படமாக்கப்பட்டது என்றார்.

#10
ஆனால் இதில் உண்மையில்லை நிலவுக்குச் சென்று திரும்பியது உண்மை. திரும்பிய ஆறு அப்பல்லோ மிஷனிலிருந்து 842 பவுண்ட் அளவுல்ல நிலவில் இருக்கும் கற்கள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் லைஃப் சப்போர்ட் சிஸ்டம் ஆகியவை நெவேடாவில் இருக்கும் நியூக்ளியர் டெஸ்டிங் சைட்டில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

#11
அதிகாரப்பூர்வமாக இந்த ஏரியா 51 என்பது நெவேடா டெஸ்ட் மற்றும் ட்ரைனிங் ரேஞ்சில் ஒரு பகுதி. இந்த NTTR வான் மற்றும் தரையை ஒருங்கிணைத்த மிகப்பெரிய மிலிட்டிரி ஆப்ரேஷன்களை செய்யக்கூடியது.
2.9 மில்லியன் ஏக்கர் அளவுள்ள மிகப்பெரிய இடத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறார்கள்.

#12
புதுவிதமான ஏர் கிராஃப்ட்கள்,ஹெலிகாப்டர்கள் உட்பட டாப் சீக்ரட் ராணுவ உபகரணங்கள் இங்கே தான் தயாரிக்கப்படுகிறது. யு-2 ஸ்பை ப்ளேன்,அல்ட்ரா ஹை ஆல்டிடியூட் ஏர் கிராஃப்ட் போன்றவை எல்லாம் இங்கே தான் தயாரிக்கப்பட்டது.

#13
எண்ணற்ற சர்ச்சைகள் ஏரியா 51 சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. இதன் அடிப்படை எங்கிருந்து வருகிறது தெரியுமா? அரசாங்கம் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்கிறது என்பதைத் தான். பிற நாட்டினர் ஏன் தங்கள் மக்களே அரசிடம் எவ்வளவு பவர் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டாம் என்றே நினைக்கிறார்கள்.

#14
அந்த இடத்திற்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை என்றாலும் முன்னால் மற்றும் பின் பக்க கேட் வழியாக செல்லலாம். ஆனால் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. அப்படி அத்து மீறி உள்ளே நுழைபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
நெவேடா என்ற இடத்தை இணையத்தில் தேடினால் அங்கே மனிதர்களின் எண்ணிக்கை 98 என்று இருக்கிறது.

#15
இந்த ஏரியா 51 குறித்த அமெரிக்கர்களிடையே எவ்வளவு பெரிய தாக்கம் இருக்கிறது என்பதன் சாட்சியாக இதை கொள்ளலாம். 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஹிலாரி கிளண்டனின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானதாக ஏரியா 51 குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.



Click it and Unblock the Notifications











