Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
அலுவலகத்தில் இருந்து விசித்திரமான பொருட்களை திருடிய ஊழியர்கள் - வாக்குமூலங்கள்!
அலுவலகத்தில் இருந்து விசித்திரமான பொருட்களை திருடிய ஊழியர்கள் - வாக்குமூலங்கள்!
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே எழுதி, பாடிட்டு போயிட்டாங்க. திருட்டுங்கிறது பெருசோ, சிறுசோ... அது திருட்டு, திருட்டு தான். சிலருக்கு திருட்டு தொழில், சிலருக்கு அது ஹாபி, சிலருக்கு அது விளையாட்டு, சிலருக்கு அதுவொரு அடிக்ஷன்னு கூட சொல்லலாம்.

திருட்டுல எப்படி தொழில், ஹாபி, விளையாட்டு, அடிக்ஷனு பார்க்க முடியும்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம். வீடு புகுந்து பணம், நகை திருடுறது தொழில், பணக்காரங்க ஏழை வயித்துல அடிச்சு பிடுங்குறது ஹாபி, சின்ன பசங்க ஸ்கூல்ல திருடுறது விளையாட்டு, அது தப்புன்னு பெருசா அவங்களுக்கே தெரியாது.
ஆனா, நாலு கழுத வயசாகியும், சின்ன சின்ன பொருள, யாருக்கும் தெரியாம திருடுறது அடிக்ஷன். உதாரணமா சொல்லனும்னா ஹைக்கூ படத்துல முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த் திருடுவார்ல அந்த மாதிரி. இப்படியான அடிக்ஷன் இருக்கவங்க... அவங்க வேலை பாக்குற இடத்துல இருந்து என்னென்ன பொருள் எல்லாம் திருடினாங்கனு சொல்லியிருக்காங்க.
வாங்க! அப்படி என்னெல்லாம் அவங்க திருடியிருக்காங்கனு பார்க்கலாம்...

#1
கண்ணாடி துடைக்க உதவும் கிளீனர் நேரடியாக திருடாமல், நான் எடுத்து சென்ற வாட்டர் பாட்டிலில் ஊற்றி வைத்து வீட்டுக்கு எடுத்து வரலாம் என்று கருதினேன். ஆனால், வேலை முடிந்து வீடு திரும்பும் அவசரத்தில் அதை என் மேஜையிலேயே வைத்து விட்டேன். இது மறுநாள் காலை நான் தூங்கி எழுந்த போது தான் உணர்ந்தேன். பிறகு, அவசர அவசரமாக பிறர் வரும் முன் ஆபீஸ் விரைந்து அதை எடுத்து ஒளித்து வைத்தேன்.

#2
ஒருமுறை அலுவலக கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது, கொண்டாட்டம் முடிந்து அனைவரும் விடுமுறை நாட்களை கொண்டாட வீடு திரும்பும் நேரம் பார்த்து, ஆபீஸில் வாங்கி வைத்திருந்த கிறிஸ்மஸ் மரத்தையே அபேஸ் செய்துக் கொண்டு வந்துவிட்டேன்.

#3
எங்கள் அலுவலகத்தில் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் வாங்கி வைப்பது வழக்கம். எப்போதெல்லாம் எனக்கு பிடித்த ஸ்நாக்ஸ் வாங்கி வைக்கிறார்களோ, அப்போதெல்லாம் பாக்கெட்டுடன் அதை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவேன்.

#4
எனக்கு மீன் ரொம்ப பிடிக்கும். அதனால, ஆபீஸ்ல அழகுக்காக வாங்கி வெச்சிருந்த காஸ்ட்லி மீன் ஒன்ன திருடிட்டு வந்துட்டேன். இப்போ நான் வீட்டுல வளர்க்குற பூனையும் அந்த மீனும் க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ் ஆயிட்டாங்கன்னா பார்த்துக்கங்களேன்!

#5
எங்க ஆபீஸ்ல ஸ்டேஷனரி பொருள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கும். சாதாரண பேனா வாங்கி வைக்கிறதுக்கு பதிலா ஃபேன்சி பேனாவா வாங்கி வைப்பாங்க. அதனால, அடிக்கடி ஏதாவது பேனாவ எடுத்துட்டு வந்திடுவேன்.

#6
மயோனஸ்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, அத எங்க வாங்கணும்னு தெரியல. அதனால, ஆபீஸ்ல வாங்கி வைக்கிறே மயோனஸ் அடிக்கடி வீட்டுக்கு எடுத்துட்டு வந்திடுவேன்.

#7
ஒருமுறை ஆபீஸ்ல எனக்கும், மேனேஜர்கும் செம்ம சண்டை. எப்ப எனக்கு ஆபீஸ்ல டென்ஷன் ஆனாலும், எதையாவது ஆட்டையப் போட்டுட்டு வந்திடுவேன். அன்னிக்கின்னு பார்த்து எதுவுமே கைக்கு கிடைக்கல. அதனால டாய்லேட் பேப்பர திருடிட்டு வந்துட்டேன்.

#8
எங்க ஆபீஸ்ல டீ ரொம்ப ஸ்பெஷல். வேர்ல்டு லெவல்ல ஃபேமஸான டீ எல்லாம் கூட வாங்கி வைப்பாங்க. அதுல எனக்கு பிடிச்ச பிராண்ட் வரும் போது எடுத்துட்டு வந்திடுவேன். யாராச்சும் அது எங்கன்னு கேட்டா தீர்ந்திருக்கும், இல்ல அது இந்த தடவ டெலிவரி ஆயிருக்காதுனு பொய் சொல்லிடுவேன்.

#9
ஒரு தடவ காஸ்ட்லி மெமரி கார்டு ஒன்னு ஆபீஸ்ல வாங்கி இருந்தாங்க. அத எடுத்துட்டு வந்துட்டேன். இன்னைக்கி வரைக்கும் அது வாங்குனதும் யாருக்கும் தெரியாது, காணாம போனதும் யாருக்கும் தெரியாது.

#10
எதாச்சும் செலிப்ரேட் பண்ணா, நாங்க குட்டி, குட்டி லைட், கலர் பேப்பர்னு நிறையா வாங்குவோம். அந்த செலிபரேஷன் முடிஞ்சதும் எல்லாரும் அத மறந்திடுவாங்க. நான் அந்த செலிபரேஷன் முடிஞ்சதும், அத எல்லாம் சுட்டுட்டு வந்திடுவேன்.

#11
ஸ்டிக்கர்ஸ், ஊசி, பேனா, கம், டேப், ஸ்டாப்ளர் பின்னுன்னு நான் ஆபீஸ்ல இருந்து எடுத்துட்டு வந்த பொருட்கள் தன் என் வீட்டுல இருக்க எல்லா ஸ்டேஷனரி பொருட்களும். இதுவரைக்கும் காசுக் கொடுத்து எதுவும் வாங்குனதே இல்ல.

#12
கை கழுவிட்டு துடைக்க டிஷ்யூ பேப்பர் வாங்கி வெச்சிருப்பாங்க. ஆனா, நான் அத சுட்டு என் பர்ஸ்ல வெச்சு எடுத்துட்டு வந்திடுவேன்.

#13
எனக்கு ஆபீஸ்ல இருந்து பொருள் எதுவும் திருடிட்டு வீட்டுக்கு எடுத்துட்டு வரது எல்லாம் பிடிக்காது. ஆனா, ஒருத்தரோட டெஸ்க்ல இருந்து திருடி, வேற ஒருத்தர் டெஸ்க்ல வைக்கிறது ரொம்ப பிடிக்கும். அது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு.

#14
ஒரு நாள் ஆபீஸ்ல பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து மேனேஜர் வீட்டுல செம்ம பார்ட்டி. அன்னிக்கி நான் ஒரு ஏடாகூடாமான பொருள சுட்டுட்டு வந்துட்டேன். வெளிய சொன்னா கூச்சமா தான் இருக்கும். ஏன் எல்லாரும் என்ன ரொம்ப மோசமானவனா கூட பார்ப்பாங்க. ஆமா! நான் திருடிட்டு வந்தது, என் மேனேஜர் வைப்போட இன்னர் வியர்ஸ்.

#15
எங்க கூட வர்க் பண்ணிட்டு இருந்த ஒரு நபர் நிறையா டார்ச்சர் பண்ணிட்டு இருந்ததால வேலையவிட்டு எடுத்துட்டாங்க. அவங்க ரொம்ப டேலண்டுனு நெனச்சுட்டு எங்க பொருட்கள் எல்லாம் திருட்டிட்டு போயிட்டாங்க.
ஆனா, பாவம் அவங்க ஆபீஸ் கம்ப்யூட்டர்ல அவங்க சோசியல் மீடியா அக்கவுன்ட் எல்லாம் லாக்-அவுட் பண்ணாம போயிட்டாங்க. அப்பறம் அத வெச்சு அவங்கள கிழிச்சு எடுத்துட்டோம்.



Click it and Unblock the Notifications