உங்களது ராசிப்படி உங்களுக்கு எதில் பயம் அதிகம் தெரியுமா?

Posted By: Staff
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் பிடிக்காத விஷயங்கள் என்று நீண்ட பட்டியலே இருக்கும். அவர்கள் வாழுகின்ற சூழலுக்கு ஏற்ப அந்த பட்டியலின் அளவுகள் கூடுவதும் குறைவதும் தொடர்கிறது.

இதே போல நமக்கு இருக்கக்கூடிய இன்னொரு பட்டியல் தான் பயம், இது நாம் பார்த்த விஷயங்கள்,கேட்ட விஷயங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடாக தோன்றினாலும் உங்கள் ஒவ்வொருடைய தனிப்பட்ட குணநலன்களை பொருத்தே உங்களுடைய பயத்தின் தன்மை இருக்கிறது.

இருட்டுல போக பயம், வண்டிய ரொம்ப ஓட்டினா பயம் என நாம் சாதரணமாக கடந்து போகும் பயமாக அல்லாது, உங்களுடைய அன்றாட வாழ்க்கையையே புரட்டிப்போடக்கூடிய பயமாகவும் அது இருக்கக்கூடும். சில நேரங்களில் நம்முடைய பயத்தினால் தான் இதனை நாம் செய்ய மாட்டேன் என்கிறோம், பயத்தினால் தான் இந்த விஷயத்தை துவங்க நமக்கு தயக்கம் இருக்கிறது என்று கூட உங்களுக்கு தெரியாமல் இருந்திடும்.

 Scary things According to your zodiac

உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை குணநலன்களைத் தொடர்ந்து நீங்கள் பயப்படும் விஷயங்களில் மிக முக்கியமான பங்காற்றுவது கிரகநிலைகள். ஆம், உங்களுடைய கிரக நிலைகளின்படி உங்கள் ராசியைக் கொண்டு நீங்கள் எதற்கெல்லாம் பயப்படுவீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம் :

மேஷம் :

இயற்கையாகவே நீங்கள் தலைமைப்பண்பு கொண்டவராக இருப்பீர்கள். எப்போதும் எந்த செயலானாலும் இதயத்திலிருந்து விருப்பப்பட்டு செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிறர் வர்புறுத்துவது, அல்லது காலத்தின் கட்டாயத்தினால் நீங்கள் விருப்பமில்லாத துறையில் ஈடுப்பட்டிருந்தாலும் உங்களுடைய முனைப்பினால் அவை மாறிடும்.

போட்டிக்கு எப்போதும் நீங்கள் பயப்படமாட்டீர்கள்.ஆனால் இதில் நமக்கு வெற்றியா தோல்வியா என்பதில் பயமிருக்கும், பெரும் குழப்பங்கள் நீடிக்கும். போட்டி என்கிற விஷயத்தை களத்தில் நின்று ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுவதாகவும் கொள்ளலாம். அல்லது வீட்டிற்குள்,அலுவலகத்தில் ஏன் உங்களை நீங்களே போட்டி போடுவதைக் கூட இது உணர்த்துகிறது.

ரிஷபம் :

ரிஷபம் :

எப்போதும் அமைதியை விரும்பும் நபர்களாக இருப்பீர்கள். அட்ஜெஸ்ட்மெண்ட் உங்களிடம் சிறிதளவும் இருக்காது. எப்போதும் ஒரு கம்ஃபர்ட் ஜோனுக்குள் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு உங்களிடம் இருக்கிறது. திட்டமிடப்பட்டு, அதன் படி தான் எல்லாமே நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

திடீர் மாற்றங்களை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது, அப்படிப்பட்ட மாற்றங்களினால் நீங்கள் நிறைய தடுமாறுவீர்கள். அதனாலேயே அதனை ஏற்றுக் கொள்ளத் தயங்குவீர்கள். அப்படி பல மாற்றங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள தயங்குவதினால் தான் வாழ்க்கையில் நீங்கள் எட்ட நினைத்த இடத்தை இன்னும் அடையாமல் இருக்கிறீர்கள்.

மிதுனம் :

மிதுனம் :

கற்றுக்கொள்ள, புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். பிறருடனான நட்புணர்வு மேம்படுத்த வேண்டும் என்று நினைப்பீர்கள் ஆனால் உங்களுடைய உள்ளுணர்வு அதனைச் செய்ய விடாது. அதற்கு காரணம் பிறர் மீதான உங்களுக்கு இருக்கும் பயமே.... இதனை இன்னொரு வகையாகவும் குறிப்பிடலாம்.

தாழ்வு மனப்பான்மை. எனக்கெல்லாம் அப்படியில்லையே என்று உள்ளூர நீங்கள் நினைத்தாலும், சற்று ஆழமாக சிந்தித்துப் பாருங்கள் உங்களது தயக்கத்தின் ஆணி வேர் எங்கேயிருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தோனானால் அது உங்களது தாழ்வு மனப்பான்மையை கைகாட்டிடும்.

கடகம் :

கடகம் :

உறவினர்கள் நண்பர்கள் சூல கூட்டமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்களுக்கான இடம் என்று வரும் போது மட்டும் அங்கே கம்ஃபர்டபிளாக இருப்பீர்கள். பகிர்ந்தளிக்கும் குணம் சற்று குறைவு தான்.

உங்களுக்கு எதிரி பயம் எல்லாமே நீங்களே தான், ஆம் உங்களது எண்ணங்களே உங்களுக்கு பயத்தை கொடுக்கும். நடக்காத ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டோ அல்லது அப்படி நடந்து விட்டால், காலையில் டூ வீலரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்து நடந்து விட்டால், அலுவலகம் சென்ற கணவர் திரும்பி வரவில்லை என்றால், பள்ளி சென்ற குழந்தையை யாராவது கடத்திச் சென்று விட்டாள்.... இப்படி முழுக்க முழுக்க நெகட்டிவ் சிந்தனைகளின் உங்களது பயம் இரட்டிப்பாகும்.

சிம்மம் :

சிம்மம் :

தைரியசாலியாகவும், தன்னம்பிக்கையாளராகவும் உங்களை காட்டிக் கொள்ள பயங்கர பிரயத்தனம் படுவீர்கள். உங்களை கொண்டாட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருப்பீர்கள்.

அதனால் நிறைய சங்கடங்களை சந்திக்க நேரிடும். என்னை விட்டுச் சென்றுவிட்டால் என்று அடிக்கடி நினைப்பீர்கள் யதார்த்தமாக நடப்பதைக் கூட திட்டமிட்டு நடந்ததாக கற்பனை செய்து கொள்வீர்கள். தனிமையில் இருப்பதை அதிகம் வெறுப்பீர்கள், காரணம் அது உங்களுக்கு பயம்.

கன்னி :

கன்னி :

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடிப்பீர்கள், எல்லாம் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு உங்களிடத்தில் இருக்கும். எப்போதும் எதாவது ஒரு வேலையை செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும்.

சின்ன சின்ன விஷயங்களில் கூட அதிக கவனம் செலுத்துவீர்கள். இப்படி உழைக்காவிட்டாள் நம் இலக்கினை அடையமுடியாது என்கிற எண்ணத்தையும் கொண்டிருப்பீர்கள். நேரம் குறித்த பயம் உங்களுக்கு அதிகமிருக்கும், அதனாலேயே காத்திருப்பது,பொழுது போக்குவது ஆகியவை உங்களுக்கு பிடிக்காது.

துலாம் :

துலாம் :

கூட்டத்தை,குழுவை வழிநடத்திச் செல்வதில் நீங்கள் கில்லாடி.தங்களைப் பற்றிய சிந்தனையைக் காட்டிலும் பிறரைப் பற்றிய சிந்தனைகள் அதிகமிருக்கும். சமூகத்திற்கு என்று அதிகம் மெனக்கட முன் வருவீர்கள்.

உங்களுக்கு இருக்கக்கூடிய ஒரே பயம் தனிமை. ஆம், தனியாக இருக்க பயப்படுவீர்கள் அதனை மறைக்கத் தான் எப்போதும் உங்களைச் சுற்றி கூட்டமாக ஆட்களையும், சிந்தனைகளை நிரப்பிக் கொள்வது உங்களுடைய பாணியாக இருக்கிறது. தனிமையுணர்வு மனதளவில் தோன்றினாலும் உங்களால் தாக்குபிடிக்க முடியாது அதிக பயம் கொள்வீர்கள்.

விருச்சிகம் :

விருச்சிகம் :

எதையும் எமோஷனலாக பார்க்கக்கூடிய நபர் நீங்கள். எப்போதும் ஒரு அங்கீகாரத்திற்காகவும், அன்பிற்காகவும் ஏங்கக்கூடிய நபராக இருப்பீர்கள்.உங்களுக்கு இருக்கக்கூடிய பயமே ஏமாற்றம் தான்.

யாராவது என்னை ஏமாற்றிவிடுவார்களா? நண்பன்,மனைவி,உடன் பிறப்புகள் என வகை தொகையில்லாமல் அனைவரிடத்திலும் இந்த சந்தேகம் மேலோங்கும். இவற்றைத் தாண்டி சாதரணமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது யாராவது என் உடமைகளை பறித்துக் கொண்டால், எனக்கான இடத்தை தட்டி பறித்துக் கொண்டால் என உங்களது சந்தேக பயம் உங்களை அமைதியான வாழ்க்கையை எதிர்கொள்ள விடாது.

தனுசு :

தனுசு :

எப்போதும் சுறுசுறுப்பாக உங்களது ஓட்டம் நடந்து கொண்டிருக்கும், வாழ்க்கைப் பற்றிய பெரிய எதிர்ப்பார்ப்பு உங்களிடத்தில் இருக்காது.ஆனால் தொடர்ந்து உற்சாகமாக செயல்படுவீர்கள்.

உங்களுக்கு இருக்ககூடிய ஒரே பயம் திட்டமிடலும், கட்டளைகளும். திட்டமிட்டால் இதனை நாம் நிறைவேற்றுவோமா என்கிற சந்தேகம் எழும்.அதோடு பிறர் உங்களை கட்டுப்படுத்துவதை எப்போதும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

மகரம் :

மகரம் :

வெற்றியை நோக்கிய உங்கள் பயணம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். செய்வது சரிதானா என்கிற தயக்கமிருக்கும் அதனால் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப நினைத்துப் பார்ப்பதுண்டு.

உங்களுடைய மிக முக்கியமான பயம் உங்களுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்வதிலேயே இருக்கிறது. வேலையில் உங்களுக்கு ஸ்திரத்தன்மை இருந்தாலும், உங்களின் இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய பயம் காரணமாக எங்கே வேலையிழந்து விடுவேனோ என்று விழுந்து விழுந்து தீவிரமாக பணியாற்றுவீர்கள்.

 கும்பம் :

கும்பம் :

அமைதியை அதிகம் விரும்புவீர்கள், அதனையே நாடிச் செல்வீர்கள். உங்களுச் சுற்றி நல்ல நட்புகளும்,உறவுகளும் இருந்தாலும் உங்களது பயம் காரணமாக அவர்கள் விலகிச் செல்ல நேரிடும்.

இப்போது என்னுடன் இருப்பவர்கள், வாழ்க்கை முழுவதும் உடன் வருவார்களா? என்கிற பயம் உங்களுக்கு இருந்து கொண்டேயிருக்கும். இந்த நட்பு தொடருமா? இந்த உறவு தொடருமா என்கிற சந்தேகமும் உங்களுக்கு இருந்து கொண்டேயிருக்கும்.

மீனம் :

மீனம் :

மிகவும் சென்ஸிடிவ்வான நபர் நீங்கள். சட்டென உணர்சிவசப்படக்கூடிய நபராக நீக்கள் இருப்பீர்கள் பிறருடைய வலிகளையும், வேதனைகளையும் உங்களுக்கே நடந்ததாக கற்பனை செய்து வீணாக உங்களை நீங்களே வருத்திக் கொள்வீர்கள்.

எல்லாம் உங்களது இஷ்டப்படி நடக்க வேண்டும் என்றே தான் விரும்புவீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய ஒரே பயம் என்ன தெரியுமா? பிறர் என்னை கட்டாயப்படுத்துவார்களோ என்கிற பயம் தான்.

எப்போதும் ஒரு ஃபேண்ட்டசி உலகத்தில், உங்களது இஸ்டத்திற்கு மிதந்து கொண்டிருக்கவே விரும்பீர்கள். உங்களது அந்த சுதந்திரத்தில் யாராவது தலையிடுவாரக்ளோ என்கிற பயமும் உங்களுக்கு அதிகமிருக்கும். அதனை மூடி மறைக்க பல முகமுடிகளையும் அணிந்து கொள்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Scary things According to Your Zodiac

Scary things According to your zodiac