Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
ஏழரை, அஷ்டம, ஜென்ம சனியின் வக்கிரம் தாக்காமலிருக்க இந்த பரிகாரத்த மட்டும் செய்ங்க...
சனி கிரகத்தின் பார்வையில் இருந்து தப்பிக்கவும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி இங்கே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
நான்கு மாதம், 19 நாட்கள் வக்கிர கதியில் இருந்த சனி தற்போது வக்கிர நிவர்த்தி பெறுகிறது. இந்த மாற்றம் பல ராசிகளுக்கு நல்ல நன்மைகளை வழங்க உள்ளது. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
இந்த மாற்றம் பல ராசிகளுக்கு நல்ல நன்மைகளை வழங்க உள்ளது. ஒவ்வொரு ராசியினருக்கும் அவரவர் கிரகநிலைகளுக்கு ஏற்ப, வெவ்வேறு பரிகாரங்கள் செய்ய வேண்டும்.

மேஷம் - 21 மார்ச் - 20 ஏப்ரல்
மேஷ ராசியினருக்கு இந்த சனி வக்கிர நிவர்த்தி காலம் நன்மையைச் செய்யும். வேலை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்திருந்த பெரிய மற்றும் நல்ல மாற்றம் விரைவில் உங்களுக்கு நடக்கும். நீண்ட நாட்களாக முடிவு பெறாமல் இருந்த வேலைகள் உடனே முடிந்துவிடும். உங்கள் எல்லா விதமான நிதி மற்றும் பொருளாதார பிரச்சனைகளும் தீர்ந்து விடும். உங்கள் கடின உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

ரிஷபம் - 21 ஏப்ரல் - 21 மே
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது உங்களுக்கு தீர்வு கிடைக்கும். நீங்கள் கடனாக கொடுத்த பணம் உங்களைத் தேடி வரும். உங்கள் வேலை இடத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். உங்கள் குடும்பம் மற்றும் உறவுகளிடம் இருந்து அதிக அன்பு உங்களுக்குக் கிடைக்கும். வரும் வாரங்களில் நீங்கள் தொட்டது அனைத்தும் உங்களுக்கு வெற்றியாக அமையும்.

மிதுனம் - 22 மே - 21 ஜூன்
மிதுன ராசியினருக்கு வரும் வாரங்கள் இன்பமும் துன்பமும் சேர்ந்த கலவையாக இருக்கும். திருமண வாழ்க்கையில் நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும். உங்கள் வாழ்க்கை துணை மிகப் பெரிய வெற்றிப் பெறுவார் . ஆனால், பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை. நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் சில சலசலப்பு உண்டாகலாம். கூடுமான வரையில் விவாதங்களில் ஈடுபடாமல் இருக்கலாம்.

கடகம் - 22 ஜூன் - 22 ஜூலை
கடக ராசியினர் வரும் வாரங்களில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். இதுவரை உங்கள் வேலையில் இருந்து வந்த பாதிப்புகள் முற்றிலும் நீங்கும். நீங்கள் வரும் வாரங்களில் மிகுந்த உற்சாகமாய் உணர்வீர்கள். உங்கள் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களை விட அதிக பலம் உள்ளவர்களாக மாறுவீர்கள். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வழக்கு தொடர்பான விஷயங்களை கவனமாக கையாளுவது நல்லது.

சிம்மம் - 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
இந்த காலகட்டத்தில் உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளைக் கேட்க நேரலாம். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் முடிவுகளில் அடுத்தவரின் ஆலோசனையைக் கேட்க வேண்டாம். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் தனிச்சையாக முடிவெடுங்கள். மாணவர்களுக்கு நன்மையைத் தருவதாக இருக்கிறது இந்த காலகட்டம். ஒட்டுமொத்தமாக, சிம்ம ராசியினருக்கு நன்மை மற்றும் தீமையின் கலவையாக அமைகிறது இந்த சனி வக்கிர நிவர்த்தி காலம்.

கன்னி - 22 ஆகஸ்ட் - 23 செப்டம்பர்
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் வசதி மற்றும் சௌகரியம் அதிகமாகும் நேரம் இது. உங்கள் எதிரிகளோடு போராடி வெற்றியைப் பெறுவீர்கள். நீங்கள் கடினமாக உழைத்து வெற்றிப் பெற வேண்டும். உங்கள் மேல் இருக்கும் அதீத நம்பிக்கையை தவிர்க்கவும். ஆரோக்கியம் தொடர்பான பெரிய பாதிப்புகள் இருந்தால் அவற்றில் இருந்து மீண்டு வரக் கூடும். மன அமைதி கிடைக்கும் காலமாக இது உங்களுக்கு அமையும்.

துலாம் : 24 செப்டம்பர் - 23 அக்டோபர்
சனி வக்கிர நிவர்த்தி பெறும் காலம் துலா ராசியினருக்கு நன்மையைச் செய்யும் காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்கள் வேலை இடத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு நீங்களே ஆச்சர்யப்படும் வகையில் நன்மைகள் கிடைக்கும். ஆனந்தமும் அமைதியும் உங்கள் இல்லம் தேடி வரும் இனி வரும் காலங்களில்... உங்கள் எல்லா திட்டங்களும் வெற்றி பெரும். இனி வரும் அடுத்த சில வாரங்கள் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்.

விருச்சிகம் : 24 அக்டோபர் - 22 நவம்பர்
நேர்மறை எண்ணத்துடன் வரும் வாரங்களில் மிகக் கடினமாக உழைப்பீர்கள். உங்கள் உழைப்பிற்கேற்ற புகழைப் பெறுவீர்கள். கடந்த சில வாரங்களாக நீங்கள் மேற்கொண்ட கடின உழைப்பிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான லாபமும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு நன்மையைத் தரும் சில பிரயாணங்களை மேற்கொள்ளுவீர்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் பதட்டப்படாமல், நிதானமாகவும் பொறுமையாகவும் இருந்து எல்லா வேலைகளையும் செய்வது அவசியம்.

தனுசு - 23 நவம்பர் - 22 டிசம்பர்
சனி தனுசு ராசியில் சஞ்சாரம் செய்வதால், இனி உங்களுக்கு நல்ல காலம் தான். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஆனால் வேலை இடத்தில் சில பிரச்சனைகள் தலை தூக்கும். நீங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டி வரும். காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும்.

மகரம் - 23 டிசம்பர் - 20 ஜனவரி
உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். நீங்கள் முன்பு செய்த முதலீடுகளில் பொருளாதார ரீதியாக நன்மையைப் பெறுவீர்கள். உங்கள் எதிரிகள் உங்கள் வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்க நினைக்கலாம் . கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது மிகவும் அவசியம். வரும் காலங்களில் அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் வேலையில் முழு கவனத்துடம் இருந்து உங்கள் எதிரிகளை வெற்றி கொள்ள விடாமல் செய்வது மட்டுமே. மேலும் ஜாக்கிரதையுடன் இருந்து செயல் பட வேண்டும்.

கும்பம் - 21 ஜனவரி - 19 பிப்ரவரி
சனியின் வக்கிர நிவர்த்தி உங்கள் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். பணம் தொடர்பான சிக்கல்களில் இருந்து விடுபடலாம். அதிக பணம் சம்பாதிக்கவும், செல்வ வளம் பெறவும் ,சில வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் வேலை இடத்தில நல்ல முன்னேற்றம் பெற வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம் - 20 பிப்ரவரி - 20 மார்ச்
சனியின் வக்கிர நிவர்த்தி காலம் உங்களுக்கு ஒரு கலவையான காலம். வேலை தொடர்பான அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. பொறுமையை கடைபிடிப்பது அவசியம். திருமண வாழ்க்கை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது.



Click it and Unblock the Notifications