For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  2 நிமிச்தத்துல உலகத்தின் இன்னொரு முகத்த பார்க்கனுமா? இத பாருங்க!

  By Staff
  |

  நம் உலகம் முற்றிலும் அற்புதங்களும் அழகும் நிறைந்து தான் இருந்தது. இன்னும் நாம் காணாத, அறியாத அற்புதங்களும், அழகிய காட்சிகளும் எண்ணற்ற வகையில் குவிந்து கிடக்கின்றன. நாம் தான் அவற்றை எல்லாம் பார்க்க முயலாமல் ஐந்தரை அங்குல திரைக்குள் சிறைப்பட்டு கிடக்கிறோம். வெகுசிலர, இதுபோன்ற சிறைகளை உடைத்து தங்கள் சிறகுகள் கொண்டு பறந்து பறந்து விரிந்து கிடக்கும் உலகை ரசித்து மகிழ்கிறார்கள்.

  உலகை ரசிக்க மனிதர்களுடன் இரண்டு கண்களுடன், மூன்றாவதாக ஒரு கண்ணும் வேண்டும். அதுதான் கேமரா. கெமிக்கல் பூச்சு வேலைகள் இல்லாமல், இயற்கையை பன்மடங்கு அழகுப்படுத்தி காண்பிக்கும் கருவி. ஒவ்வொரு புகைப்படக் கலைஞர்களும் வருங்காலத்திற்கு இந்த உலகம் எப்படி இருந்தது என்ற பதிவுகளை சேமித்து வைக்கும் ஆத்மாக்கள்.

  அப்படிப்பட்ட ஆத்மாக்களில் ஒருவர் தான் ரிச்சர்ட் சில்வர் (remotesilver.com). இவரது பெற்றோர் சிறிய தவறு செய்துவிட்டார்கள். இவருக்கு பெயர் ரிச்சர்ட் சில்வர் என்பதற்கு பதிலாக கோல்ட் என்று வைத்திருக்க வேண்டும். இவர் ஒரு லேண்ட்ஸ்கேப் போட்டோகிராபர். இதன் மூலமாக உலகெங்கும் பயணித்து பல அதிசயத்தக்க புகைப்படங்களை க்ளிக்கி தள்ளியுள்ளார் ரிச்சர்ட் சில்வர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

  All Image Credit: ரிச்சர்ட் சில்வர் (remotesilver.com)

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
   சீனப்பெருஞ்சுவர்!

  சீனப்பெருஞ்சுவர்!

  மங்கோலியா மற்றும் மஞ்சூரியாவில் இருந்து ஆறாவது நூற்றாண்டில் வந்த சியாங்னு படையெடுப்புகளில் இருந்து சீனப் பேரரசை காப்பாற்ற எல்லைப் பகுதியில் கட்டப்பட்ட பாதுகாப்பு அரண் இந்த சீனப்பெருஞ்சுவர்.

  ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவர் ரிச்சர்ட் சில்வரின் லென்ஸ் வழியாக. யாரும் காண கோணத்தில் காண்பதே ரிச்சர்ட் சில்வரின் தனித்துவமாக நிலைத்திருக்கிறது.

  Image Credit: remotesilver.com

  மச்சு பிச்சு!

  மச்சு பிச்சு!

  கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 2400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது மச்சு பிச்சு. இது இன்கா எனும் பேரரசு இயங்கி வந்த பண்டைய நகரமாகும். உருபாம்பா எனும் பள்ளத்தாக்கின் மலை தொடர் ஒன்றில் இருக்கும் கஸ்கோ எனும் நகரில் இருந்து 70-80 கி.மீ தொலைவில் வடமேற்கு திசையில் அமைத்திருக்கிறது இந்த இடம்.

  Image Credit: remotesilver.com

  பொகோட்டா!

  பொகோட்டா!

  கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டா, ஓர் இரவில் விளக்குகளின் ஒளிவெள்ளத்தில்!

  இந்த நகரத்தின் பண்டைய காலத்து பெயர் சான்டா ஃபே டி பொகோட்டா ஆகும். ஆரம்பக் காலத்தில் பொகோட்டா, தொடக்கத்தில் முயிஸ்காகளால் பக்காட்டா என்றும், 1538ல் கொன்சாலோ ஜிமெனஸ் டி குயெசாடா என்பவரால் ஐரோப்பியர் குடியேற்றம் நிறுவப்பட்டது.

  இவர் பிறந்த இடமான சான்டா ஃபே டி உடன் உள்ளூர் பெயரான பக்காட்டா என்பதையும் இணைத்து சான்டா ஃபே டி பக்காட்டா என்று வைத்தனர்.

  Image Credit: remotesilver.com

  அதிகாலை நேரத்தில்...

  அதிகாலை நேரத்தில்...

  ஒரு அதிகாலை நேரத்தில் நகரின் ஒரு மூலையில் சூரியன் உதிப்பதை தனது கேமரா கண்களால் ரிச்சர்ட் சில்வர் எடுத்த படம். புகைப்படங்கள் ஒளியின் விளையாட்டு என்பதற்கான சான்று இது.

  சான்தான்தேர்!

  சான்தான்தேர்!

  ஸ்பெயினில் இருக்கும் ஒரு கடற்கரை நகரம் சான்தான்தேர். இது ஒரு துறைமுக நகராக இயங்கி வருகிறது. இந்த நகரின் ஒட்டும்மொத்த பரப்பளவு 35 சதுர கி.மீ ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து வெறும் 15 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

  Image Credit: remotesilver.com

  கடற்கரை!

  கடற்கரை!

  கடற்கரை அருகே அமைந்திருக்கும் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் வழியாக விரிந்து கிடக்கும் கடலை சிறைப் பிடித்துள்ளார் ரிசார்ட் சில்வர்.

  ஸ்பெயின் கலாச்சார மையம்!

  ஸ்பெயின் கலாச்சார மையம்!

  பார்பதற்கு வேக வைத்த முட்டையை பாதியாக அறுத்து வைத்திருப்பது போல இருக்கும் இந்த இடம், ஸ்பெயினில் இருக்கும் ஆஸ்கார் நைமேயர் கலாச்சார மையம் ஆகும்.

  பெரூ!

  பெரூ!

  பெரூவில் மலை அடிவாரமும், கடற்கரையும் சங்கமிக்கும் ஒரு இடத்தில் பறவைகள் கூடி குதுகலமாக இருக்கும் காட்சியை தனது கேமரா கண்களால் க்ளிக்கி வைத்துள்ளார் ரிச்சர்டு சில்வர்.

  பொலிவியா!

  பொலிவியா!

  பார்க்க ஓவியம் போல இருக்கிறது அல்லவா இந்த படம். மலைகளின் மீது தங்கத்தை தூவியது போலவும், யாரோ ஒருவர் கடல் அலைகளை சீராக்கி, வானின் நீலத்தை கொஞ்சம் கொட்டியது போல காத்திருந்து இந்த அற்புத காட்சியை படம் பிடித்துள்ளார் ரிச்சர்ட்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Richard Silver, Who Arrests Beauty of This World in His Lens!

  Richard Silver, Who Arrests Beauty of This World in His Lens!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more