நோய் குணமாக கன்னி கழியாத பெண்ணுடன் செக்ஸ் வைத்து கொள்ளும் ஆப்ரிக்கர்கள்!

By John
Subscribe to Boldsky

நாம் அறிந்த கேள்விகளுக்கான தெரியாத பதில்களும், அறிந்த விஷயங்கள் குறித்த தெரியாத தகவல்களும்...

இன்றைய டைம் பாஸ் #005ல் நாம் காணவிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...

கன்னி கழியாத பெண்ணுடன் உடலுறவு வைத்து கொண்டால் எச்.ஐ.வி குணமாகுமா?

உங்க வீட்டு கார்பெட் மூலமாக நீங்கள் அனுதினம் எதிர்கொள்ளும் ஆரோக்கிய பாதிப்பு என்ன?

நீங்கள் உண்ணும் உணவில் எத்தனை வகையிலான பூச்சிக்கொல்லி கலக்கப்படுகிறது என்று அறிவீர்களா?

துரித உணவுகள் அதிகம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அபாயம் என்ன?

ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக் கொள்ளும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

நடுவில் பிறந்தவர்கள் நேர்மையானவர்களா? ஆய்வு என்ன கூறுகிறது?

தாய்லாந்தில் நடக்கும் பாலியல் தொழில் சார்ந்து அறிவீர்களா?

ஜப்பானில் பூகம்பத்தால் உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்?

பறக்கும் தட்டு என்ற சொல்லாடல் எப்படி பிறந்தது என்று அறிவீர்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்பெட்!

கார்பெட்!

அனைவரின் வீட்டு வாசலிலும் ஒரு கார்பெட் கண்டிப்பாக இருக்கும். சிலரது வீட்டில் ஒவ்வொரு அறையின் வெளியேவும் ஒரு கார்பெட் இருக்கும். சோபா முன்னரும் பெரிய அளவிலான கார்பெட் வைத்திருப்பார்கள். அதிகமான கார்பெட் இருக்கும் வீடுகள் அதிக சுத்தமாக இருக்கும் என்றும் நீங்கள் கருதுகிறீர்களா? இல்லவே இல்லை!

அதிகமான கார்பெட் இருக்கும் வீடுகளில் தான் அதிகமான மாசுபட்ட காற்று இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. வீட்டை தினமும் சுத்தம் செய்தாலும், பலரும் கார்பெட்டை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை தான் சுத்தம் செய்கிறார்கள். இதுதான் தவறு. கார்பெட்டில் தான் அதிகப்படியான தூசு சேர்கிறது. மேலும், இது வீடு முழுக்க இருக்கும் காற்றில் தூசு அதிகமாக கலக்கவும் வழிவகுக்கிறது.

ஆகையால், கார்பெட் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் சுவாசப் பிரச்சனைகள், நுரையீரல் பிரச்சனைகள், தும்மல், இருமல் என ஏதாவது வந்துக் கொண்டே தான் இருக்கும். முக்கியமாக குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும். இனிமேல், மத்த இடத்தைவிட, கார்பெட்களை தினமும் மாற்றி வைப்பதும், அதை தூசு இல்லாமல் பராமரிப்பதும் மிகவும் அவசியம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

பூச்சிக்கொல்லிகள்!

பூச்சிக்கொல்லிகள்!

சராசரியாக நாம் அன்றாடம் உண்ணும் உணவுககளில் இருபதுக்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லிகள் பலவேறு நிலைகளில் சேர்க்கப்படுகின்றன. அதாவது விதை சேமித்து வைப்பதில் துவங்கி, பயிரிடும் நிலை, அறுவடை செய்யும் நிலை, விளைந்து வந்த பிறகு, கெடாமல் கிடங்கில் சேமிக்கும் போதென இந்த பூச்சிக்கொல்லிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

இதில் பல பூச்சிக் கொல்லிகள் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படாவதவை என்பது வேறுகதை.

இத்தனை பூச்சிக்கொல்லிகள் சேர்க்கப்பட்ட இயற்கை உணவுகளை உண்டாலும் கூட உடலில் புற்று முதல் பல கொடிய நோய் தாக்கங்கள் ஏற்படும் அபாயம் அதிகமாகவே இருக்கிறது.

துரித உணவுகள்!

துரித உணவுகள்!

துரித உணவுகள் என்பது நமது வாழ்வில் கலந்துவிட்ட ஒரு அங்கமாகிவிட்டது. குழந்தைகளுக்கு கேழ்வரகு, கம்மங்கூழ் காட்டிலும், ஃபிரஷ் ஜூஸ், ஜன்க் ஃபுட்ஸ் மீதான பிரியம் தான் அதிகமாக இருக்கிறது. பிட்சா வேண்டுமா, கேழ்வரகு வேண்டுமா என்று கேள்வி கேட்டால் நிச்சயம் குழந்தை பிட்சாவை தான் கைக்காட்டும்.

உங்களுக்கு தெரியுமா? சீனாவில் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பதே அதிகமாக துரித உணவுகள் உண்பதால் தான் என கண்டறியப்பட்டுள்ளது. துரித உணவுகள் மற்றும் மாறுபட்ட வாழ்வியல் நடைமுறைகள் தான் மார்பக புற்றுநோய் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறதாம்.

முத்தமிடும் போது....

முத்தமிடும் போது....

ஓர் ஆண், பெண் முத்தமிட்டுக் கொள்ளும் போது அதிகளவில் உடலில் Oxycotin எனும் பொருள் வெளிப்படுகிறது. இதுதான் இருவர் மத்தியில் ஒரு இணைப்பை ஏற்படுத்துகிறது. இந்த பாண்டிங் நிகழ்வின் போது, ஆண், பெண் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது, அவர்கள் மிகவும் ஈர்ப்பாகவும், அழகாகவும் தெரிவார்கள். இதனால், பர்சனலாக இவர்கள் இருவர் மத்தியில் இறுக்கம் அதிகரிக்கும்.

நடுவில் பிறந்தவர்கள்...

நடுவில் பிறந்தவர்கள்...

உலகில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் முடிவில், சகோதர, சகோதிரிகளில், முதல் அல்லது கடைசியாக பிரப்பவர்களை காட்டிலும், நடுவில் பிறப்பவர்கள் அதிகமாக உறவில் நேர்மையாக இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் மத்தியில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவு பாலம் பலமுடன் இருக்கிறது. இவர்கள் அதிகம் மறுமணம் அல்லது பலதாரமணம் செய்துக் கொள்வதில்லை.

நாற்பதுகளில்...

நாற்பதுகளில்...

இருபது வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்களுக்கும், நாற்பதுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட தாய்மார்களுக்கும் மத்தியில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் யாருக்கு இடது கை பழக்கம் கொண்ட குழந்தைகள் அதிகம் பிறந்தது யாருக்கு என்றும் ஆராய்ந்தனர்.

இதில், நாற்பதுகளில் குழந்தைப் பெற்றவர்களுக்கு பிறந்த இடது கை பழக்கம் உடையவர்கள் 128% அதிகமாக இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது.

தாய்லாந்து!

தாய்லாந்து!

தாய்லாந்தில் செக்ஸுவல் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் அதிகளவில் நடக்கிறது. இங்கே பாலியல் ஒரு பெரிய வியாபாரமாகவும், பொருளாதாரம் ஈட்டும் முக்கிய தொழிலாகவும் தான் காணப்படுகிறது. மேலும், இங்கே திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. திருநங்கைகளை இங்கே லேடிபாய்ஸ் என்று அழைக்கிறார்கள். இவர்கள் பெருமளவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சர்வ சாதாரணமாக தெருக்களில் நீங்கள் திருநங்கைகளை தாய்லாந்தில் காணலாம்.

பூகம்பம்!

பூகம்பம்!

உறவில் ஏதேனும் சண்டை வந்தால், உறவில் பூகம்பம் வந்துவிட்டது, விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று நாம் பொதுவாக குறிப்பிடுவோம். இதனால் விவாகரத்து ஏற்படும் சூழலும் அமையலாம். ஆனால், ஜப்பானில் 2011ம் வந்த பூகம்பத்திற்கு பிறகு தான் அதிகளவில் விவாகரத்து வழக்குகளும், விவாகரத்து நிகழ்வுகளும் நடந்து வருகிறது என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

ஏலியன்கள்!

ஏலியன்கள்!

மாடர்ன் யுகத்தில் முதன்முறையாக ஏலியன்கள் வருகை குறித்து பேசப்பட்டது 1947ல் தான். மவுண்ட் ரைனர், வாஷிங்டன் பகுதியில் அர்னால்ட் எனும் பைலட் டிஸ்க் வடிவத்திலான ஒன்பது பறக்கும் தட்டுகளை கண்டேன் என்று கூறினார். செய்திகளில் "Flying Saucers" என்ற தலைபுடன் செய்திகள் வெளியாகின. இதன் பிறகே, யுஎப்.ஒவை பறக்கும் தட்டுகள் என அதிகாரப்பூர்வமாக குறிப்பிடத் துவங்கினார்கள்.

செக்ஸ்!

செக்ஸ்!

எச்.ஐ.வியில் இருந்து குணமடைய ஆப்ரிக்காவில் ஒரு மூடநம்பிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது, கன்னி கழியாத பெண்ணுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் எச்,ஐ.வி / எய்ட்ஸ் குணமாகும் என இவர்கள் கருதுகிறார்கள். ஆனால், இது அந்த பெண்ணுக்கும் பரவ காரணியாக இருக்கும் என்பதை இவர்கள் அறிவதில்லை.

இந்த காரணத்தை கொண்டு பல இளம்பெண்கள் ஆப்ரிக்காவில் கற்பழிக்கப்படுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Array

    Random Fact To Know #005
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more