Latest Updates
-
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்!
நீங்கள் விரும்பும் வேலை கிடைக்க இந்த மந்திரங்களை கூறி கடவுளை வழிபடுங்கள்
நினைத்த வேலை கிடைக்கவும், வாழ்க்கையில் வெற்றிபெறவும் கடவுள் வழிபாடு மிகவும் அவசியம். குறிப்பாக பிள்ளையார், சரஸ்வதி மற்றும் மஹாலக்ஷ்மியை வழிபட வேண்டும்.
இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் அது வேலையின்மைதான். உலகிலேயே அதிக இளைஞர்கள் கொண்ட நாடு இந்தியாதான் அதேசமயம் அதிக வேலையில்லா திண்டாட்டம் உள்ள நாடும் இந்தியாதான். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்யும் இளைஞர்கள் நம் நாட்டில்தான் அதிகம்.

கடவுளை நம்புபவர்களுக்கு அவர்களின் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் நிச்சயம் விடுதலை கிடைக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கடவுளை முழுமையாக நம்பி முழுமனதுடன் வழிபட வேண்டும். மேலும் சில கடவுள்களை சில குறிப்பிட்ட மந்திரங்கள் கூறி வழிபடுவதும் நீங்கள் விரும்பும் வேலையை உங்களுக்கு பெற்றுத்தரும். இந்த பதிவில் எந்தெந்த மந்திரங்கள் நீங்கள் விரும்பும் வேலையை பெற உதவும் என்று பார்க்கலாம்.

கடவுள்கள்
நினைத்த வேலை கிடைக்கவும், வாழ்க்கையில் வெற்றிபெறவும் கடவுள் வழிபாடு மிகவும் அவசியம். குறிப்பாக பிள்ளையார், சரஸ்வதி மற்றும் மஹாலக்ஷ்மியை வழிபட வேண்டும். கடவுள் வழிபாடு மட்டுமின்றி உங்கள் விடாமுயற்சியும் நீங்கள் நினைத்ததை அடைய முக்கியம்.

கணபதி மந்திரம்
" ஓம் கீம் கூம் கண்பதே நமக ஸ்வாஹா "
இது ஒரு எளிமையான மந்திரம் ஆகும்.இந்த மந்திரம் உங்களிடம் கடவுளின் அருளை உங்களை நோக்கி ஈர்க்கும். இதன் மூலம் நீங்கள் விரும்பும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை உங்களுக்கு குறிப்பிட்ட ஒரு வேலை வேண்டுமெனில் புதன்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து வடக்கு புறம் அமர்ந்து இந்த மந்திரத்தை கூறுங்கள். இந்த மந்திரத்தை 11 நாட்கள் தொடர்ந்து 108 முறை கூறுங்கள், உங்களை சுற்றி மாற்றம் நிகழ்வதை உணர்வீர்கள். முடிந்தால் உங்கள் வீட்டில் ஒரு பிள்ளையார் சிலை வைத்து அதில் கவனம் செலுத்தி மந்திரத்தை கூறுங்கள்.

அனுமன் மந்திரம்
" ஓம் ஸ்ரீ வஜ்ரதேஹாய ராமபக்தாய
வாயுபுத்ராய நமோஸ்துதே "
நீங்கள் விரும்பும் வெற்றியை தேடித்தரும் மிகசக்திவாய்ந்த மந்திரம் இதுவாகும். அது வேலை, பதவி உயர்வு என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். தினமும் காலையில் அனுமன் முன் நின்று இந்த மந்திரத்தை 15 நிமிடம் கூறுங்கள் அல்லது தினமும் 11 முறை இந்த மந்திரத்தை 21 நாட்கள் தொடர்ந்து கூறுங்கள். உங்கள் வேண்டுதல் அனைத்தையும் ஆஞ்சநேயர் நிறைவேற்றுவார்.

சூர்ய மந்திரம்
" ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹரம் ஷாஹ் சூர்யாய நமஹ "
இந்த மந்திரத்தை கூறும்முன் நீங்கள் குளிக்க வேண்டியது அவசியம். முக்கியமாக வெள்ளை துணி அணிந்து கொண்டு கிழக்கு நோக்கி அமர்ந்து கூறவும். தொடர்ந்து 41 நாட்கள் இந்த மந்திரத்தை 108 முறை கூறவும். இந்த மந்திரத்தை கூறிய சில நாட்களில் மாற்றத்தை உணர்வீர்கள். இது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்றாகும் இதன்மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களை நோக்கி தேடிவரும்.

லக்ஷ்மி கணபதி மந்திரம்
" ஓம் கம் ஷ்ரீம் சர்வ் சிதி
ப்ரதயே ஷ்ரீம்கம் நமஹ "
இந்த சக்தி வாய்ந்த மந்திரம் மஹாலக்ஷ்மி மற்றும் பிள்ளையார் இருவரின் அருளையும் பெற்றுத்தரும். இந்த மந்திரத்தை ஞாயிற்று கிழமை கூற தொடங்குங்கள். இந்த மந்திரத்தை கூற சரியான நேரம் அதிகாலைதான், இந்த மந்திரம் நீங்கள் விரும்பும் கனவு வேலையை உங்களுக்குள் கிடைக்க உதவி செய்யும்.

வெற்றிக்கான அனுமன் மந்திரம்
" ஓம் ஹனுமன் வீர் ரஃஹோ ஹத் தீர் கரோ
யே காம் வியபார் பதே தந்த்ரா டூர் ஹூன்
டூனா டூதே க்ரதக் பதே கரஜ் சித்
ஹொயே நா ஹொயே டூ அஞ்சனி கி துஹை "
இந்த மந்திரத்தை செவ்வாய் கிழமை கூற தொடங்க வேண்டும். குளித்து விட்டு தூய்மையான துணிகளை அணிந்து கொண்டு மந்திரத்தை கூறவும். பூஜையறையில் ஆஞ்சநேயர் முன் அமர்ந்து மந்திரத்தை கூற தொடங்கவும். பின்னர் நெய் விளக்கை ஏற்றிவிட்டு இந்த மந்திரத்தை 108 முறை கூறவும்.

ராமசரித் மானஸ் மந்திரம்
" விஷ்வ பரன் போஷன் கர் ஜோய்
தகர் நாம் பரத் அஸ் ஹோய் "
இந்த மந்திரத்தை தினமும் காலை நேரத்தில் கூற வேண்டியது அவசியம். இந்த மந்திரத்தை கூறும்போது நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று முழுமனதுடன் இராமரை மனதில் நினைத்து பக்தியுடன் கூற வேண்டும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வர விரைவில் நீங்கள் விரும்பும் வேலை கிடைக்கும். இந்த மந்திரத்துடன் உங்கள் முயற்சியையும் தொடர்ந்து செய்யுங்கள்.

வேலைக்கான மந்திரம்
" த்ராயணம் தேவனாம்
த்ரிகுணஜனித்தனம் டவ் ஷிவே
பவேட் பூஜா பூஜா டவ்
சரணோயார்ய விராசிதா "
இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக கூறும்போது அது வேலையில்லாதவர்களுக்கு வேலையை பெற்றுத்தரும். இந்த நேர்மறையான, ஆற்றல் மிகுந்த இந்த மந்திரத்தை தினமும் கூறவும் .

சரஸ்வதி மந்திரம்
" ஓம் ஹ்ரீம் வாக்வதினி பாகவதி மமா கர்யா சிதி கரி "
கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவியை வேலைக்காகவும், வெற்றிக்காகவும் வணங்க வேண்டியது அவசியம். வெள்ளை நிற உடை அணிந்து தினமும் இந்த மந்திரத்தை 108 முறை கூறவும்.



Click it and Unblock the Notifications