For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பித்ரு தோஷம்னா என்ன?... உங்க குடும்பத்துக்கு பித்ரு தோஷம் இருக்கான்னு எப்படி கண்டுபிடிக்கிறது?

ஒரு குடும்பத்தில் எதிர்பாராத அகால மரணங்கள் பலமுறை ஏற்பட்டால் பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கும். இங்கே சில பரிகாரங்களைப் பார்க்கலாம்.

|

பித்ரு தோஷங்கள் குடும்பத்தில் இருந்தால், குடும்பத்தில் சின்ன சின்ன மனக் கசப்புகள் உண்டாகும். குடும்பத்தில் பிரச்னைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்கள் உண்டாகும்.

meaning of pitra dosha in tamil

பொருளாதார கஷ்டங்கள் ஏற்படும். சின்ன சின்ன விபத்துக்கள் ஆகியவை உண்டாகும். இதுபோன்ற எதிர்மறை ஆற்றல்கள் தாக்காமல் இருக்க என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பித்ரு தோஷங்கள்

பித்ரு தோஷங்கள்

ஒரு குடும்பத்தில் எதிர்பாராத அகால மரணங்கள் பலமுறை ஏற்பட்டால் பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கும். இறந்த தன் குடும்பத்தினருக்கு தண்ணீர், உணவு கொடுக்காமல் போனாலோ, ஆன்மீக சம்பிரதாயங்களின் போது அவர்களை நினைக்காவிட்டாலோ இவ்வாறு ஏற்படுகிறது. ஆன்மீக சம்பிரதாயங்களை செய்யாவிட்டாலோ, காகத்தை கொன்றாலோ, கருக்கலைப்பு செய்தாலோ பித்ரு தோஷம் ஏற்படுகிறது. இங்கே சில பரிகாரங்களைப் பார்க்கலாம்.

பரிகாரங்கள்

பரிகாரங்கள்

நீங்கள் உங்கள் முன்னோர்களுக்கு பிண்டம் கொடுத்தல், அவர்களை வழிபடல், தர்ப்பணம் செய்தல் போன்றவற்றை செய்தால் அவர்கள் திருப்தியடைவர். க்ருஷ்ண பட்சத்தில் வரும் அஸ்வினி மாதத்தில் எள், தர்ப்பைப் புல், பூக்கள், பச்சரிசி, கங்கை நீர் கொண்டு பித்ரு கடன்களை செய்ய வேண்டும். பிறகு மலர்கள், ஆடைகள், பழங்கள், நன்கொடை போன்றவற்றை பித்ரு கடன் செய்ய உதவிய பிராமணர்களுக்கு கொடுக்க வேண்டும்.

பித்ரு பூஜை

பித்ரு பூஜை

உங்கள் முன்னோர் இறந்த திதி, நாள் தெரியவில்லை என்றால் நீங்கள் அமாவாசையன்று இதைச் செய்யலாம். அரச மரத்தை வணங்கினாலும் பித்ரு தோஷம் நீங்கும். திங்கட்கிழமை வரும் அமாவாசை அன்று பாயாசம் செய்து முன்னோர்க்குப் படைத்தாலும் பித்ரு தோஷம் நீங்கும். ஒவ்வொரு அமாவாசையன்றும் பிராமணர்களுக்கு ஆடை தானம் செய்தால் பித்ரு தோஷத்தால் ஏற்படும் எதிர்மறைப் பலன்களை நீக்கிவிடும்.

வழிபாடு

வழிபாடு

ஒவ்வொரு அமாவாசையன்றும் தெற்கு திசை நோக்கி அமர்ந்து பசுவின் சாணத்தில் செய்யப்படும் எருவை உபயோகித்து தீ மூட்டி அதில் பாயசம் படைத்து, நீங்கள் செய்த தவறுகளுக்கும், கர்மாக்களுக்கும் மனமுவந்து மன்னிப்புக் கேட்டு வழிபடவேண்டும். இதுவும் ஒரு நல்ல பரிகாரம்.

சூரிய தோஷம்

சூரிய தோஷம்

உங்கள் தந்தைக்கும், குடும்பத்தில் உள்ள முன்னோர்க்கும் உரிய மரியாதை செய்து, அவர்களின் ஆசியைப் பெற வேண்டும். இது உங்கள் ஜாதகத்தில் உள்ள சூரிய தோஷத்தைப் போக்கும்.

மாணிக்கக்கல்

மாணிக்கக்கல்

சூரிய உதயத்தின் போது ஒரு பாயை விரித்து, அதில் அமர்ந்து சூரியனைப் பார்த்து காயத்திரி மந்திரத்தை ஜபித்து ஜாதகத்தில் சூரியன் உள்ள இடத்தின் பலனை மேம்படுத்திக் கொள்ளலாம். மாணிக்கக் கல்லை அணிந்து கொண்டாலும் சூரியனின் நற்பலன்களை பெறலாம். ஆனால் ஜாதகத்தில் சூரியன் உள்ள இடத்தை பொறுத்து மாறுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pitra dosha: Causes, problems and remedies

due to our Karmic debt and Pitru Dosha, Pitra Dosha effects, we face inevitable and unexpected difficulties and hardships.
Story first published: Saturday, July 21, 2018, 15:53 [IST]
Desktop Bottom Promotion