வேர்ல்டு லெவல்ல வைரலான இந்திய போலீஸ் காரங்களோட கேலியான புகைப்படத் தொகுப்பு!

Posted By: Staff
Subscribe to Boldsky

உலகத்துலேயே சிறந்த போலீஸ் பட்டியல்ல ரெண்டாவது இடத்துல இருக்கு நம்ம தமிழ்நாடு போலீஸ்ன்னு ரொம்ப வருஷமா நாம பேசிக்கிட்டே இருக்கோம். இந்த ரேங்கிங் யாரு சொன்னா, இப்ப நம்ம போலீஸ் எந்த இடத்துல இருக்குன்னு எல்லாம் தெரியல. சரி! அதை பத்தின தொகுப்பும் இது இல்ல. அதனால, அதைப்பற்றி இப்ப இங்க நாம அலசி ஆராயவேண்டிய கட்டாயம் இல்ல.

பல வகையான படங்கள் தினந்தினம் கூகிள்ல வைரலா, டிரெண்டிங்கா பரவிட்டே இருக்கு. அந்த வகையில, உலகத்துக்கே அசால்ட்டு காட்டுற வகையில நம்ம இந்திய போலீஸ்காரங்க புகைப்படங்கள் சிலவனவும் வைரலாக்கப்பட்டு பரவி வருது. அதுல சில வேடிக்கையான, கேலியான படங்களோட தொகுப்பு தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மவுத் போன்?

மவுத் போன்?

ஏனுங்க அண்ணே... 150 ரூபாக்கு எல்லாம் இயர்போன் கிடைக்குது... நாமெல்லாம் கை நீடுனாலே கொடுத்திடுவாங்க. அப்பறம் எதுக்கு இப்படி சிங்கம் சேஸிங் சீன் போல, வண்டி ஒட்டிகிட்டே மவுத் போன் யூஸ் பண்றீங்க. உலக லெவல்ல பெஸ்ட் போலீஸ்ன்னு காலங்காலாமா சொல்லிக்கிட்டா போதுமா. அதை காப்பாத்த வேண்டாமா?

எவன்டா அவன்....

எவன்டா அவன்....

எவனோ சீரியஸா 'நோட்டு' வாங்க நோட்டம் விட்டுக்கிட்டு இருக்க நேரமா பார்த்து இந்த வேலைய பார்த்துவிட்டான் போல. அதுவும் வேணும்னே மஞ்சா கலர் பொம்மை துப்பாக்கி வெச்சு படம் எடுத்திருக்கான்.

நீங்களுமா?

நீங்களுமா?

அரசு மட்டும் தானே பொம்மை ஆட்சி செய்யுதுன்னு நெனச்சோம். அண்ணே நீங்களும் இப்படி பொம்மைய வெச்சு ஏமாத்தலாமா? நம்மாளுங்க... உண்மையான போலீஸ் நின்னாலே ரூல்ஸ் மதிக்க மாட்டாங்க. யாரு இப்படி பொம்மை போலீஸ் நிக்க வெச்சா ரூல்ஸ் மதிப்பாங்கன்னு அடவைஸ் பண்ணாங்க?

மானம்!?

மானம்!?

ஏம்பா ஏய்... அதிரடி படையில வேலை பண்ணா என்னென்ன வேலை எல்லாம் பண்ண வேண்டி இருக்குன்னு பாருங்கள். இவங்க சண்டை போட்டு வெட்டிய கழற்றி எறிஞ்சத எல்லாம் பொறுக்கி எடுத்துட்டு வர வேண்டியதா இருக்கு. பாவம்யா அந்த போலீஸ் காரர்.

மைக்கல் ஜாக்சன்!

மைக்கல் ஜாக்சன்!

இந்த டிராபிக் போலீஸ் உலக லெவல் பிரபலம். மைக்கல் ஜாக்சன் போல மூன் வாக் எல்லாம் பண்ணி பிரபலம் ஆகியிருக்கார். பல சர்வதேச ஊடகங்கள்ல இவர பத்தி நிறையா கட்டுரைகள் எல்லாம் கூட வந்திருக்கு. மனுஷன் டிராபிக் கிளியர் பண்ற விதமே வேற.. வேற.. வேட்டைக்காரன் காதிரி ரேஞ்சுல இருக்கும்.

இந்த வழியாவா?

இந்த வழியாவா?

ஒருவேளை அரசர் காலத்துல உருவாக்குனா சுரங்க பாதையா இருக்குமோ? சுரங்க பாதைக்கு எல்லாமா இந்திய அரசாங்கம் வழி காட்டுது. இது கூகிள் மேப்புக்கு தெரியுமா? இதுனால தான் இப்ப எல்லாரும் கூகிள் மேப்பும் கையுமா அலையிறாங்க போல.

இரண்டு வட்டம்...

இரண்டு வட்டம்...

இந்திய போலீஸ்காரர் வைரலான படங்களில் இதுவும் ஒன்னு. ரெண்டு வட்டம் போட்டே தான் இந்த படம் வைரலாகிட்டு இருக்கு. அந்த ரெண்டு வட்டம் அந்த கிரியேட்டர் எதுக்கு போட்டிருக்கார் தெரியுமா? சாப்பிட மறக்காத நீங்க... ஷூ போட மறந்து வெறும் செருப்பு போட்டுட்டு வரலாமான்னு டைரக்டா சொல்ற மாதிரி இருக்கு.

அட கொடுமையே!

அட கொடுமையே!

கலவரம், களேபரம்னா அதிரடி படை போலீஸை கூப்பிடலாம். இப்படி கிழிஞ்சு தொங்குற போஸ்டர ஓட்டுறதுக்கு எல்லாமா கூபிடுவீங்க. என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா.அதுலயும் இன்னொருத்தர் அன்டு கொடுத்து நிக்கிறது ... மீம் கிரியேட்டர்ஸ் கண்ணுல பட்டா என்னத்துக்கு ஆகுறது.

அராஜகம்!

அராஜகம்!

இதுவும் ஒருவகையான அராஜகம் தான். பல போராட்டங்கள... முக்கியமா திரைப்படங்கள்ல வர போராட்டங்கள்ல போலீஸ் அராஜகம் ஒழிகன்னு ஒரு கோஷம் எல்லா படத்துலயும் பார்க்க முடியும். உயர் அதிகாரியா இருந்தா என்ன வேணாலும் பண்ணலாமா?

தக்காளி சட்னி?

தக்காளி சட்னி?

அதெப்படிங்க போலீக்கார்! நாங்க டூ வீலர்ல மூணு பேரு வந்தாலோ, ஹெல்மட் போடாம வந்தாலோ பின்னி பெடலெடுத்து, பைக் சாவி புடுங்கி வெச்சுக்கிட்டு அலுச்சாட்டியம் பண்ணுவீங்க. ஆனா, நீங்க மட்டும் ஹெல்மட் போடாம மூணு பேரு போவீங்க? அதென்ன எங்களுக்கு வந்தா மட்டும் தக்காளி சட்னியா?

ஹே.. ஹே... ஹே... என்ன பண்ற?

ஹே.. ஹே... ஹே... என்ன பண்ற?

போராட்டம் பண்ண வந்த பயல புடிச்சு வண்டியில ஏத்த சொன்னா என்ன ஜி கட்டிப்புடிச்சு கபடி விளையாடிட்டு இருக்கீங்க. அவன் வேற சினுங்குரானே...பின்னாடி ஒருத்தர் என்ன தான் நடக்குத்துன்னு பார்ப்போம்கிற மாதிரி வேடிக்கை பார்த்துட்டு இருக்கார்.

சிங்கிள் பரிதாபங்கள்...

சிங்கிள் பரிதாபங்கள்...

அந்த இளம் ஜோடிக்கு பாதுக்கு கொடுக்கிறது ஒரு சிங்கிள் சிங்கம்னு நினைக்கிறேன். அவரோட லுக்க பார்த்தா அவரு 90ஸ் கிட்ஸ் சிங்கிள்னு நினைக்கிறேன்.. அதான் 2K கிட்ஸ் லவ்வுரத ஏக்கமா பார்த்து உள்ளுக்குள்ள அழுத்துட்டு இருக்கார்.

என்ன சொல்றீங்க...

என்ன சொல்றீங்க...

ஸ்ட்ரைட் க்கு வேற ஒரு அர்த்தமும் இருக்கு... எப்பவும் போல நோ என்ட்ரினு போர்டு வெச்சாலே போதுமே. எதுக்கு இந்த கிரியேட்டிவிட்டி.. சுத்தமா என்ன சொல்ல வரீங்கன்னே புரியல பாஸ். ஒருவேளை ஓரினச்சேர்க்கையாளர் மட்டும் தான் போகணும்னு சொல்றீங்களா?

என்ன சுகம்...

என்ன சுகம்...

காது குடையிறது ஒரு அலாதியான சுகம். அதுவும், மத்தவங்க நமக்கு காது குடைஞ்சு விடுறது வேற லெவல் சுகம். அந்த சுகானுபவத்தை அனுபவிச்சுட்டு இருக்கார் நம்ம இந்திய போலீஸ் காரர். அசந்து தூங்கிவிட்டார் போல...?

எக்ஸ்பீரியன்ஸ்!

எக்ஸ்பீரியன்ஸ்!

நம்ம இந்தியாவுல ஒரு போலீஸ்காரர் எம்புட்டு வருஷமா வர்க் பண்றாருங்கிறத ரொம்ப ஈஸியா கண்டு பிடிச்சிடுடலாம். அவங்கவங்க எக்ஸ்பீரியன்ஸ்க்கு ஏற்ப தொப்பை பெரிசா இருக்கும். பாருங்க.. எல்லாரும் கை கொடுத்து தானே ஹேண்ட்ஷேக் பண்ணுவாங்க. நம்ம மக்கா தொப்பை கொடுத்து பெல்லி ஷேக் பண்றாங்க.

All Image Source: Google

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Photos Proves Indian Police are the Coolest in the World!

Photos Proves Indian Police are the Coolest in the World!
Story first published: Monday, April 9, 2018, 11:02 [IST]