ப்ளூ மூன் பாக்கப்போறீங்களா? அவசியம் தெரிஞ்சுக்கங்க!

Posted By: Aashika
Subscribe to Boldsky

இன்றைக்கு எடிட்டிங் சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆப்ஸ்கள் எத்தனையோ சந்தையில் இலவசமாகவே கிடைக்கிறது. மோனிகா கார்வால்ஹோ என்ற பெண்மணி, இந்த போட்டோ எடிட்டிங் செய்வதையே தன்னுடைய ஆர்வமாக கொண்டிருக்கிறார்.

எடிட்டிங்கில் என்ன செய்திட முடியும் என்று நினைப்பவர்களிடத்தில், உங்கள் கண்களாலேயே ஒரு கணம் நம்ப மறுக்கும் வகையில் க்ரியூட்டிவ்வாகவும் புதுமையாகவும் எடிட்டிங் செய்து அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் மோனிகாவின் அபார உழைப்பு இருக்கிறது.

மோனிகாவின் கற்பனைக்கு சபாஷ் போட.... தொடரருங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

எப்டி இருந்த நான் இப்டி ஆகிட்டேன் என்று சொல்லும் படம். நீர் பெருக்கெடுத்து ஓட அங்கே பறவையொன்று நீரில் நீந்தியபடி செல்கிறது. அதே இன்று அல்லது சில ஆண்டுகளுக்குப் பிறகு வரண்ட நிலமாக கிடக்கிறது.

இன்றைக்கு பல ஆறுகள் இருந்த இடம் தெரியாமல் கட்டிடங்களாக உயர்ந்து நிற்கும் இடங்களை நினைவு கூர்ந்திருக்கிறார்.

#2

#2

கண்ண நோண்டிடுவேன்னு பேச்சுக்குத்தான சொல்வோம்... அதை தன் திறமையால் சாத்தியப்படுத்தி காண்பித்திருக்கிறார்.

கண்களையும் கையையும் தனித்தனியாக போட்டோ எடுத்து அதை பக்காவாக எடிட் செய்து பொருத்தியிருப்பது தான் இது.

#3

#3

காபி நுரை ததும்ப ததும்ப குடிப்பது உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த புகைப்படமும் உங்களுக்கு பிடிக்கும். மேலே பார்க்க ஏதோ இமயமலை உருகி வழிவது போல தெரிகிறதா? அப்படியே முழு படத்தையும் பார்த்தால் உண்மை நிலவரம் தெரியும்.

இதுவும் எடிட்டிங் செய்த மாயம் தான்.

#4

#4

இப்டி ஒரு ஜிப் வாய்க்கு இருந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும் என்று தோன்றுகிறதா? கண் இமைகளை பார்த்ததும் இரண்டுக்கும் ஒரு ஜிப் வைத்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது எடிட்டிங்கில் சாத்தியப்படுத்திவிட்டிருக்கிறார்.

#5

#5

லாங் ரோடு ட்ரிப் ரொம்ப பிடிக்கும் என்று சொல்பவர்களை வசீகரிக்கும் புகைப்படம் இது. பயணங்கள் குறித்து சொல்கிறாரா அல்லது பாதுகாப்பான பயணம் குறித்து எச்சரிக்கிறாரா.... நீங்களே பாருங்கள்.

#6

#6

இரண்டு மலை முகட்டினை நம் மேல் உதட்டின் மீது பொருந்திப் பார்க்க வேண்டும் என்று என்றாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? சிறகடிக்கும் கற்பனையின் தாக்கம் எடிட்டிங்கில் உயிர் பெற்றிருக்கிறது.

#7

#7

அழகாக மலர்ந்திருக்கும் பூக்களின் நிறங்கள் குறித்த சந்தேகம் இந்தப் படத்தைப் பார்த்ததும் தெளிந்திருக்கும் தானே... ஒரு வேளை வெள்ளை நிற பூக்களுக்குள் இப்படியான பறவை உட்கார்ந்திருக்குமோ என்று உங்களை நம்ப மறுக்கும் தருணங்களில் நினைத்துக் கொள்ளுங்கள் இது போட்டோஷாப் செய்த மாயாஜாலாம் என்று.

#8

#8

மார்னிங் ஒரு பவுல்ல கார்ன் பேல்க்ஸ் சாப்ட்டு ஆரஞ்சு ஜீஸ் குடிச்சிடுவேன் என்று ஸ்ட்ரிக்ட் டயட் பின்பற்றுபவர்கள் ஒவ்வ்வொரு முறையும் உங்கள் பவுலில் இப்படியேதாவது இருக்கிறதா என்று சோதித்திடுங்கள்.

#9

#9

கவிஞர்களின் வர்ணனைகளுக்கு உயிரூட்டியிருக்கிறது இந்த படம். நிலவையே கருவிழியாய் வைத்துநமக்கை கொஞ்சம் பயம் கூட்டினாலும், மோனிகாவின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது.

ஒரு பெண்ணின் முகத்தையும், அதில் கருவிழிக்கு பதிலாக நிலவையும் பொருத்தி இயற்கையையும் பெண்மையையும் போற்றியிருக்கும் படம்.

இன்னக்கி வேற ப்ளூ மூன் ரெட் மூன்னு சொல்றாங்க கொஞ்சம் ஜாக்கிறதையாவே இருங்க....

#10

#10

ஒரு ஸ்பூன் சாப்டலாம்னு வாய்ல வைக்கும் போது தான் நமக்கு ஸ்பூன்ல இருக்குற எல்லாமே கண்ணுக்குத் தெரியும்.

என்னைக்காவது இப்டி உங்க கண்ணுல தெரிஞ்சிருக்கா?

#11

#11

குழந்தைகளை ஏமாற்ற நம் அம்மாக்கள் அள்ளித்தெளிக்கிற டயலாக்குகளில் ஒன்று காக்கா தூக்கிட்டு போச்சு என்பதாகத்தான் இருக்கும். அதுவும் நம்பிக்கொண்டு அப்டியா.... எப்டி தூக்கிட்டு போகும் என்று வாயைப் பிளந்து கொண்டு கேட்குமள்ளவா?

அப்போது இப்டி தான் தூக்கிட்டு போச்சு என்று இந்த படத்தை காண்பியுங்கள்.

 #12

#12

இருவேறு இடங்களை எப்படி பார்த்தாலும் தனித்தனியாக தனித்து பார்க்க முடிகிறது.இயற்கையை எல்லாம் அழித்து கட்டிடங்களாக உருமாறிக் கொண்டிருக்கிறது என்பதையும் இந்த படம் நமக்கு உணர்த்துகிறது.

#13

#13

புக் எடுத்து படிக்க ஆரம்பிச்சாலே தூக்கம் சொக்குதுன்னு சொல்றது இதனால தானா....

#14

#14

பொய் சொன்னா உனக்கும் இப்டித்தான் ஆகும் என்று சொல்லிப் பாருங்க.... உங்களுக்கு தெரியாத பல உண்மைகள் வெளிவரும்

#15

#15

எங்க வூட்டையெல்லாம் அழிச்சு இப்டி கட்டிடம் கட்டிக்கிட்டா நாங்க எல்லாம் எங்கடா போவோம். நம் சட்டையை பிடித்து விலங்குகள் இப்படி கேட்காதவரையில் நாமெல்லாம் திருந்தமாட்டோம்.

#16

#16

டெய்லி க்ரீம் யூஸ் பண்ற மக்கா.... பீ கேர்ஃபுல் யாரு கண்டா உள்ளயிருந்து திடீர்னு இப்டி ஒரு பறவை வந்துச்சுனன அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

இது போல மோனிகா பகிரும் எண்ணற்ற படங்களை ரசிக்க இன்ஸ்டா பக்கத்தில் ஏராளமான ஃபாலோயர்ஸ் குவிந்திருக்கிறார்கள்.

All Images Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Photo Montages Which Make You Look Twice

photo montages which make you look twice
Subscribe Newsletter