விசித்திர திறன் கொண்டுள்ள உலகின் அசாத்திய மனிதர்கள் - புகைப்படத் தொகுப்பு!

Subscribe to Boldsky
அசாத்தியமான திறமை கொண்டுள்ள மனிதர்கள்.. !!- வீடியோ

யாராவது பேச்சுக்கு வாட்ஸ் யுவர் ஹாபி என்றால் கூட கவனமாக ரீடிங் புக்ஸ், ஸ்டாம்ப் கலெக்டிங் என்று தேடித்தேடி சொல்வோம். சிலர் ஹாபியா அப்டின்னா என்று கேட்டு நகர்ந்து விடுவார்கள். சிலருக்கு அந்த ஹாபியே அதிகரித்து பேஷனாக கூட மாறிடும்.

இதுவரை யாரும் செய்திடாத ஒரு விஷயத்தை செய்யப்போகிறேன் எல்லாரையும் விடவும் நான் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று நினைத்து மிகவும் விசித்திரமான மற்றும் அசாதரணமான விஷயங்களை செய்கிறவர்களும் உண்டு.

அப்படி கேட்பவர்களையும் பார்ப்பவர்களையும் மெய்கூசச் செய்திடும் நபர்களைப் பற்றிய ஓர் தொகுப்பு. தயவு செய்து இதையாரும் முயற்சித்து பார்க்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நாமெல்லாம் காது குத்திக் கொண்டு தோடு அணிவதை பெரிய சடங்காக நிகழ்த்தினால் இவர் உடல் முழுவதற்கும் குத்திக் கொண்டு நகைகளை அணிந்திருக்கிறார். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது.

Rolf Buchholz எனப்படும் இவர் இதுவரை 453 இடங்களில் குத்தியிருக்கிறார் . உதட்டைச் சுற்றி மட்டும் 94 நகை குத்தியிருக்கிறார். அதே போல அவரது பிறப்புறுப்பு பகுதியில் மட்டும் 278 நகை அணிந்திருக்கிறாராம்.

Image Courtesy

#2

#2

கண்ணில் சாதரணமாக அதீத காற்றுப் பட்டாலே கண்களை இறுக்க மூடி திறந்து என்னென்ன கலேபரங்களை செய்கிறோம். ஆனால் இங்கே இவரைப் பாருங்கள் தன்னுடைய கீழ் இமையை வைத்தே 1.8 கிலோ கிராம் எடையை அசால்ட்டாக தூக்குகிறார்.

Wang Xianxiang கூறுகையில் ஒவ்வொரு கண் இமை மூலமாகவும் தனித்தனியாக 1.8 கிலோ எடையை தூக்குவேன் என்று அதிர்ச்சியூட்டுகிறார்.

Image Courtesy

#3

#3

வழக்கத்தை விட ஏன் சில நேரங்களில் வழக்கமாக எந்தரிக்கும் நேரமாக இருந்தாலும் கொஞ்சம் குளிர் எடுத்தால் கூட தண்ணீரில் கை வைக்கவே பயப்படுவோம்.

ஆனால் இங்கே பாருங்கள் ஐஸ் பாத் டப்பில் முழுவதும் ஐஸ் கட்டியால் நிரப்பி அதில் 118 நிமிடங்கள் வரை இருந்திருக்கிறார்.

அதுவும் இந்த 118 நிமிடங்களை தாண்டியும் இருந்திருப்பார் உடலின் டெம்ப்பரேச்சர் அபிரிதமாக குறைந்ததால் வெளியில் இருந்தவர்கள் இழுத்துப்போட்டவர்கள்.

Image Courtesy

#4

#4

இவர் பிகா எனப்படக்கூடிய ஓர் டிஸ் ஆர்டரினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உணவாக எடுத்துக் கொள்ள முடியாதவற்றை எல்லாம் சர்வ சாதரணமாக எடுத்துக் கொள்வார்கள். இந்த மனிதர் இதுவரை 9 டன் மெட்டல் சாப்பிட்டுக்கிறார்.

Image Courtesy

 #5

#5

அவசரத்திற்கு போனி டெயில் போட்டுப் போகிறவர்கள் கூட இதைப் பார்த்து ஆர்வம் மேலோங்கினாள் எதுவும் சொல்வதற்கில்லை. Kazuhiro Watanabe தன்னுடைய முடியை 44 இன்ச் நீளம் வளர்த்திருக்கிறார். இது சாதரணமானது தானே என்று சொல்வதற்கு முன்னர் இதையும் படித்து விடுங்கள். அவர் அந்த முடியை செங்குத்தாக நிறுத்தியிருக்கிறார்.

இவ்வளவு நீளத்தை வளர்க்க பதினைந்து ஆண்டுகள் வரை முடியை வெட்டாமல் இருந்திருக்கிறேன் என்கிறார் இந்த சாதனையாளர்.

Image Courtesy

#6

#6

Milan Roskopf எனப்படும் இந்த நபர் கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் விளையாண்டிருக்கிறார். அப்படி ரிஸ்க் எடுப்பதெல்லாம் தனக்கு மிகவும் சாதரணமானது என்கிறார். மிகவும் கனமான பொருள் சில நேரங்களில் மரத்தை கூட நொடிப்பொழுதில் துண்டாக்கிடும் மெஷினை தூக்கிப் போட்டு அசால்ல்ட்டாக விளையாடுகிறார். அதுவும் எப்படி மூன்று மெஷினை தூக்கிப் போட்டு மாறி மாறி பிடித்து பார்ப்பவர்களையே ஒரு கணம் அச்சப்பட வைத்து விடுகிறார்.

Image Courtesy

#7

#7

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் ஆகியோரையே விஞ்சிவிட்டார் இந்த மேன். Etibar Elchiyev எனப்படும் இந்த நபர் மேக்னட்டிக் மேன் என்று அழைக்கப்படுகிறார்.

இவர் உடலில் எந்த வித பிடிமானமும் இல்லாமல் ஸ்பூன் நிற்கிறது. இவரது உடலில் ஒட்டவைக்கப்படுகிற ஸ்பூன்கள் கீழே விழாமல் ஏதோ மேக்னெட்டில் சேர்த்தது போல ஒட்டிக் கொண்டிருக்கிறது.

Image Courtesy

#8

#8

சுத்தா இருந்தா உடம்பு சரியில்லாம போய்டும் என்னும் இந்த தாத்தா இரானினில் வாழ்ந்தவர். உலகிலேயே அழுக்கான மனிதர் என்று ‘போற்றப்படுகிறார்'. உலகிலேயே அழுக்கான மனிதாரா அப்படி என்ன செய்தார் என்று யோசிக்கிறீர்கள் தானே. இவர் எதுவும் செய்யவில்லை என்பது தான் இங்கே பிரச்சனையே .

சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இவர் குளிக்கவேயில்லையாம்!

தண்ணீ உடம்புல பட்டாலே நமக்கு டென்ஷனாகுது, அடிக்கடி கோபம் வருது அதனால குளிக்கிறதையே விட்டுட்டேன் என்று சொல்லும் Amou Haji விலங்குகளின் கழிவுகளைத் தான் சேகரித்து அதனை புகைக்கிறார். ஒரு நாளைக்கு ஐந்து முறை இப்படி புகைக்கிறார்.

Image Courtesy

#9

#9

Stephen Wiltshire இவரை நாம் எல்லாரும் ஜீனியஸ் என்று ஒப்புக் கொண்டாக வேண்டும். ஒரு இடத்தை அல்லது ஒரு பொருளை ஒரு முறை பார்த்தாலே போதும் அதை அப்படியே தத்ரூபமாக வரைந்து விடுகிறார். இவர் ஒரு முறை நியூயார்க் நகரத்தை 20 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் மேலே பறந்து விட்டு கீழே வந்து 19 அடி நீள ஓவியத்தை வரைந்து அசத்தியிருக்கிறார்.

Image Courtesy

#10

#10

நைட்டெல்லாம் தூக்கமே இல்ல அதான் இப்போ தூக்கம் வருது, தல வலிக்கிது என்று ஒரு நாள் ஒரு வேலை சரியாக தூங்கவில்லை என்றாலே எப்படி புலம்புகிறோம் ஆனால் இந்த நபரைப் பாருங்க ஒன்னில்ல ரெண்டில்ல கடந்த 41 வருஷமா இந்த மனுஷன் தூங்கவேயில்லையாம்.

Image Courtesy

#11

#11

தாண்டவம் படத்தை பார்த்தவர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் ஏற்கனவே தெரிந்திருக்கும். 13 மாதக்குழந்தையாக இருந்த போது ரெட்டினல் கேன்சர் ஏற்பட்டு இரண்டு கண்ணிலும் பார்வையை இழந்து விட்டார். இதைத் தொடர்ந்து Daniel Kish வாயில் சத்தங்களை எழுப்பி அதன் மூலமாக அருகில் என்ன தடை இருக்கிறதும் நாம் எப்படி செல்ல வேண்டும் ஆகியவற்றை எளிதாக கணிக்கிறார்.

கண்கள் இல்லாத நபர் வண்டியோட்ட முடியுமா என்று சவால் விடுத்துக் கொண்டிருந்த நிலையில் இந்த எக்கோலோகேஷன் மூலமாக சாலையில் வண்டியை ஓட்டி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார் டேனியல். இவைப் போலவே பார்வையில்லாதவர்களுக்கு இந்த எக்கோலொகேஷன் மூலமக சுற்றுப்புறத்தை கண்காணிக்கும் வகையில் வோர்ல்ட் அக்சஸ் ஃபார் ப்ளைண்ட் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

Image Courtesy

#12

#12

இவருக்கு இதுவரை சோர்வு ஏற்பட்டதே கிடையாதாம். Dean Karnazes என்னும் இந்த அமெரிக்கரை அல்ட்ரா மாரத்தான் வீரர் என்று அழைக்கிறார்கள். இவர் ஒரு முறை 350 மைல் தூரத்தை தொடர்ச்சியாக ஓடி கடந்திருக்கிறார் அதாவது மூன்று நாட்கள் இரவு பகல் தூங்காமல் வழியெங்கும் ஓடிக் கொண்டே இந்த தூரத்தை கடந்து சாதனை படைத்திருக்கிறார்.

சமீபத்தில் அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் நடைப்பெற்ற 50 மாரத்தானில் பங்கேற்று தொடர்சியாக ஓடியது தான். இவருக்கு முதுமையினால் தான் உடல் நலிவுறுமே தவிர மற்றப்படி எந்த உடல் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பேயில்லை அவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என்று நற்ச்சான்று கொடுத்திருக்கிறார்கள்.

Image Courtesy

#13

#13

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு வயது நிரம்பிய குட்டிக் குழந்தை ஒன்று உடற்பயிற்சி செய்வது போல ஒரு வீடியோ வெளியானதே அதைக்கூட எல்லாரும் ஆச்சரியப்பட்டு ஷேர் செய்து வைரல் ஆக்கினோமே அது ஃபேக் செய்யப்பட்டதோ அல்லது சும்மா வீடியோ எடுப்பதற்காக குழந்தையை உடற்பயிற்சி செய்ய வைத்தததோ அல்ல.

இதோ Liam Hoekstra தான் அந்த சிறுவன். ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது நேராக நடக்க ஆரம்பித்து விட்டான். பதினெட்டு மாதங்களில் அங்கிருந்து டேபிள்,சேர் ஆகியவற்றை தூக்குவது, நகர்த்துவது என வேலை காட்டத் துவங்கிவிட்டிருக்கிரார்.

Image Courtesy

#14

#14

லியாம் பிறக்கும் போதே ஓர் வகையான டிஸ்ஸார்டர் வுடன் தான் பிறந்திருக்கிறார். மயோஸ்டடெயின் என்ற குறைபாடு இவருக்கு இருப்பதால் வழக்கத்தை விட ஆறு மடங்கு இவரது தசை வலிமை இருக்கிறது.

அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த நினைத்த பெற்றோரின் அரவணைப்பினால் பாடி பில்டிங்கில் சாதனை படைக்கிறான் இந்த சுட்டி.

Image Courtesy

 #15

#15

Slavisa Pajkic என்ற இந்த நபருக்கு எக்கசக்கமான எலக்ட்ரிசிட்டி பவர் இருக்கிறது பொதுவாக மனிதார்களால் 50 வால்ட்ஸ் வரை தான் தாங்க முடியும் ஆனால் இவர் 20000 வால்ட்ஸ் வரை தாங்கியிருக்கிறார்.

அதோடு தன் உடலில் இருந்து 1 நிமிடம் 37 வினாடிகளுக்கு ஒரு பானையில் இருந்த தண்ணீரை இவர் உடலிலிருந்து வெளியான கரண்ட்டைக் கொண்டு நீரை சூடாக்கியிருக்கிறார். கரண்ட்டை தன் உடலில் சேமித்து வைக்கவும் செய்கிறாராம்!

அடி ஆத்தே....

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: insync pulse
    English summary

    People with extraordinary talents

    People with extraordinary talents
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more