Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க கையில இந்த முக்கோண வடிவ ரேகை ஏதாவது இருக்கா? அதோட அர்த்தம் என்னனு தெரியுமா?
உங்களுடைய கை ரேகைகளில் இருக்கக்கூடிய முக்கோண வடிவ ரேகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பது பற்றி இங்கே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் கைரேகையில் உள்ள முக்கோண வடிவம் என்ன சொல்கிறது எனத் தெரியுமா
கைரேகை ஜோதிடத்தை பொருத்த வரை கைகளில் உள்ள ரேகையை பொருத்து நன்மை தீமைகளை கணித்து சொல்வர். ஒவ்வொருவர் உள்ளங்கைகளிலும் தனித்துவமான வடிவில் ரேகை கோடுகள் அமைந்து காணப்படுகின்றன.

ஆனால் உங்களுக்கு தெரியுமா இந்த ரேகை கோடுகள் இணைந்து நிறைய முக்கோண வடிவங்களை நமது கைகளில் உருவாக்குகிறது. இந்த முக்கோண வடிவங்களைக் கொண்டு நிறைய பலன்களையும் கைரேகை ஜோதிடம் கூறுகிறது. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

நடுவில் முக்கோண வடிவம்
உள்ளங்கையின் நடுப் பகுதியில் முக்கோண வடிவம் அமைந்திருந்தால் நல்லது நடக்கும் என்பதை குறிக்கிறது. இது உங்களுக்கு தொழில் ரீதியாக நடக்கும் நன்மைகளையும், உங்களுக்கு தலைமை பண்பு கிடைக்கும் என்பதையும் குறிக்கிறது. அதே நேரத்தில் திருமண வாழ்க்கை சந்தோஷமாகவும் மன அழுத்தம் இல்லாமல் இருக்கும் என்பதை காட்டுகிறது.

திருமண முக்கோணம்
படத்தில் காட்டியுள்ளவாறு திருமண ரேகையில் முக்கோண வடிவம் அமைந்திருந்தால் உங்கள் திருமண வாழ்க்கை செழிப்பாக இருப்பதை குறிக்கிறது. அதாவது திருமணத்திற்கு பிறகு உங்கள் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். மேலும் திருமணத்திற்கு முன்பு இருந்து வந்த நிதி சம்பந்தமான பிரச்சினைகளும் தீர்ந்து போகும்.

தலை ரேகை
படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் தலை ரேகையில் முக்கோண வடிவம் அமைந்திருந்தால் உங்கள் வாழ்க்கையிலும் கல்வியிலும் வெற்றி பெறும் நபராக விளங்குவீர்கள். சாதகமான செயல்களை புரிந்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

ஆயுள் ரேகை
படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் ஆயுள் ரேகையில் வடிவம் தென்பட்டால் நீங்கள் மிகவும ஆற்றலுடன் செயல்படும் நபராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் செயல்கள் உதவிகள் முதலாளிகளாலும், சக ஊழியர்களாலும் பாராட்டப்படும்.

மணிக்கட்டில் முக்கோண வடிவம்
உங்கள் மணிக்கட்டு பகுதியின் நடுவில் முக்கோண வடிவம் தென்பட்டால் நீங்கள் பிறக்கும் போதே ஆசிர்வதிக்கப்பட்டவராகவும், அதிர்ஷசாலியாகவும் இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications
