For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறந்த தேதியை வைத்து உங்கள் சூரிய எண்ணை கண்டுபிடிப்பது எப்படி? இந்த டிசம்பர் உங்களுக்கு எப்படியிருக்

இந்த டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுடைய தேதிப்படி எப்படி இருக்கும் அவர்களுக்கு என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது. அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

|

மாதங்கள் டிசம்பரிலிருந்து ஜனவரிக்கு செல்லும் மாற்றம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்குமென ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். புதிய ஆண்டு வெளியே வருவதற்கு ஒரு ஓரமாக தயாராக காத்திருக்கும் போது, உங்களை கீழே இழுக்கின்ற விஷயங்களை உதறத் தயாராக இருக்க வேண்டும்.

numerology predictions

மாத எண்கணித கணிப்புகள், டிசம்பர் 2018- க்கான உங்கள் பலன்களின் வருகையைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சன் நம்பர் என்றால் என்ன?

சன் நம்பர் என்றால் என்ன?

டிசம்பர் 2018 க்கான மாத எண்கணித கணிப்புகள் இங்கே உள்ளன. இந்த மாதத்தின் உங்கள் விதியை தெரிந்து கொள்ள உங்கள் சன் நம்பரைப் பாருங்கள்.

சன் நம்பர் என்றால் என்ன? உங்கள் சன் நம்பரை எப்படி கணக்கிடலாம் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், அது மிக எளிதானது. கணக்கிட எளிதானது மற்றும் என்றுமே மாறாதது. நீங்கள் பிறந்த மாதம் மற்றும் தேதியை சேர்க்க வேண்டும், அதன் விளைவாக வரும் கூட்டு எண்ணை ஒற்றை இலக்கமாக குறைக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் மே 24- ல் பிறந்திருந்தால், நீங்கள் தேதி எண் 24 -னுடன் மாத எண் 5 - ஐ சேர்க்க வேண்டும், பின்னர் அதை ஒற்றை இலக்கத்திற்கு (24 + 5 = 29; 2 + 9 = 11; 1 + 1 = 2) குறைக்க வேண்டும்.

MOST READ: கார்த்திகை வளர்பிறை ஆரம்பிச்சிடுச்சு... யாருக்கு நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது? தெரிஞ்சிக்கோங்க...

சன் நெம்பர் 1

சன் நெம்பர் 1

சன் நெம்பர் 1 கொண்ட தனிநபர்களே, இந்த மாத எண்கணித கணிப்புகள் நிலையான பணிச் சூழலைக் கொண்டிருப்பதாக வெளிப்படுத்துவதோடு மறுபுறம், உங்கள் உறவுகளையும் குடும்ப விவகாரங்களையும் கவனிப்பதில் நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை ஆதரித்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் தனித்துவமான நிலையில் இந்த மாதத்தில் இருப்பீர்கள். உங்கள் எண்கணித கணிப்புகள், இந்த மாதம் ஒரு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு சாத்தியம் என்பதை வெளிப்படுத்துகின்றன.

மேலும் உங்களின் பணிச்சுமை அதிகரிக்கும் எனவும் கூறுகின்றது. வணிக மற்றும் நிதி விவகாரங்கள் இந்த மாதம் நன்றாக இருக்கும். நீங்கள் சட்ட சிக்கல்களில் ஈடுபட்டிருந்தால், அதில் முன்னோக்கி நகர இந்த நேரம் சரியானது என்பதை கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. உங்கள் காதல் இந்த மாதம் முழுவதும் சாதகமானதாக இருக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். உறுதிப்பாடே ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

சன் நெம்பர் 2

சன் நெம்பர் 2

இதுவே உங்கள் எண் என்றால், எண்கணித கணிப்புகள் நீங்கள் சுய பரிசோதனை, ஆழ்ந்த சிந்தனை மற்றும் தியானம் அடங்கிய காலகட்டத்தில் நுழைகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த மாதம் உங்களை, உள்வளர்ச்சி மற்றும் ஆன்ம- தேடலை நோக்கிச் செலுத்துகிறது. கடினமாக உழைத்த இந்த வருடத்தில் இந்த மாதம் ஓய்வில் இருப்பீர்கள், இப்போதுதான் உங்களுடைய கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும் நேரம். பகற்கனவு மற்றும் தியானத்தின் மதிப்பைப் புரிந்து கொள்வது கடினம் என்பதை வல்லுநர்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஓய்வான இந்த மாதத்திற்கான வெகுமதி உங்களுக்கு குறைவாகவே இருக்கும்.

சன் நெம்பர் 3

சன் நெம்பர் 3

எண்கணித கணிப்புகள், இந்த மாதம் பல பகுதிகளிலும் பலனளிக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றன. உங்கள் வணிகத்திற்கும், பணத்திற்கும் சரியான மாதம் இது. இந்த மாதம் முழுவதும் நீங்கள் செய்யும் செலவு, மற்றவர்களை ஈர்க்க அல்லது உங்கள் வெற்றியைப் பறை சாற்றுவது பற்றியே இருக்கும். உங்கள் வேலை சூழலில் ஒரு போனஸ் அல்லது ஒரு பதவி உயர்வை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

உங்கள் பணி சார்ந்த துறையில் உங்களின் சில கருத்துக்களை ஊக்குவிக்க சிறந்த மாதம் ஒரு சிறந்த நேரம். மறுபுறம், காதல் மிகவும் சாதகமானது, ஆனால் நீங்கள் எப்படி உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

சன் நெம்பர் 4

சன் நெம்பர் 4

எண் கணித கணிப்புப்படி ஒரு உறவு இந்த மாதத்தில் முடிவுக்கு வரக்கூடும். இது வலி தரக்கூடியது, ஆனால் நன்றியுணர்வின் உணர்வுகள் உள்ளன. கணிப்புகள், உங்கள் உணர்வுகள் ஆழமாக ஓடும் என்று வெளிப்படுத்துகின்றன, ஆனால் நீங்கள் கடினமாக முயற்சி செய்தாலும் கூட அவற்றை வெளிப்படுத்தும் சிரமம் என்பதையும் காட்டுகின்றது. நீங்கள் பாதிக்கப்படக்கூடிய மற்றும் உணர்வுபூர்வமான உணர்வை அனுபவிக்கும் நேரங்களும் இருக்கின்றன.

உங்களைப் பற்றியே நினைத்துக்கொள்வதைவிட வாழ்க்கையில் மற்ற முக்கியமான விஷயங்களுக்கும் நேரத்தையும் சக்தியையும் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விசித்திரமான நிகழ்வுகளில், நீங்கள் உங்கள் செயல்களையும் நோக்கங்களையும் காத்துக்கொள்வீர்கள். திருமணம் ஆகாதவர்கள், இந்த மாதத்தில் தகுதியான யாரோ ஒருவரை இந்த மாத இறுதியில் சந்திப்பீர்கள். மறுபுறம், கமிட் ஆகியுள்ளவர்கள் ஒரு ரோலர்-கோஸ்டர் வகையான உறவு அனுபவத்தைப் பெறுவீர்கள் .

MOST READ: தினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு பசலைக்கீரை சாப்பிட்டால் உடம்புக்குள் என்ன நடக்கும்?

சன் நெம்பர் 5

சன் நெம்பர் 5

டிசம்பர் 2018 எண்கணித கணிப்புகளின்படி இந்த மாதம் முழுவதும் உங்களின் ஆற்றல் மற்றும் உற்சாகம் புதுப்பிக்கப்படும். மாற்றத்திற்கான நிதி வெகுமதி அல்லது ஒரு மேம்பாட்டிற்கான வரவேற்புடன் உங்கள் வாழ்க்கை முன்னோக்கி நகர்கிறது. உங்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான யாராவது அல்லது பலருக்கு நீங்கள் அறிமுகப்படுத்தப்படுவீர்கள் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது உங்கள் எதிர்காலத்திற்கு நேர்மறையான பலன்களைக் கொண்டிருக்கும். இந்த மாதம் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் நெருக்கமாக்கும். இந்த மாதத்தில் நீங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக அடக்கிய சில உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், மாதத்தின் மகிழ்ச்சிக்கு காதல் முக்கியமானது. ஒரு அறிவுசார் மற்றும் ஆன்மீக சவாலாக இருக்கும் புதியவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

சன் நெம்பர் 6

சன் நெம்பர் 6

இந்த மாதத்தில் உங்கள் எண் ஜோதிடத்தின் கணிப்பு , உங்கள் உறவு மற்றும் இதயத்தின் அனைத்து விவகாரங்களுக்கும் உங்கள் கவனம் மாறும் என்று வெளிப்படுத்துகிறது. சக தொழிலாளர்கள் பணி தொடர்பான விஷயங்களைப் பற்றி மட்டுமல்ல, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களிலும் நுழைய முயற்சிக்கும் மாதம் இது . சில வெற்றுப்பணிகளை பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, அல்லது உங்களுக்கு சம்பந்தமில்லாத மோதல்களில் ஈடுபடுகின்ற வாய்ப்புகளும் உள்ளன. நீங்கள் முக்கியமான விவகாரங்களை கையாள்வதில் ஈடுபட்டு, கடுமையான சூழ்நிலைகளை கையாள முடியும்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான உங்கள் உறவைப் பொறுத்தவரையில் நீங்கள் மாற்றமில்லாமல் கடந்த கால அனுபவங்களையே பெறுவீர்கள். இருப்பினும், உங்களுக்காக நீங்கள்தான் நிற்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நிதி விவகாரங்களில், குறிப்பாக கடன்கள் மற்றும் அடமானங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இது ஒரு நல்ல மாதம் ஆகும். மறுபுறம், காதல் நிர்ப்பந்திக்கும், ஆனால் அதே நேரத்தில், அது பணம் சம்பந்தப்படும் போது பிரச்சினைகளை ஏற்படுத்தும் தந்திரமானதாக இருக்க முடியும்.

சன் நெம்பர் 7

சன் நெம்பர் 7

டிசம்பர் 2018 எண்கணித கணிப்புகள், இலகுவாக, விளையாட்டுத்தனமாக உங்கள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரம் இது என்று வெளிப்படுத்துகிறது. விஷயங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும். இந்த மாதம் முற்றிலும் ஓய்வெடுத்து நீங்கள் உங்கள் பேட்டரிகளை ரீசார்ச் செய்ய வேண்டும். உங்கள் படைப்புத்திறன் மேம்படலாம் எனத்தோன்றுகிறது, எனவே உங்கள் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கலாம்.

உராய்வு ஏற்படக்கூடும் என்பதால், மற்றவர்களிடம் எந்தவொரு பிரச்சினையும் கட்டாயமாக்குவதற்கு இது தகுந்த நேரம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விஷயங்களை அதன் சொந்த வேகத்திலேயே நடக்க விடுங்கள். நீங்கள் அதிக வாய்ப்புகள் மற்றும் முன்னேற்றத்தை அனுபவிக்க இந்த மாதத்தில் அதிக ஆற்றலை நோக்கி நெருங்கி வருவதைப் புரிந்துகொள்கிறீர்கள், ஆனால் இந்த கட்டத்திற்கு முன்பாக நீங்கள் ஓய்வெடுப்பதை உறுதி செய்யுங்கள்.

சன் நெம்பர் 8

சன் நெம்பர் 8

டிசம்பர் 2018 எண்கணித கணிப்புகள், இந்த மாதம் வாய்ப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் இரண்டையும் கொண்டு வரும் என்று வெளிப்படுத்துகின்றன. உங்கள் குறிக்கோள்களில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் கடினமாக உழைக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளுக்கான ஒரு சிறந்த மாதமாகும் என்று வல்லுநர்கள் விளக்குகிறார்கள். உங்கள் வேலையை முடிக்க மக்களை கவர்ந்திழுக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த மாதாந்திர எண்கணித கணிப்புகளின் மற்றொரு அம்சம், உங்கள் இயலாமை காரணமாக ஏற்படும் ஏமாற்றமே உங்கள் சொந்த விருப்பத்தை நோக்கி திசைதிருப்பும். ஒரு பொறிக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிற அதே சமயத்தில், உயர்ந்த முயற்சியைத் தொடர நீங்கள் தயாராக இருப்பீர்கள். பொறுமை மற்றும் விடாமுயற்சி இந்த மாதத்தின் முக்கிய வார்த்தைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

MOST READ: பெண்கள் மாதவிடாயின்போது குளிக்கக்கூடாது... ஏன்னு தெரியுமா?

சன் நெம்பர் 9

சன் நெம்பர் 9

டிசம்பர் 2018 எண்கணித கணிப்புகள், இந்த மாதம் மாற்றங்கள் மற்றும் அமைதியின்மை உங்கள் வாழ்க்கையின் வழியில் தென்படும் என்பதை வெளிப்படுத்துகின்றன. நீங்கள் மற்றவர்களுடன் இருக்க வேண்டும் மற்றும் பழகவேண்டும். வீட்டிலிருந்து வெளியூர் செல்லும் ஒரு பயணத்தில், புதிய மற்றும் அற்புதமான நபரைச் சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு ஒரு சில ஆச்சரியங்களைக் கொண்டு வரக்கூடிய மாதமாகும்.

புதிய விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும், எதிர்பாராத ஆதாரங்களிலிருந்து தகவலையும், அறிவையும் பெற உதவும் ஒரு மாறும் நேரமாகும் இந்த மாதம். நீங்கள் ஒரு புதிய திசையில் நகரத் தயாராக இருக்கிறீர்கள் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் ஒரு துணிச்சலான முறையில் இருக்கின்றீர்கள், மேலும் அபாயத்தை எதிர்கொள்வதற்கும் தயாராக உள்ளீர்கள். மறுபுறம், இந்த மாதம் நீங்கள் தைரியம் மற்றும் நெகிழ்வை உருவாக்க வேண்டிய அவசியமிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

numerology predictions for december 2018

Check out what your sun number reveals about your fate for the month,
Story first published: Tuesday, December 11, 2018, 12:02 [IST]
Desktop Bottom Promotion