தேனிலவில் கொடூர கொலை செய்யப்படும் ஜோடிகள்! அதிர்ச்சிக் காரணங்கள்

Posted By:
Subscribe to Boldsky

திருமணம் குறித்தான கனவு எல்லாருக்கும் அபிரிதமாக இருக்கும். தனக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை எப்படியிருக்க வேண்டும் என்ற கனவு அவர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்திடும். இவற்றை விட திருமணம் முடிந்த பிறகு செல்லும் தேனிலவு குறித்த பேச்சு எழாமல் எந்த திருமணமும் நடந்திருக்காது. அந்த அளவிற்கு தற்போது தேனிலவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இன்பமயமான அந்த தேனிலவு எல்லாருக்கும் இன்பத்தை மட்டுமா கொடுக்கிறது. திருமண வாழ்க்கையையே ஏன் வாழ்க்கையையே முடிக்கும் கொடூர நாளாக அல்லவா மாறிவிடுகிறது.

தன் வாழ்க்கைத் துணையால் தேனிலவில் கொல்லப்பட்டவர்களைப் பற்றிய தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சச்சின் :

சச்சின் :

சச்சின் மிஸ்ரா முதலாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். ஆனால் அந்தப் பெண் உறவினர் முறை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறி அவருடைய பெற்றோர் வர்புறுத்தலில் விவாகரத்து நடக்கிறது. இரண்டாவதாக வேறொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டுவிட்டார். இதற்கும் அதே பெற்றோர் தான் காரணம்.

இரண்டாவது மனைவி வந்தும் தன்னுடைய முதல் காதலை சச்சின் மறக்காமல் தொடர்ந்து கொண்டிருந்தார். இதனால் இரண்டாவது மனைவிக்கும் சச்சினுக்கும் இடையில் பிரச்சனை உருவானது.

தேனிலவு :

தேனிலவு :

இரண்டாவது திருமணத்தில் மகிழ்ச்சியில்லாத சச்சின் இரண்டாவது மனைவியை கொல்ல சதிதிட்டம் தீட்டுகிறார். மனைவியிடம் ஆசை வார்த்தை கூறி தேனிலவு செல்லலாம் என்று கூறி மலைப் பிரதேசம் ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கே மீண்டும் முதல் திருமணம் குறித்த பேச்சு எழ வாக்குவாதம் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் கோபமான சச்சின் மனைவியின் தலையில் தயாராக வைத்திருந்த கூறிய கல்லால் ஓங்கி அடிக்கிறார். அத்துடன் மலையின் உச்சியிலிருந்தும் மனைவியை தள்ளிவிட்டு வந்துவிட்டார்.

போலீஸ் :

போலீஸ் :

இரவு போலீஸ் நிலையத்திற்குச் சென்று நீச்சலடிக்க ஆற்றிற்கு சென்றிருந்த போது என் மனைவி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டாள் என்று புகார் அளிக்கிறார். போலீஸும் சொன்ன இடத்திலிருந்து பல கி.மீ., தொலைவு வரை தேடிப்பார்த்து பிணம் கிடைக்கவில்லை. போலீஸ் துருவித் துருவி விசாரித்ததில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார் சச்சின்.

பீட்டர் :

பீட்டர் :

ஆரோரா மற்றும் பீட்டர் ஸ்கிமிட் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சில ஆண்டுகள் கழித்து பீட்டர் ஊர்சுலா என்பவரை திருமணம் செய்து கொள்கிறார்.

பீட்டர் இன்ஸூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் கையாடல் செய்த விஷயம் மனைவிக்கு தெரிய வருகிறது. அதை மனைவி போலீசில் சொல்லிவிடுவதாக மிரட்ட, மனைவியை அழைத்துக் கொண்டு லாங் டிரைவ் செல்லலாம் என்று அழைத்துச் சென்று தண்ணீர் நிரம்பிய ஏரியில் இறக்கிவிடுகிறார்.

கார் ஏரியில் விழுவதற்கு முன் கதவைத் திறந்து வெளியேறிய பீட்டர் நீச்சலடித்து தப்பித்துவிட்டான். உள்ளே சிக்கிய ஊர்சுலா தப்பித்து வந்தாலும் இறக்கும் வரை தண்ணீரில் தலையை முக்கி கொலை செய்கிறான்.

வித்யா லட்சுமி :

வித்யா லட்சுமி :

வித்யா பல ஆண்டுகளாக காதலித்த ஆனந்துடனான திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் குடும்பத்தினர். அதற்கு பதிலாக வீட்டினர் பார்த்த அனந்தராமன் என்ற வசதியான மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தனர், குடும்பத்தினரின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதித்தார் வித்யா.

காதலன் ஆனந்த் கெஞ்சினான். தன்னை ஏமாற்றிவிட்டதாக அழுதான். குடும்பமா காதலா என்று தவித்து முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் தவித்தார் வித்யா. தான் எடுக்கும் முடிவால் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருக்கும் அம்மாவிற்கு ஏதேனும் ஆகிடுமா என்று பயந்தார்.

ரகசியத் திட்டம் :

ரகசியத் திட்டம் :

ஆனந்த் மற்றும் வித்யா ரகசிய திட்டமொன்றை தீட்டினார்கள். அதன் படி, வித்யா மற்றும் அனந்தராமன் திருமணம் நடந்தது. இருவரும் தேனிலவிற்குச் சென்றனர்.

தான் எங்கேயிருக்கிறோம். எங்கே செல்லப்போகிறோம் போன்ற ஒவ்வொரு நகர்வுகளையும் வித்யா காதலனான ஆனந்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தாள்.

கொலை! :

கொலை! :

ஆனந்துடன் அன்புராஜ் என்ற கூட்டாளியும் உடனிருந்தான். தம்பதிகள் போட்டிங் செல்வதற்காக லேக் நோக்கி வர அன்புவும் ஆனந்தும் வித்யாவின் கணவரைத் தாக்கி கத்தியால் குத்தி கீழே விழச் செய்தனர்.

சுற்றும் முற்றும் பார்த்தபடி நோட்டமிட்ட வித்யா கணவன் இறந்துவிட்டான் என்று உறுதியானதும் தன்னுடைய தங்க நகையை கழற்றி ஒருவனிடம் திணித்து கத்திக் கொண்டே ஓடினாள்.

திருடர்கள் :

திருடர்கள் :

தேனிலவிற்கு வந்தோம் இங்கே திருடர்கள் என் கணவரை கொலை செய்துவிட்டு என்னுடைய நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள் என்று அழுதாள். அதற்குள் கூட்டம் சேர காதலனும் அவன் கூட்டாளியும் தப்பித்து ஓடிவிட்டார்கள்.

சற்றுத் தொலைவில் சென்று ஓர் ஆட்டோவில் ஏறி அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றார்கள்.

சிம்ரன் பால் சிங் புல்லர் :

சிம்ரன் பால் சிங் புல்லர் :

சிம்ரன் பால் சிங் புல்லருக்கும் சிம்ரன்ஜீட் கவுர் இருவருக்கும் திருமணமாகி தேனிலவிற்குச் சென்றனர். பால் சிங் புல்லருக்கு மனைவி வேறு யார் மீதோ காதலில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது.

கேட்டார். சண்டையானது மலை முகட்டிலிருந்து மனைவியை தள்ளிவிட்டு அங்கேயே காத்திருந்தார். அவர் இறந்துவிட்டார் என்று உறுதியானதும் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் அதன் பின்னர் பயத்தில் வீட்டிற்குச் செல்லாமல் நண்பர் ஒருவர் வீட்டில் ஒளிந்திருந்தார்.

புகார் :

புகார் :

தேனிலவிற்கு சென்ற தம்பதிகள் திரும்பி வராததைக் கண்டு இரண்டு வீட்டினரும் போலீசில் புகார் அளிக்க... நண்பனின் அப்பா புல்லரைக் காட்டிக் கொடுத்தார். விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக் கொண்டான் புல்லர்.

மைக்கேல் :

மைக்கேல் :

மைக்கேலுக்கு எதுவும் வேகமாக உடனேயே நடக்க வேண்டும். அத்துடன் பணத்தாசை பிடித்த இவன், தோழி ட்ராபகாவை சமாதனம் செய்து திருமணம் செய்து கொள்கிறார்ன். வீட்டில் ட்ராபகா கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் பொய் சொல்கிறான்.

அதோடு ஒரு மில்லியன் டாலருக்கு லைஃப் இன்ஸூரன்ஸ் எடுக்கும்படி மைக்கேல் வற்புறுத்த ட்ராபகா எதிர்கால நலனை கருத்திற்கு கொண்டு சம்மதிக்கிறாள்.

கச்சிதமான கொலை :

கச்சிதமான கொலை :

இன்ஸூரன்ஸ் பணத்தை பெறும் பொருட்டு ட்ராபகாவை கொலை செய்ய முடிவெடுக்கிறான் மைக்கேல். தேனிலவிற்கு அழைத்துச் சென்று மது குடிக்க வைக்கிறான். மது அதிகமாக குடித்ததால் இறந்துவிட்டதாக சொல்லிவிடலாம் என்று அதிக மருந்து குடிக்க வைக்கிறான். அத்துடன் மதுவில் விஷமும் கலந்து கொடுக்கிறான்.

ட்ராபகா இறந்தாள்.

திட்டமிட்டபடியே எல்லாரும் அதீத மதுவினால் நிகழ்ந்த மரணம் என்றே நம்பினார்கள். ஒரு சில வாரங்களிலேயே இன்ஸூரன்ஸ் பணத்தை கேட்டு கடிதம் கொடுக்க சந்தேகம் கிளம்பியது.... விசாரித்து உண்மையை கண்டுபிடித்தார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Newlyweds Who Killed Their Spouses On Their Honeymoons

Newlyweds Who Killed Their Spouses On Their Honeymoons
Story first published: Wednesday, January 3, 2018, 17:15 [IST]