ஆன்மீக சக்தியை நிரூபிக்க, மினிடோர் ஆட்டோவை சுஞ்சுமணியால் கட்டியிழுத்த சாமியார்!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக தங்கள் காதலை, இலட்சியத்தை, அர்பணிப்பை நிரூபிக்க சிலர் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால், இங்கே ஒரு சாமியார் தனது ஆன்மீகத்தையும், அதன் சக்தியையும் நிரூபிக்க வேற லெவல் எல்லைக்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் நமது இந்தியாவில் தான் நடந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த ஓர் சாமியார் தான் தனது அர்பணிப்பு திறமையை உலக மக்களுக்கு நிரூபிக்க கொஞ்சம் விவகாரமான இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், இதன் மூலம் வணங்கும் கடவுளின் சக்தியையும் நிரூபிக்கப் போவதாக கூறி இந்த செயலை செய்துள்ளார் இந்த சாமியார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலகாபாத்!

அலகாபாத்!

அலகாபாத் மகே மேளா எனும் இடத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த மகே மேளா எனும் நிகழ்வு நடக்கும் இடத்தில் உலகின் பல்வேறு இடங்களை சேர்ந்த சாமியார்கள் கூடுகிறார்கள். இவர்கள் தொடர்ந்து 45 தங்கள் கடவுளை வணங்குவது வழக்கம்.

Image Courtesy

நதிகளில் நீராடல்...

நதிகளில் நீராடல்...

மகே மேளா நடக்கும் இடத்தில் எப்போதும் பெரும் திரளென மக்கள் கூட்டம் இருக்கும். நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மக்கள் இங்கே வருகிறார்கள். மேலும், இங்கு வருகை தரும் சாமியார்கள் கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி போன்ற நதிகளில் நீராடுவது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் இந்த மகே மேளாவில் பல ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்று இந்த நதியில் புனித நீராடுகிறார்கள். குறிப்பிட்ட நாட்களில் மட்டும் இந்த மகே மேளா நடைபெறுகிறது.

Image Courtesy

பல்வேறு நிகழ்வுகள்

பல்வேறு நிகழ்வுகள்

இந்த மகே மேளாவில் பங்குப்பெற வரும் சாமியார்கள் மக்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்வது வழக்கம். இவர்கள் இங்கே தங்கள் உடல் வலிமை மற்றும் மன வலிமையை நிரூபிக்கவும் சில செயல்களில் ஈடுபடுகிறார்கள். தன்னை தானே கடவுள் என கூறிக் கொண்டு பல சாமியார்கள் பல செயல்களை இங்கே செய்கிறார்கள்.

ஆனால், ஒரு சாமியார் மட்டும் கொஞ்சம் விசித்திரமாக யோசித்து உலக அளவில் வைரல் ஆகியுள்ளார்.

Image Courtesy

சுஞ்சுமணியால்...

சுஞ்சுமணியால்...

இந்த சாமியார் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற தெளிவான தகவல்கள் கிடைக்கப்படவில்லை. ஆனால், இவரது படங்கள் இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது. இவர் தனது ஆணுறுப்பு மூலமாக ஒரு சிறிய மினிடோர் வாகனத்தை இழுத்து ஸ்டண்ட் செய்துள்ளார்.

பொதுவாக கயிறு கட்டி இழுப்பார்கள். ஆனால், இவர் இப்படியாக இழுத்து சாகசம் செய்துள்ளார்.

பொதுவாக சாமியார்கள் யோகா செய்வார்கள், தியானம் செய்வார்கள். அல்லது லிங்கம் வரவழைக்கிறேன், விபூதி எடுக்கிறேன், நோய்களை குணப்படுத்துகிறேன், பேய் ஒட்டுகிறேன் என்பார்கள். ஆனால், இந்த சாமியாரின் இந்த செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, சர்வதேச ஆங்கில ஊடகங்கள் வரை இதன் மூலம் பிரபலம் அடைந்துள்ளார் இந்த சாமியார்.

Image Courtesy

மக்கள் கூட்டம்!

மக்கள் கூட்டம்!

பல்வேறு மக்கள் இந்த சாமியாரின் இந்த விசித்திரமான செயலை கண்டுள்ளனர். இந்த வழக்கத்திற்கு மாறான நிகழ்வை சிலர் வியந்தும், சிலர் அதிர்ந்தும் கண்டுள்ளனர்.

மேலும், இந்த செயலை செய்யும் போது அந்த சாமியார் வெறும் செருப்பும், கழுத்தில் மணிகளும் மட்டுமே அணிந்திருந்தார். நிர்வாண கோலத்தில் தனது வலிமையை நிரூபித்துள்ளார் இந்த சாமியார்.

Image Courtesy

இது முதல் முறை அல்ல...

இது முதல் முறை அல்ல...

இது போன்ற நிகழ்வு நமது உலகில் நடப்பது இதுவே முதல் முறை அல்ல. இதற்கு முன்பு உலகின் சில பகுதிகளில் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. கடந்த 2014ம் ஆண்டும், ஒரு ஆன்மீகவாதி அதிக எடை உள்ள ஒரு பொருளை தனது ஆண்குறி மூலம் தூக்கிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு சில சாதனைகள்...

வேறு சில சாதனைகள்...

இந்த விசித்திர சாமியார் ஆண்குறி மூலம் மினிடோர் ஆட்டோவை இழுத்தது போல, வேறு சில சாமியார்களும் சில வினோத சாதனைகள் செய்துள்ளனர், ராதே ஷ்யாம் பிரஜபதி எனும் சாமியார் 8 மணி நேரம் 5நிமிடங்கள் 5 நொடிகள் அசையாமல் நின்று உலக சாதனை செய்தார்.

மேலும், இவரை போலவே, ராஜிகுமார் சக்ரபூர்த்தி என்பவர் 11 மணிநேரம் 5 நிமிடங்கள் சுவரை ஒட்டி அமர்ந்து சாதனை செய்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sadhu Pulled A Truck With His Penis To Justify His Religious Devotion!

Sadhu Pulled A Truck With His Penis To Justify His Religious Devotion