For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஃபீஸில் சுய இன்பம் காண #Masturbation ப்ரேக் எடுத்து வந்த பெண்மணி!

ஆஃபீஸில் சுய இன்பம் காண #Masturbation ப்ரேக் எடுத்து வந்த பெண்மணி!

By John
|

ஐ.டி, ஊடகம், தொழிற்சாலை, தினக்கூலி என எந்த துறை, எந்த தொழிலாக இருந்தாலும் வேலைக்கு இடையே சோர்வு ஏற்படுவது இயல்பு தான். இது இயற்கை. அந்த சோர்வை போக்க சிலர் காபி, டீ, குடிப்பார்கள், சிலர் புகைப்பார்கள். சிலர் உடன் பணிபுரியும் நண்பர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் அரட்டை அடிப்பார்கள். சிலர் கிசுகிசு பேசுவதும் உண்டு.

Nadia Bokody, Sex Positive Journalist Who Takes Masturbation Breaks During Office Hours!

ஆனால், எங்காவது சோர்வை போக்கிக் கொள்ளவும், சுறுசுறுப்பாக வேலையில் தொடர்ந்து இயங்கவும் சுய இன்பம் காண்பதை பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

ஆம்! ஐரோப்பியாவை சேர்ந்த ஒரு பெண்மணி அலுவலகத்தில் வேலை சார்ந்த சோர்வில் இருந்து ரிலாக்ஸாக உணர இதை தான் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்துள்ளார். மேலும், இதனால் தான் பெற்ற அனுபவம் மற்றும் தாக்கங்கள் குறித்தும், அறிவியல் சார்ந்த தகவலும் பகிர்ந்திருக்கிறார். அதுக்குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நதியா!

நதியா!

நதியா போகோடி, தாம்பத்தியம் குறித்து கட்டுரைகள் எழுதிவருபவர். இவர் தான் வேலை செய்யும் இடத்தில் சுய இன்பம் காண்பேன் என்று பதிவிட்டு பலரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறார்.

34 வயதுமிக்க நதியா, வேலை செய்துக் கொண்டிருக்கும் போது சோர்வாக உணர்ந்தாலும், வேலை செய்ய முடியாமல் உளரீதியாக தடைப்பட்டு போனாலும், அல்லது செக்சுவலாக விரக்தியடைந்தாலும் காபி பிரேக் சென்றுவிடுவார். ஆனால், அந்த ப்ரேக் நேரத்தில் இவர் எடுத்துக் கொள்வது காபி அல்ல, வேறொன்று.

பத்து நிமிடம்!

பத்து நிமிடம்!

என் அலுவலகத்தில் சோர்வாக இருக்கும் போது அல்லது ப்ரேக் நேரங்களில் சக ஊழியர்கள் பத்து நிமிடங்கள் காபி ப்ரேக் செல்வார்கள். ஆனால், நான் சுய இன்பம் காண்பேன்.

மத்திய உணவு இடைவேளையில், அலுவலகம் அருகிலேயே வீடு அமைந்திருந்த காரணத்தால் உடனே வீட்டுக்கு சென்று சுய இன்பம் கண்டு திரும்புவாராம். சில சமயம் நேர பற்றாக்குறை இருந்தால், அலுவலக ரெஸ்ட்ரூமிலேயே சுய இன்பம் காண்பேன் என்றும் இவர் தனது பதிவில் குறிபிட்டிருக்கிறார்.

மன அழுத்தம் குறையும்!

மன அழுத்தம் குறையும்!

10 -15 நிமிஷம் ப்ரேக்கில் சுய இன்பம் காண்பது புத்துணர்ச்சி அடையவும், மன அழுத்தம் குறையவும் உதவுகிறது என்று நதியா குறிப்பிடுகிறார். மேலும், இது சார்ந்து அறிவியல் பூர்வமான தகவல்களையும் கூறி தான் ஈடுபடும் செயல் சரியானது என்று நியாயப்படுத்துகிறார் நதியா.

ஆய்வறிக்கை!

ஆய்வறிக்கை!

ஜர்னல் ஆப் செக்ஸுவல் மெடிசன் என்ற ஆய்வு பத்திரிகையில் சுய இன்பம் அல்லது உச்ச்சகக்ட்ட இன்பத்தை அடையும் பொழுது மூளை புத்துணர்ச்சி அடைகிறது. சுடோகு மற்றும் குறுக்கெழுத்து போட்டிகளில் ஈடுபடுவதை காட்டிலும் இவை நல்ல பயனளிக்கின்றன என்று ஆய்வு அறிக்கைகள் கூறுவதாக நதியா குறிப்பிட்டுள்ளார்.

மேம்பாடு!

மேம்பாடு!

உடலுறவில் உச்சகட்டத்தை எட்டும் போதும், சுய இன்பம் காணும் போதும் இரத்த ஓட்டம் உத்வேகம் அடைந்து மூளைன் ஒவ்வொரு பகுதியிலும் சீராக பாய்கிறது. இந்த நேரத்தில் மனநலம் மேம்படுகிறது. சுறுசுறுப்பாக இயங்க துவங்குகிறது.

பொதுவாகவே உணவு இடைவேளைக்கு பிறகு 3 மணி அளவில் ஊழியர்கள் சோர்வாக உணர்வார்கள். அந்த நேரத்தில் நான் சுய இன்பத்தில் ஈடுபட்டு என்னை நானே உத்வேகப்படுத்திக் கொள்கிறேன். சுறுசுறுப்பாக மீண்டும் வேலையில் இயங்க துவங்குகிறேன் என்று விளக்கம் அளிக்கிறார் நதியா.

ஒழுங்குமுறை!

ஒழுங்குமுறை!

அலுவலகத்தில் சுய இன்பம் காண்பது ஒழுங்குமுறை நாவடிக்கைகளுக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால், அலுவலகத்தில் வேலையை சரியாகவும், சுறுசுறுப்பாகவும் செய்ய வேண்டியது அவசியம். எனவே, இந்த ஒழுங்கு முறைகள் குறித்தெல்லாம் நான் கவலைப்படவில்லை என நதியா கூறி உள்ளார்.

உரிமை இல்லை!

உரிமை இல்லை!

மேலும், அலுவலகத்தில் மூடப்பட்ட ரெஸ்ட்ரூம் உள்ளே நான் என்ன செய்கிறேன் என்று அறிந்துக் கொள்ள எந்தவொரு சக ஊழியருக்கும் உரிமை இல்லை. ப்ரேக் டைம் என்பது அனைவருக்கும் அளிக்கப்படும் இடைவேளை அந்த நேரத்தில் எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன் என தன் பதிவில் தெரிவித்துள்ளார் நதியா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nadia Bokody, Sex Positive Journalist Who Takes Masturbation Breaks During Office Hours!

Nadia Bokody, Sex Positive Journalist Who Takes Masturbation Breaks During Office Hours!
Desktop Bottom Promotion