Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
பெரும் பொருட்செலவில் நடந்த இந்திய பிரபலங்களின் திருமண விழாக்கள்- #1 552 கோடி!
பெரும் பொருட்செலவில் நடந்த இந்திய பிரபலங்களின் திருமண விழாக்கள்- #1 552 கோடி!
சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள். புகைப்படம், வீடியோ எடுப்பது போய், அவுட் டோர் ஷூட், சினிமாட்டிக் ஷூட், கேண்டிட் போட்டோகிராபி, ட்ரோன் கொண்டு ஷூட் செய்வது, பாடல், நடனம், கச்சேரி என்று தூள் கிளப்புகிறார்கள்.
சாமானிய மக்களின் திருமணமே இப்படி இருந்தால், பிரபலங்களின் திருமண வைபவம் எப்படி இருக்கும். அவர்கள் என்னென்ன செலவு செய்வார்கள், ஆடம்பரங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் இந்திய நடிகர், நடிகைகள் மற்றும் தொழிலதிபர்களின் வீட்டு திருமணத்தின் செலவு என்ன என்ற டாப் - 10 பட்டியலை நாம் இந்த தொகுப்பில் காணலாம்...

ஷாருக் - கெளரி!
ஷாருக் திருமணம் நடந்த காலத்தில் இருந்த பண மதிப்பு பெரும் வேறுபாட்டுக்கு உரியது. ஆனால், அந்த காலத்தில் இந்திய திரைத்துறை நட்சத்திரத்தின் ஆடம்பரமான, மிகுந்த பொருட்செலவில் நடந்த திருமணமாக காணப்பட்டது ஷாருக்கின் திருமண விழா.திருமண செலவு - ஒரு கோடி!

ஆமிர் - கிரண்!
ஆமிர் கான் லகான் திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது, தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய கிரணிடம் பிரபோஸ் செய்தார். ஆமிருக்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் பெரும் பொருட்செலவில் நடக்கவில்லை. ஆயினும் இவர்களது திருமண செலவு இரண்டு கோடிகளை தாண்டியது.

ஹ்ரித்திக் - சூசன்!
இந்தியாவின் சூப்பர் ஹாட் நடிகர். பல பெண்களின் கனவுக் கண்ணன் தனது தோழியும், காதலியுமான சூசனை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமண வைபவ செலவு மூன்று கோடிகளை தாண்டியது.

அக்ஷை - ட்விங்கிள்!
அடிமட்டத்தில் இருந்து தன் திறமையால் உயரம் தொட்டவர் அக்ஷை குமார். இவரும் ட்விங்கிள் கண்ணாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களது திருமணம் கடந்த 2001ம் ஆண்டு நடந்தது. இந்த திருமண விழாவிற்கான செலவு 3.5 கோடியை தாண்டியது.

ஷில்பா - ராஜ்!
ஷில்பாவும் அக்ஷையும் காதலித்து வந்தனர். ஆனால், அக்ஷை ஷில்பாவை காதலித்து வந்த அதே நேரத்தில் ட்விங்கிளை காதலித்து வருவதை அறிந்த ஷில்பா அக்ஷையை பிரிந்தார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே ஷில்பா தொழிலதிபர் ராஜை திருமணம் செய்தார். என்.ஆர்.ஐ'யான ராஜ் குந்த்ரா - ஷில்பாவின் திருமண வைபவ செலவு நான்கு கோடிகளுக்கும் மேலானது.

அர்பிதா - ஆயுஷ்!
சல்மான் கான் தான் திருமணம் செய்துக் கொள்ளவில்ழலி என்றாலும், தன் தந்தை தத்தெடுத்து வளர்த்த தங்கை அர்பிதாவின் திருமணத்தை பாலிவுட்டே வியக்கும் வண்ணம் நடத்தினார். அர்பிதாவிற்கும் ஆயுஷிற்கும் நடந்த திருமண வைபவத்தின் செலவு ஐந்து கோடிகளை தாண்டியது.

அவந்திகா - இம்ரான்!
அமீர்கானின் இல்ல திருமணம் இது.நடிகரும் அமீரின் உறவினருமான இம்ரான் - அவந்திகா திருமணம் பாலிவுட் பிரபலங்களின் நல் வாழ்த்துக்களுடன் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தின் செலவு 5.2 கோடிகளுக்கும் மேலானது.

ஜெனிலியா - ரித்தேஷ்!
பத்து வருடங்களாக காதலித்து வந்த சூப்பர் குட் காதல் புறாக்கள் திருமண பந்தத்தில் இணைந்தன. இவர்கள் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இரண்டுமுறை திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் திருமண செலவு 5.5 கோடிகளை தாண்டியது.

ஐஸ்வர்யா - அபிஷேக்!
பாலிவுட்டே மிகவும் எதிர்பார்த்த மற்றும் வியந்த திருமணம் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் திருமணம். காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டது இந்த ஜோடி. குரு திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது இவர்கள் நடுவே காதல் மலர்ந்ததாக அறியப்படுகிறது. இவர்களது திருமண செலவு 6 கோடிகளுக்கும் மேலானது.

கரீனா - சயப்!
இரண்டாவது திருமணமான இருந்தாலும், பாலிவுட்டின் ராயல் திருமணம் சயப் மற்றும் கரீனாவுடையது. தங்கள் இருவருக்கும் நெருக்கமான பாலிவுட் நண்பர்களை மட்டுமே அழைத்து திருமணம் செய்துக் கொண்டனர். பிரம்மாண்டமான முறையில் ராஜ திருமணம் போல நடந்தது இந்த வைபவம். இந்த திருமணத்தின் மொத்த செலவு 10 கோடிகளை தாண்டியது.

ஜூனியர் என்டிஆர் - லட்சுமி!
ஜூனியர் என்டிஆர் - லட்சுமி திருமணம் சர்ச்சைகளை தாண்டி நடந்தது. லட்சுமி திருமண வயதை எட்டவில்லை, சட்டவிரோதமாக இந்த திருமணம் நடக்கிறது என்று எதிர்ப்புகள் கிளம்பின. கல்யாண மண்டபம் செட்டு போட்டு நடந்தது. கலை இயக்குனர் ஆனந்த் சாய் திருமண மண்டப செட் அமைத்தார். நிஜமாகவே ஒரு திரைப்படத்தை போல நடந்தது இந்த திருமணம். இவர்களது திருமண செலவு 18 கோடிகளை தாண்டியது.

மித்தல் குடும்ப திருமணம்!
இந்தியாவில் நடந்த மிக பிரம்மாண்ட திருமணம் என்ற பெயர் பெற்றது கோடீஸ்வரர் லட்சுமி மித்தலின் இல்லத்திருமணம். லட்சுமி மித்தலின் மகள் வனிஷா அமித் பாட்டியா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்தின் மொத்த செலவு 350 கோடிகளை தாண்டியது.

சஹாரா குடும்ப திருமணம்!
கடந்த 2004ம் ஆண்டு சஹாரா இந்தியா நிறுவனத்தின் முதலாளி சுப்ரதா ராய் தன் மகன்களுக்கு 552 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணம் லக்னோவில் உள்ள சஹாரா விலேஜ்ஜில் நடந்தது. இந்தியா மற்றும் உலகளவிலான பெரும் பிரபலங்கள், தொழிலதிபர்கள் இந்த திருமணத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். விருந்தில் மட்டும் 101 வகை உணவுகள் பரிமாறப்பட்டன.

அம்பானி குடும்ப திருமணம்!
சமீபத்தில் நடந்து முடிந்த முகேஷ் அம்பானியின் மகளின் திருமணம் மிக ஆடம்பரமாக நடந்து முடிந்தது. இந்தியாவின் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் அனைவரும் பங்கெடுத்துக் கொண்டனர். அரசல்புரலசாக இந்த திருமணத்தின் செலவு 700 கோடிகளை தாண்டியதாக கூறினாலும். அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.



Click it and Unblock the Notifications











