For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாலை அமைக்கிறோம் என்ற பெயரில் இன்னும் எத்தனை மரங்களைத் தான் வெட்டுவீர்கள்?

சாலை அமைக்க, கட்டிடங்கள் கட்டுவதற்கி என பல்வேறு காரணங்கினால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரம் வெட்டப்பட்டிருக்கிறது

|

பசுமை வழிச்சாலை என்ற பெயரில் சென்னையிலிருந்து சேலம் வரையிலான அமைக்கப்படுகிற சாலைக்கு பயங்கர எதிர்ப்புகள் நிலவி வருகிறது. இந்த எதிர்ப்புகளுக்கு முக்கிய காரணிகளாக கூறப்படுவது வயல்வெளிகளை எல்லாம் ஆக்கிரமித்து சாலை அமைக்கிறார்கள். இந்த சாலை அமைப்பதற்காக வழியில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி விழச் செய்கிறார்கள்.

மக்களின் பயங்கர எதிர்ப்பையும் மீறி பத்தாயிரம் கோடி செலவில் இந்த சாலையை எப்படியும் அமைத்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறது அரசு, இதற்காக நிலம் கையகப்படுத்தும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் மக்கள் தங்களால் முடிந்த அளவு நிறைய எதிர்ப்புகளை காட்டி வருகிறார்கள்.

சுமார் 274 கி.மீ தொலைவு அமையவுள்ள இந்த சாலையில் 250 கி.மீ தூரம் வரையில் வனப்பகுதியில் அமைக்கப்பட இருக்கிறது. சென்னை தாம்பரத்திலிருந்து தர்மபுரி மாவட்டம் அரூர் வரையிலான சாலையை 179பி என்றும் அரூர் முதல் சேலம் வரையிலான சாலையை 179ஏ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இது குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சாலைக்கான அவசியத்தையும், எதிர்காலத்தை திட்டமிட்டு இப்போதிருந்தே இந்த முயற்சிகளில் இறங்கியிருப்பதாக சொல்லியிருந்தார். அதிகரிக்கும் போக்குவரத்திற்கு ஏற்ப சாலை வசதிகளையும் மேம்படுத்தி தரவேண்டும் என்றிருந்தார்.

#2

#2

இப்போது இருக்கும் நெடுஞ்சாலையை 30 மீட்டர் அகலத்திற்கு அகலப்படுத்தினால் தேவைப்படுகிற 2200 ஹெக்டேர் அளவிற்கு கையகப்படுத்த வேண்டிய இடத்தில் இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்தின் படி 1900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

அதோடு 2200 ஹெக்டேர் நிலைத்தினை கையகப்படுத்தி விரிவாக்கம் செய்தால் சுமார் நாற்பதாயிரம் வீடுகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.

#3

#3

மொத்த நீளமான 277 கிலோமீட்டர் 9.9 கிலோமீட்டர் தூரம் வரை வனப்பகுதியில் செல்கிறது. அதாவது கையகப்படுத்தும் மொத்தம் 1900 ஹெக்டேரில் 49 ஹெக்டேர் வனப்பகுதி வழியே செல்கிறது. 70 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிற இந்த சாலை வனப்பகுதிக்குள் 50மீட்டராக குறைக்கப்பட்டு சாலை அமைக்கப்படப்போகிறது.

இது தவிர வனத்தில் கையகப்படுத்திய நிலத்திற்கு ஈடாக அரசு புறம்போக்கு நிலத்தில் காடு வளர்க்கப்படும், வன விலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாது, இந்த சாலையில் சுமார் மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று ஏகப்பட்ட உறுதிமொழிகள் வழங்கியிருந்தார் தமிழக முதல்வர்.

#4

#4

இந்தியாவில் அதிக தாதுக்கள் கொண்ட மலை என்று புகழப்படும் மலையான கஞ்சமலையிலிருந்து தாதுக்களை சுரண்டுவதற்காக, சேலத்தில் செயல்படுகிற சேலம் உருக்காலையை கைப்பற்ற பல்வேறு நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன.

முதல்வர் கூறியது போல குறைவான நிலங்கள் அல்ல அதை விட பன்மடங்கு அதிகமான சாலைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. குறிப்பாக பெரும்பாலானவை விவசாய நிலங்கள் என்ற சர்ச்சையும் நிலவி வருகிறது. மேலும் இந்த புதிய எட்டுவழிச் சாலையினால் டோல் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பாதிக்குப் பாதி பயண நேரம் குறையும் என்று சொல்லப்படுகிறது ஆனால் மிக அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரம் குறையலாம் என்கிறார்கள் மக்கள்.

 #5

#5

இப்படி பல சர்ச்சைகளுடன் மக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சேலம் எட்டுவழிச்சாலை பணிகள் நடந்துக் கொண்டிருக்கும் போது இதே போல இந்தியாவின் இன்னொரு பகுதியிலும் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த சாலைபணிக்காக சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்களை வெட்டப்படப்போகிறது.

Image Courtesy

#6

#6

மும்பை- நாக்பூர் இடையே 701 கி.மீ தொலைவில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டிக்கிறது இவற்றில் 258 கி.மீ சாலைக்காக தான் ஒரு லட்சம் மரங்கள் வரையில் வெட்டப்பட்டிருக்கிறது. இந்த சாலையின் பத்து கிலோமீட்டர் வரை இரண்டு வனவிலங்கு சரணலாயத்தினை கடந்து செல்கிறது.

இது தவிர 166 ஹெக்டேர் காட்டு வழியை இந்த சாலை கையகப்படுத்தப் போகிறது.

#7

#7

149 கிராமங்களை கடந்து செல்லக்கூடிய இந்த சாலையை அமைக்க சுமார் நாற்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இதனை மொத்தம் ஐந்து பேக்கேஜ்களாக பிரித்து இந்த சாலையை அமைக்கிறார்கள்.

இந்த மொத்த செலவும் விதர்பா மற்றும் மரத்வாடாவிலிருந்து மும்பை செல்லும் பயண நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்குமாம். இத்தனைக்கும் விதர்பா மற்றும் மரத்வாடா மிகவும் பின் தங்கிய மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.

#8

#8

டெல்லியில் உள்ள அரசாங்க அதிகாரிகள் தங்கும் சவுத் டெல்லியில் ஏழு காலனிகளில் வீடு மற்றும் காம்ப்லெக்ஸ் கட்டுவதற்காக சுமார் பதினான்காயிரம் மரம் வரை வெட்டப்பட்டிருக்கிறது. இது குறைவான எண்ணிக்கை இருபதாயிரத்திற்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன என்று கூறி பலரும் வழக்கு தொடுத்தார்கள். இந்நிலையில் மரத்தை வெட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

More Than One Lakh Trees are Cut Down

More Than One Lakh Trees are Cut Down
Story first published: Friday, June 29, 2018, 13:42 [IST]
Desktop Bottom Promotion