Latest Updates
-
பங்குனி மாத ராசி பலன் 2026 - இந்த ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது?
2018 ஜூன் மாதத்திற்கான ராசி பலன்களை எங்கள் ஜோதிட வல்லுநர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். துலாம் ராசிக்குரிய மாதப் பலன்களை இங்கே விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
2018ம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. ஆம். இந்த ஆண்டினுடைய 6 ம் மாதத்தின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம். இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுநரால் கணித்துத் தரப்பட்டுள்ளது. இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

ஆளுமைமிக்க துலாம் ராசியே!
அழகான கவர்ந்திழுக்கும் ஆளுமை திறன் கொண்ட துலாம் ராசி அன்பர்களே
இந்த மாத உங்களுக்கு நேர்மையாக இருப்பதோடு சில இன்ப நிகழ்வுகள் நடந்து மனதை இன்புறச் செய்யும். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களுக்கும் உங்கள் உள்ளுணர்வுக்கும் இடையே ஏற்படும் மோதல்களால் நீங்கள் குழப்பமடைவீர்கள். எனவே அத்தகைய மோதல்களின் ஆணி வேரை புரிந்து செயல்படுவது நல்லது. இது உங்கள் வாழ்க்கை பாதையை சரியான நிலைக்கு வழி நடத்திச் செல்லும்.
உங்கள் இயற்கையான மென்மை குணத்தை யாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதீர்கள். உங்கள் சமநிலை திறமை தொழிலையும் குடும்பத்தையும் சரியான சமநிலையில் வைக்க உதவும். இதனால் உங்களுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது. வேலையை முடிப்பதிலே நல்ல கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்கு கவனச் சிதறல்கள் இருந்தாலும் உங்கள் லட்சியத்தை அடையாமல் விட மாட்டீர்கள்.
இந்த மாதத்தின் நடுப்பகுதியில் நிலவும் கிரகண நிலை உங்கள் தொழில் பாதையை மாற்றும்.நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் உங்கள் வெவ்வேறு திறமையை வெளிப்படுத்த இயலும். உங்கள் வாழ்வில் உள்ள முக்கியமான மனிதர்களிடம் இது குறித்து ஆலோசித்து கொள்வது கூட உங்களுக்கு சரியான பாதையை காண உதவும். இப்பொழுது உங்கள் ராசிக்கான தொழில், காதல் வாழ்க்கை, பொருளாதாரம் மற்றும் உடல் நலம் இவை குறித்து விரிவாகக் காணலாம்.

உடல் நலம்
இந்த மாதத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தை விட மன ஆரோக்கியத்தை கவனமாக பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆன்மீக பாதை நீங்கள் தினசரி சந்திக்கும் மனக் குழப்பங்களை தவிர்த்து ஒரு தெளிவு பெற உதவும். உடல் உபாதைகளை நீங்கள் இந்த மாதம் சந்திக்காவிட்டாலும் ஆரோக்கியமான உணவு, உடற் பயிற்சி மேற்கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் பிரச்சினைகள் நீங்கும். குதிக்கும் உடற்பயிற்சிகள், வானத்தில் டைவிங் போன்றவை
உங்கள் உடல் நலத்தை பேணிக் காக்கும். இந்த மாத இறுதியில் சமூக தொடர்பு மூலம் மன அழுத்தத்தை நீக்கி ரிலாக்ஸ் ஆவீர்கள்.

தொழில்
இந்த மாதத்தில் புதன் உச்சத்தில் இருப்பதால் தொழில் ரீதியாக நிறைய வாய்ப்புகள் உங்களை வந்து சேரும். வேலை வாய்ப்புகள் உங்கள் கதவுகளை வந்து தட்டும். ஆனால் முடிவுகளை கவனமாக எடுப்பது பாதிப்புகள் வராமல் தடுக்க உதவும். உங்கள் இதயத்தை பின் தொடருங்கள் மன அமைதி கிடைக்கும், உங்கள் மூளையை பின் தொடருங்கள் வலிமை பெறுவீர்கள். பிறகு சாதனையும் உங்கள் பக்கம் தான்.
தகவல் தொடர்பு வழி வேலையில் பணிபுரிபவர்களுக்கு சக ஊழியர்களிடம் இடையே பிளவு ஏற்படலாம். இந்த மாதிரியான பிரச்சினைகளை முதிர்ச்சியான மன நிலையில் சந்திக்க முற்படுங்கள். அதிக வேலைப்பளு இருக்காது இருப்பினும் ஸ்பெஷல் வேலைகளுக்காக நீண்ட நேரம் வேலை பார்க்க வேண்டியதிருக்கும். சக ஊழியர்களுடன் பகிர்ந்து வேலை செய்வது நன்மை அளிக்கும்.

பொருளாதாரம்
நீங்கள் பொருளாதாரத்தை சமாளிக்க கொஞ்சம் உங்கள் விதிகளை வளைத்தாக வேண்டும்.ஆனால் பணத்தை செலவழிப்பதில் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். வெவ்வேறு வழிகளில் இருந்து பண வரவு வந்து சேரும். தேவையற்ற செலவுகளில் இருந்து கொஞ்சம் தள்ளி இருங்கள். பரஸ்பர முதலீடுகள் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு உங்கள் கைக்கும் நல்லபடியாக வந்து சேரும். மற்றவர்களுக்கு பணம் கொடுப்பது, நண்பர்களுக்கு கடன் கொடுப்பது உங்களுக்கு இறுக்கத்தை ஏற்படுத்தும். மேலும் திரும்பப் பெறவும் கஷ்டப்படுவீர்கள்.
உங்கள் பொருளாதார நிபந்தனைகளை சரியாக புரிந்து கொண்டு கையாண்டாலே போதும் திருப்திகரமாக இருக்கும். இந்த மாதம் 22 ஆம் தேதிக்கு பிறகு பொருளாதார நிலை வலுவடையும்.

காதல் வாழ்க்கை
இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை மின்சாரம் பாய்வது போல் இருக்கும். உங்கள் துணையுடன் கசப்பான இனிமையான காதல் சுவையை அனுபவிப்பீர்கள். இது உங்களுக்கு இடையே புரிந்து கொள்ளும் உணர்வை அதிகரித்தாலும் சண்டைகளும் கசப்பும் பெருகும். இந்த சண்டை காலப்போக்கில் மறைந்து ஒருவரை ஒருவர் இல்லாமல் வாழ முடியாது என்பதை உணர்ந்து காணாமல் போகும். சூரிய கிரகணம் காரணமாக கல்யாணம் ஆகாதவர்களுக்கு துணை கிடைப்பது சற்று சிரமம் உண்டாகும். ஆனால் அதன் பிறகு பார்த்த கணத்திலே காதல் பிறந்து அழகான துணை கிடைக்கலாம். துலாம் ராசிக்காரர்கள் பொதுவாகவே உணர்வு மிக்க காதலர்கள், எனவே அவர்கள் தங்கள் காதலுக்காக எதையும் செய்து ரசிப்பார்கள். ஆனால் இவர்களைப் போல் துணையின் ஈடுபாடு இல்லாத காரணத்தால் நிறைய நேரங்களில் இவர்கள் ஏமாற்றத்தை சந்திப்பார்கள். திருமண வாழ்வில் விரைவில் நல்ல செய்தி தேடி வரும். இது உங்கள் இருவருக்கிடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கும். காதல் வாழ்வும் சிறக்கும்.

இந்த மாத அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான நிறங்கள் :பிங்க் மற்றும் பச்சை
அதிர்ஷ்டமான எண்கள் :4,6,13மற்றும் 15



Click it and Unblock the Notifications











