Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இதுவரை பொறுமையின் சிகரமக இருந்த துலாம் ராசிக்கு இந்த மே மாதம் எதில் கவனமாக இருக்கணும் தெரியுமா?
துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உறவு, ஆரோக்கியம், தொழில் போன்றவை சிறப்பாக அமையும் காலம் இந்த மே மாதம். ஆனால் நிதி நிலைமை உங்களை கொஞ்சம் ஆட்டுவிக்கலாம்.
துலா ராசியினர் மென்மையாக பேசும் தன்மைக் கொண்டவர்கள். கம்பீரமான நடத்தைக் கொண்டவர்கள். எப்போதும் எல்லோருக்கும் உதவியாக இருப்பவர்கள். வீண் சண்டை மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லாதவர்கள். ஆனால் சில விஷயங்களில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்த இந்த கணிப்புகள் தேவைப்படலாம்.
துலா ராசியினருக்கு இந்த மே மாதம் எப்படி இருக்கும் என்பதை துல்லியமாகக் கணித்துக் கொடுத்திருக்கிறார்கள் எங்கள் ஜோதிட வல்லுனர்கள். இந்தப் பதிவைப் படித்து அவற்றைப் பற்றி முழுவதும் அறிந்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியம்
இந்த மாதம் முழுவதும் உங்கள் ஆரோக்கியத்தில் எந்த ஒரு குறையும் இருக்காது. ஆனால் உங்கள் துணையின் ஆரோக்கியத்தில் சிறிது அதிகமான கவனம் தேவை.
தொழில் :
இந்த மே மாதம், உங்கள் தொழில் சார்ந்த வாழ்க்கை சாதகமான வழியில் பயணிக்கும். இந்த மாதம் உங்களால் மறக்க முடியாத ஒரு பயணத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். உங்களுக்கு மிகவும் சாதகமான திசை மேற்கு என்று எங்கள் ஜோதிடர்கள் இதன் மூலம் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு நல்ல நன்மைகளைத் தரும் ஒரு மாதம் என்றும், குறிப்பாக உங்கள் தொழிலில் எதாவது ஒரு முக்கிய முன்னேற்றத்தை அடையக்கூடிய கூடிய மாதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நிதி நிலைமை :
இந்த மாதம் நிதி நிலைமையில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் உங்களால் எதிர்பார்க்க முடியாது. வியாபார தொடர்பான பயணங்கள் இருந்தாலும் அவை உங்களுக்கு லாபத்தை ஈட்டித் தராது. பயணச் செலவுகள் நஷ்டத்தைக் கொடுக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தொழிலில் இருக்கும் நபர்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டிய காலம் இது. இந்த மாதத்தில் எந்த ஒரு புதிய முயற்சியிலும் இறங்க வேண்டாம். லாப நோக்கம் கொண்ட பிரிவுகளில் சற்று நிதானித்து முடிவு எடுத்தல் அவசியம். இந்த காலகட்டம் சற்று மாறும் வரை பொறுமை மிகவும் அவசியம்.
காதல் வாழ்க்கை :
இந்த மாத தொடக்கத்தில் உங்கள் துணையிடம் இருந்து ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம் உங்களுக்கு கிடைக்கும். இந்த மாதத்தின் 3 முதல் 6 நாட்களில் எதாவது ஒரு சுப செய்தி குடும்ப உறுப்பினரால் உங்களைத் தேடி வரும் . உங்கள் காதல் வாழ்க்கையை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்லும் விருப்பம் உள்ளவர்கள், இதற்கான முயற்சியை இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்கலாம். இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் உங்கள் துணையுடன் சில வாக்குவாதம் அல்லது சண்டையில் ஈடுபடலாம்.
அதிர்ஷ்ட நாட்கள் மற்றும் நிறங்கள்
இந்த மாதத்தின் அதிர்ஷ்ட எண்கள் - 7, 20, 55, 77 மற்றும் 86.
இந்த மாதத்தின் அதிர்ஷ்ட தேதி - 7, 8, 17, 18, 25, 26.
இந்த மாதத்தின் அதிர்ஷ்ட நிறங்கள் - வெள்ளை , பச்சை மற்றும் நீலம்



Click it and Unblock the Notifications