Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ரத்தத்துலயே ஊறிப்போன விஷயம் இந்த மாசம் கைகொடுக்குமா?
முன்னெடுத்து சென்று ஆட்சி புரிவதற்கென்றே பிறந்த சிம்ம ராசி மன்னர்களே! இவர்களின் நம்பிக்கை, ஆதிக்கம் செலுத்தும் யுக்தி, படைப்பாற்றல் இவற்றிற்கு முன் எவ்வளவு தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து வெற்றியை காணும் நபர்கள் இவர்கள். இவர்களின் விசுவாச தன்மையும் தாராள மனமுமே போதும் நண்பர்களின் இதயத்தை வெற்றி காண. இவர்களின் கம்பீரமான தோற்றத்தின் மூலமும் கவர்ந்திழுக்கும் பேச்சின் மூலமும் மற்றவர்களை எளிதாக தன் வசப்படுத்தி விடுவார்கள்.
எப்பொழுதும் உங்கள் அகம்பாவத்திற்கு தீணி போட்டு வளர்ப்பவர்கள் நீங்கள். இந்த மாதம் உங்கள் ராசி ராதன் எந்த மாதிரியான அணுகூலன்களையும் கஷ்டங்களையும் வழங்க உள்ளார் என்பதை இந்த மே மாதம் 2018 ராசி பலன் மூலம் தெரிந்து பயனடையலாம்.

உடல் நலம்
இந்த மாதத்தின் இறுதி பாதியில் அதாவது 21 ஆம் தேதிக்கு பிறகு உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இந்த நேரத்தில் குறைந்த வேலைகளில் ஈடுபட்டு அதிக ஓய்வு பெறுவீர்கள். இழந்த ஆற்றல்களை எல்லாம் திரும்ப பெற்று ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள்.
தொழில்
இந்த மாதம் உங்கள் தொழில் சூழ்நிலைக்கு ஏதுவாக அமையவில்லை. வணிகம் சார்ந்த பயணங்கள் கூட பலனளிக்காத நிலை உருவாகும். ஆனால் அதே நேரத்தில் கிழக்கு நோக்கிய பயணம் நன்மையை கொடுக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்கள் கூட கூடயிருந்தே குழி பறிப்பார்கள். எனவே உறவுகளிடமிருந்து தள்ளி இருப்பது நல்லது.
பொருளாதாரம்
இந்த மாதம் உங்களுக்கு எந்தவொரு பொருளாதார எதிர்பார்ப்புகளையும் வழங்கப் போவதில்லை. புதிய தொழில் தொடங்குதல், புதிய முதலீடு போன்றவற்றை சிறுது காலம் தள்ளிப் போடுதல் நல்லது. ஏனெனில் அதற்கான சரியான நேரம் இது கிடையாது. போக்குவரத்து துறையில் இருப்பவர்களும் நிலைமையை சமாளிக்க போராட வேண்டியது உள்ளது.
காதல்
உங்கள் துணையுடனான உறவு ஒரு தற்காலிகமானதாக இருக்கும். உங்கள் துணையின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் ஈடுபாடு போன்றவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாமல் போகலாம். உங்கள் இருவருக்கிடையே அன்பும் அமைதியும் நிலவ நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். கல்யாணமாகதவர்களுக்கு காதல் வாய்ப்புகள், இணைய வழி காதல் மலர வாய்ப்புள்ளது. திருமண பந்தத்திற்கும், பிரிவு விரிசல்களுக்கும் இது சாதகமான மாதம் கிடையாது.
இந்த மாத அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான எண்கள் :6,24, 39,59மற்றும் 83
அதிர்ஷ்டமான தேதிகள் :2,3,12,13,21,22,29,30
அதிர்ஷ்டமான நிறங்கள் :வெள்ளை, தங்க நிறம், காப்பர் நிறம், லேசான பச்சை



Click it and Unblock the Notifications
