மேஷம் முதல் மீனம் வரை இந்த ஜூன் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்?... இங்கே கிளிக் பண்ணுங்க...

2018ம் ஆண்டு தொடங்கி 5 மாதங்கள் முடிந்து விட்டது. ஆம் 5ம் ஆண்டின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம். இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுனரால் கணித்துத் தரப்பட்டுள்ளது. இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

2018ம் ஆண்டின் முதல் பாதி முடிந்து விட்டது. பள்ளிகள் முழு ஆண்டு விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருக்கிறது. பள்ளி படிக்கும் பிள்ளைகள் புதிய வகுப்புகளுக்கான கனவில் இருப்பார்கள். பெரியவர்கள், 2018ம் ஆண்டின் முதல் பாதியின் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருப்பார்கள். எது எப்படி இருந்தாலும், கடந்த காலம் இன்னொரு முறை திரும்ப வராது. எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் தான் ஒவ்வொருவரும் இருக்கிறோம். ஆகவே நமது ஆற்றல் முழுவதும் நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதில் செலுத்த வேண்டும்.

வருடத்தின் முதல் பாதியில் உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் இருந்தவர்கள் இனியும் அதனை வீண் செய்யாமல் அடுத்த பாதியில் நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் பெற காலம் உள்ளது என்று காத்திருங்கள். ஒரு க்ளாசில் பாதி அளவு நீர் இருக்கும்போது நேர்மறை எண்ணம் உள்ளவர்கள் இந்த கிளாசில் பாதி அளவு தண்ணீர் இருக்கிறது என்று கூறுவர். அதுவே எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள், பாதி கிளாஸ் காலியாக உள்ளது என்று கூறுவார்கள். அது போல தான் வாழ்க்கையும். நாம் வாழ்க்கையை எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் நமது சந்தோஷம் இருக்கிறது. இதில் ஜோதிடம் என்பது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை கணிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வழியாகும். அதனால் தான் நாங்கள் தினமும் இந்த ஜோதிடப் பதிவை உங்களுக்காக தொகுத்துத் தருகிறோம்.

இந்த மாதம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு ராசியினரும் இந்த பதிவைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

உங்கள் மனதில் பல புதுமையான கருத்துகள் தற்போது உதித்துக் கொண்டே இருக்கும். அது எல்லாவற்றையும் இப்போது செயல்படுத்த முடியாவிட்டால் வருத்தம் வேண்டாம். சமூகத்தில் சுறுசுறுப்பாக செயலாற்ற உங்கள் தொடர்பு திறமைகள் மேலோங்கி இருக்கும். சரியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கவனச் சிதறல்களை குறைக்க தியானம் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது , உங்கள் எதிரில் இருப்பவரின் கோணத்தையும் அறிந்து செயல்பட வேண்டும். உங்கள் துணையுடன் இருக்கும் காலத்தில் மிகவும் சந்தோஷமாக உணர்வீர்கள். அவர்களுடன் ஒரு சிறிய விடுமுறையை கழிப்பதால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ற விடுமுறை காலத்தை தேர்ந்தெடுக்கவும்.

முழு பலன்களை படிக்க

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

இந்த மாதம் உங்கள் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.ஒரு குறிக்கோள் மீது கண்ணாக இருந்து முழு மனதோடு உங்கள் உழைப்பை செலுத்தும்போது உங்கள் கனவுகள் நிச்சயம் ஈடேறும். எல்லா நேரத்திலும் நீங்கள் நினைப்பது போல் எல்லாம் நடைபெறாது. ஆகவே எல்லாத் திட்டத்திற்கும் ஒரு மாற்று யோசனையை முன்கூட்டியே வகுத்து வைப்பது நல்லது. இதனால் கடைசி நிமிட டென்ஷன் தவிர்க்கப்படும். ஜன்க் உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவு பழக்கத்தைக் கையில் எடுப்பதற்கான நேரம் இது. உங்கள் வேலை நேரத்தில் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி அடையும் காலம் இது. இதனை சிறப்பாக பயன்படுத்தி வேலையில் முன்னேற்றம் காணலாம். புதிய முதலீடுகள் லாபகரமானதாக இருக்கும். உறவுகளில் சமரசம் மற்றும் விட்டுக் கொடுத்தல் நல்ல பலனைத் தரும்.

முழு பலன்களை படிக்க

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

சந்தர்ப்பங்களை உங்கள் பக்கம் இழுப்பதில் வெற்றியாளர் நீங்கள். உங்களை சோர்வடையச் செய்யும் அளவிற்கு வேலை பளுவை ஏற்றிக் கொள்ள வேண்டாம். சமூகத்தில் அதிக தொடர்புடன் இருப்பதால் நல்ல தொடர்புகள் அறிமுகம் கிடைக்கும். புதிய ஆதாரங்களில் இருந்து பண வருவாய் கிடைப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கும். நீங்கள் நினைக்கும் மனஅமைதி உங்கள் பயணங்களில் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் தொழில் முறை வாழ்க்கையில் ஒரு அரிய வாய்ப்பு இந்த மாதம் உங்களுக்குக் கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. கவனக் குறைவு விபத்தை உண்டாக்கலாம். உறவுகளுடனான விவாதங்கள் மற்றும் பிரச்சனைகளை முதிர்ச்சியுடன் அணுகுவதால் அவை எளிதில் தீர்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

முழு பலன்களை படிக்க

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

கிரகங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எந்த ஒரு பெரிய முயற்சியும் செய்யாமல் நீங்கள் நினைக்கும் காரியங்கள் எளிதில் நடந்து விடும். குடும்பத்திற்கும் வேலைக்கும் சமமான முக்கியத்துவத்தைக் கொடுப்பதால் இனிமை எங்கும் இருக்கும். உங்கள் வேலை இடத்தில் உங்களை நிராகரிப்பது போல் உங்களுக்கு தோன்றும். நம்பிக்கையை தளர விடாமல் உங்களால் முடிந்த அளவிற்கு சிறப்பாக வேலை செய்யுங்கள். நிச்சயமாக உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பொறுமையுடன் காத்திருங்கள். கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த புத்திசாலித்தனமான முடிவுகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். கடந்த கால முதலீடுகளில் இருந்து சிறந்த வருவாய் கிடைக்கும். எல்லா நேரமும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதால் செரிமான தொந்தரவுகள் ஏற்படலாம். உங்கள் குடும்பத்துடன் முடிந்த அளவிற்கு நேரம் செலவழியுங்கள்.

முழு பலன்களை படிக்க

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

நீங்கள் செய்யும் வேலைகள் பாராட்டும் அங்கீகாரமும் பெறுவதால் உங்கள் வேலையில் ஒரு வித திருப்தி கிடைக்கும். உங்கள் கோபம் மற்றும் அகங்காரத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் உங்களுடன் மற்றவர்கள் நெருங்கிப் பழகலாம். உங்கள் வேலை இடத்தில் நீங்கள் மட்டுமே சர்ச்சைக்கு உரிய நபராக இருப்பீர்கள். ஆனால் அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் உங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக செயல்படுங்கள் . உங்கள் படைப்பாற்றலில் அதிக கவனம் செலுத்தி சுதந்திரமாக செயல்படுங்கள் . இதனால் உங்கள் வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யமாக மாறும். இப்போது தான் நீங்கள் சரியான முதலீடுகள் செய்யத் தொடங்குவீர்கள். ஆனால் செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தங்கள் இந்த மாதம் உங்கள் உடல்நலத்தை பாதிக்கும், எனவே வழக்கமான இடைவெளியில் மன நல பயிற்சிகள் செய்வதால் இந்த பாதிப்புகள் குறையும். உங்கள் உறவில் விசுவாசம் மிகவும் முக்கியம்.

முழு பலன்களை படிக்க

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

உங்கள் வாழ்க்கையில் தேர்ந்தெடுப்பதில் ஒரு வித மன குழப்பம் உங்களுக்கு தோன்றலாம். கடவுளை நம்புவதால் உங்கள் குழப்பத்திற்கு சில விடைகள் கிடைக்கலாம். உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தால் தோல்வி நிச்சயம் உங்களுக்கு நேராது. வேலையில் பெரிய முன்னேற்றம் கணிக்கப்படுகிறது. உங்களை சமநிலையில் வைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். சொத்து சம்பந்தமான விஷயங்கள் லாபத்தைத் தரும். காதல் உறவில் வெற்றி நிச்சயம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். பதட்டம் மற்றும் மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது ஜன்க் உணவுகளை உண்ணுவதற்கு உந்துதல் தோன்றும். இதனால் ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படலாம்.

முழு பலன்களை படிக்க

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

உங்கள் மூளை ஒரு பக்கமும், உங்கள் மனம் வேறு பக்கமும் பயணிப்பதால் ஒரு முடிவு எடுப்பதில் சிரமம் தோன்றலாம். பொது அறிவைப் பயன்படுத்துவதால் இந்த சிரமம் குறையலாம். உறவுகள் தொடர்பான முடிவுகளை மனம் சார்ந்து எடுக்க வேண்டும். நிதி தொடர்பான முடிவுகளை மூளை சார்ந்து எடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வேலை இடத்தில் நீங்கள் பல நல்ல வாய்ப்புகளை கடந்து வருவீர்கள். தவறான புரிதல் காரணமாக வேலை இடத்தில் நீங்கள் விரக்தியாய் உணரலாம். ஆனால் இதுவும் கடந்து போகும் என்பதை மறக்க வேண்டாம். தவறான வழியில் சேர்க்கும் பணத்தால் பல பிரச்சனைகள் தோன்றும் என்பதால் அதில் இருந்து விலகி இருப்பது நன்மை தரும். சாகசமான பொழுதுபோக்கால் உங்களுக்கு உற்சாகம் தொடரும். உறவுகளில் பல ஏற்றத் தாழ்வுகளை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

முழு பலன்களை படிக்க

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

உங்கள் வேலை இடத்தில் பல உற்சாகமான விஷயங்களை நீங்கள் அனுபவிப்பீர்கள். எப்போதும் ஒரே மாதிரி வேலையை செய்து சலித்துப்போனதால் புதிய வேலை உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். உங்கள் சமூக வட்டங்களில் மிகவும் விரும்பப்பட்ட நபராக நீங்கள் இருப்பீர்கள், ஏனெனில் நீங்கள் இருக்கும் இடத்தில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. வேலை மாற்றத்திற்கான சரியான தருணம் இது. ஆகவே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிதி நிலைமை நல்லதாக இருக்கும். கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது. மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்வது நல்லது. திருமணம் ஆகாதவர்களுக்கு முதல் பார்வையிலேயே காதல் மலர்வதற்கான வாய்ப்புகள் தென்படுகிறது.

முழு பலன்களை படிக்க

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

உங்கள் வேலையில் முழு திறமையையும் வெளிப்படுத்த பல வாய்ப்புகள் வரும். தன்னம்பிக்கை அற்ற தன்மையை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் வாய்ப்புகளில் முழு கவனம் செலுத்தி முழுவதும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். யாரும் உங்களை எதிர்மறையாக பாதிக்கவோ அல்லது உங்கள் நம்பிக்கையை குறைக்கவோ முடியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாது. எனவே எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைத்து கவலை கொள்ள வேண்டாம். அனுபவம் உள்ளவரிடம் கலந்தாலோசித்து பொருளாதார முடிவுகளை எடுப்பது நல்லது. அன்றாட வாழ்வில் இருந்தும் அட்டவணை வாழ்க்கையில் இருந்தும் விலகி ஒரு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் உங்கள் துணையுடன் அதிக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் உங்கள் துணையும் அதே எண்ணத்தில் இல்லாதபோது உங்களுக்கு ஏமாற்றம் கிடைக்கும்.

முழு பலன்களை படிக்க

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி

உங்களிடம் கடின உழைப்பு அதிகமாக இருக்கும். மேலும், உங்கள் வேலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படக்கூடும். ஆனால் இந்த மாற்றம் முற்றிலும் நன்மையைச் செய்யும். உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தில் நீங்கள் படுவதால், பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறும். பொருளாதாரத்தில் சில கடினமான கட்டங்களை இந்த மாதம் கடந்து செல்ல நேரலாம். தேவையற்ற பொருட்களுக்கு செலவு செய்வதை இந்த மாதம் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது உங்கள் நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தும். தகுந்த பொருத்தம் இல்லாத உறவுகள் முடிவுக்கு வரும் நிலை உண்டாகலாம்.

முழு பலன்களை படிக்க

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

நிலையில்லாத பல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும். நேர்மறையான விஷயங்களில் ஈடுபட்டு நேர்மறையான ஆற்றலை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். வேலை இடத்தில் பொறுமை மிகவும் அவசியம். நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்காது. உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். வரவும் செலவும் சம நிலையில் இருப்பதால் பொருளாதார நெருக்கடி எதுவும் இருக்காது. அத்துமீறிய கோபம் உண்டாவதற்கான ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. ஆகவே எந்த ஒரு விவகாரத்திலும் அதிக ஈடுபாட்டுடன் இருக்க வேண்டாம்.

முழு பலன்களை படிக்க

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்

உணர்வு ரீதியாக உங்களை தளர்த்தும் பல விஷயங்கள் இந்த மாதம் நடைபெறும். சுயநலமாக இருக்க முயற்சிக்க வேண்டாம். அடுத்தவரின் தேவையை குறிப்பாக உங்கள் மேல் அன்பு செலுத்துபவரின் தேவையை உணர்ந்து செயல்படுங்கள். உங்களுடன் மற்றவர்கள் தொடர்பு கொள்ள வாய்ப்பை ஏற்படுத்துங்கள். வழக்கத்திற்கு மாறான வழியை எடுத்துக்கொள்வதற்கு நீங்கள் தூண்டப்படலாம். எந்த ஒரு முதலீட்டையும் தற்போது ஒத்தி வைத்து விடுங்கள். ஆனாலும், முந்தைய முதலீடுகளில் இருந்து நன்மைகளைப் பெறுவீர்கள். யோகா மற்றும் ஏரோபிக்ஸ் உங்களை கட்டுக்கோப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வைக்க உதவும். உங்கள் திருமண வாழ்க்கை தானாக கெட்டுப் போகிறது என்ற எண்ணம் கொள்ள வேண்டாம். நீங்கள் நல்ல முயற்சிகள் செய்வதை விட்டு, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் நடப்பது தான் பிரச்சனைக்கு காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முழு பலன்களை படிக்க

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion