For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது?

2018 ஜூன் மாதத்திற்கான ராசி பலன்களை எங்கள் ஜோதிட வல்லுநர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். ரிஷப ராசிக்குரிய மாதப் பலன்களை இங்கே விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

By Suganthi Rajalingam
|

2018ம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. ஆம். இந்த ஆண்டினுடைய 6 ம் மாதத்தின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம்.

ராசிகள்

இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுநரால் கணித்துத் தரப்பட்டுள்ளது. இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரிஷப ராசி அன்பர்களே

ரிஷப ராசி அன்பர்களே

நயமாக இலக்குகளை அடைவதில் வல்லவரான நீங்கள், இந்த ஆண்டு ஜூன் மாதம் உங்களுக்கு முக்கியமான மாற்றத்தை அள்ளி வழங்கப் போகிறது. இந்த மாதம் முழுவதும் உங்கள் இலட்சியமும் இலக்குகளும் தான் முன்னின்று செயல்படும். உங்கள் சொந்த விஷயங்கள் பின்னாளில் போய் விடும். உங்களது நயமும் நாசுக்கும் இலக்குகளை அடைய உதவும். உங்கள் ராசிநாதன் உங்கள் இலட்சியங்களை அடைய உதவப் போகிறார். உங்கள் கனவு விளையாட்டை நீங்கள் உற்சாகமாக விளையாட உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள். சில தாமதங்கள் தடைகள் உங்களை சோர்வாக்கலாம் ஆனால் அதை துச்சமாக மதிக்காமல் முன்னேறிச் செல்லுங்கள். வெற்றி காண்பீர்கள்.

சரி வாங்க இந்த ஜூன் மாதம் உங்கள் உடல் நலம், தொழில், பொருளாதாரம் மற்றும் காதல் வாழ்க்கை பற்றி என்ன சொல்லப் போகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

உடல் நலம்

உடல் நலம்

இந்த மாதம் உடல் ரீதியாக சாதகமாக அமைகிறது. ஆனால் அவசர அவசரமாக வேலை வேலை என்று கிடப்பதை தவிருங்கள். உங்கள் நேர்மையான ஆற்றல் மற்றும் நடத்தை இதனுடன் மன வலிமையும் உங்களுக்கு தேவை. ஆரோக்கியமான உணவுகளைக் கொண்டு உங்கள் உடல் நலத்திற்கு எரிபொருள் ஊற்றுங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு உணவுகள் மற்றும் வெளியில் விற்கப்படும் உணவுகளால் சீரண பிரச்சினை ஏற்படும். எனவே ஜங்க் ஃபுட்களை தவிர்ப்பது வயிற்று பிரச்சினையிலிருந்து விடுதலை தரும். இந்த மாதத்தின் நடுப்பகுதியில் சில சிரமமான உடல் நலக் குறைவு ஏற்படலாம். எனவே உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்வது நல்லது. மன அழுத்தமும் மற்றும் அனிஸ்சிட்டியால் உடல் நலக் குறைவு நேரும். எனவே இந்த மாதத்தின் முதல் பாதி வரை உங்கள் கோபத்தையும் மன அழுத்தத்தையும் குறைத்து ரிலாக்ஸ் ஆக செயல்படுவது நன்மை பயக்கும்.

தொழில்

தொழில்

நிறைய தொழில் வாய்ப்புகள் நாடி வரும். சில வாய்ப்புகள் நல்ல வருமானத்துடனும், நல்ல வளர்ச்சி மற்றும் நல்ல சூழ்நிலையை தந்து செல்லும். எதை தேர்ந்தெடுப்பது என்ற சந்தோஷ நிலையில் நிற்பீர்கள்.

உங்கள் வெற்றியை கொண்டே எளிதாக மூத்த பணியாளர்களைக் கூட கவர்ந்து விடுவீர்கள். உங்களது நயமான பேச்சும், சாதுர்யமான திறமையும் உங்களின் சொத்தாக இருக்கும். உங்கள் பதவி உயர்வும் உங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து வரும். பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும் வருந்தாதீர்கள் அதை விட பெரிய பலனை உங்கள் ராசிநாதன் உங்களுக்கு வழங்கப் போகிறார் என்பது உண்மை. தன்னம்பிக்கையை வளர்த்து தனியாக செயல்பட்டு வந்தால் எல்லா வெகுமதியும் பாராட்டும் உங்களுக்கே உரித்தாக அமையும்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

உங்கள் தனிப்பட்ட தேவைகளை மனிதிலெ கொண்டு செயல்படுவீர்கள். பொருளாதார ரீதியாக சில நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். ஆனால் இதை நீண்ட காலம் தொடராமல் இருப்பது நல்லது. புதிய தொழில் மற்றும் முதலீட்டிற்கு இந்த மாதம் சாதகமாக அமையவில்லை. இந்த மாதம் இறுதியில் எதிர்பாராத பண வரவு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும். நீண்ட நாள் முதலீடுகள் நல்ல லாபத்தை ஈட்டித் தரும்.

தொழிலில் பணப்புழக்கம் நிலையானதாக இருக்கும். பொருளாதார ரீதியான முடிவுகளை உணர்ச்சி வசப்பட்டு எடுத்தால் விளைவுகளை நிச்சயம் சந்திக்க வேண்டியிருக்கும். சில திட்டங்களை செயல்படுத்துவதில் அவசரம் இல்லாமல் நிதானமாக நகர்வது முக்கியம். உங்கள் கொள்கைகளையும் மனதையும் வலிமையாக வைத்திருப்பது பொருளாதார சிக்கலை தவிர்க்கும்.

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை

நீங்கள் இதுவரை தனியாக இருந்திருந்தால் இனி உங்கள் கவர்ச்சி ஒரு துணையை கவர உதவும். சுக்ரனின் ஆதிக்கம் உங்கள் காதல் வாழ்க்கையை சுகமாக மாற்றப் போகிறது.

உங்கள் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த மாதிரியான தருணங்களில் உங்கள் துணையின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புவீர்கள். எனவே உங்கள் உறவு குழைய நீங்கள் தான் முழுக் காரணம். எனவே கவனத்துடன் செயல்படுங்கள்.

திருமண வாழ்க்கையில் இருப்பவர்கள் சிறு சிறு தியாகங்கள் மூலம் அன்பில் குழைவார்கள். உங்கள் துணையுடன் ஒரு காதல் சுற்றுலா சென்று வருவது இருவருக்கிடையே ஒரு நெருக்கத்தை தூண்டும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் பொறுமையுடன் அன்பாக உறவை மேம்படுத்தினால் போதும் காதல் வாழ்க்கை சிறக்கும்.

இந்த மாத அதிர்ஷ்டம்

இந்த மாத அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டமான எண்கள் :5,6,31 மற்றும் 32

அதிர்ஷ்டமான நிறங்கள் :குங்குமப் பூ நிறம், மஞ்சள் நிறங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

monthly predicitions of tarus at june 2018

as a person, you are determined and also seem to have strong willpower, which are the positive aspects of your zodiac
Desktop Bottom Promotion