For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மே மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது?... ( மேஷம் முதல் மீனம் வரை)

|

2018ம் ஆண்டு தொடங்கி நான்கு மாதங்கள் முடிந்து விட்டது. ஆம் 5ம் ஆண்டின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம்.

ராசிகள்

இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுனரால் கணித்துத் தரப்பட்டுள்ளது. இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம் :

மேஷம் :

இந்த மாதம் மேஷ ராசியினர் செல்வச் செழிப்போடு இருப்பார்கள். இந்த அதி அற்புத நிதி வருவாய்க்கு காரணம் சுக்ரன். வேலை பார்க்கும் இடத்தில், கடினமாக வேலை செய்ய வேண்டிய சூழல் வரும். ஆனால் இறுதியில் மகிழ்ச்சியான முடிவுகள் ஏற்படும். உங்கள் திருமண உறவு, இந்த மாதம் முழுவதும் மிகவும் அழகாக இருக்கும். உங்கள் துணையுடன் கிண்டலும் கேலியுமாக இருப்பீர்கள். மற்றும் உங்கள் துணை, உங்களைக் கவர்வதற்காக வித்தியாசமாக எதாவது ஒன்றை முயற்சிப்பார். உங்கள் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

ரிஷபம் :

ரிஷபம் :

உங்கள் ராசியில் சுக்ரனின் பாதிப்பு இருப்பதால் உங்கள் பணி இடத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். உங்கள் துணைவரின் உதவியுடன், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். உங்கள் பணி இடத்தில், வடக்கு நோக்கிய பயணம் ஆதாயம் தரும். இந்த மாதத்தின் முதல் 5 நாட்களுக்குள் உங்கள் துணையிடம் இருந்து ஒரு ஆச்சர்யத்தை எதிர்பார்க்கலாம்.

மிதுனம் :

மிதுனம் :

உங்கள் தொடர்பு திறன்களை மாதம் முழுவதும் அதிகரிக்க, புதன் உங்களுக்கு துணையாக இருக்கிறது. உங்கள் வருவாய் மற்றும் செலவினங்களுக்கு காரணம் உங்கள் ராசியில் சந்திரனின் செல்வாக்கு அதிகமாக இருப்பது. சமூகத் தொடர்பு மற்றும் வேலை அழுத்தத்தில் இருந்து சற்று ஒதுங்கி உங்கள் துணையுடன் நேரம் செலவழிப்பது அவசியம். புதனின் செல்வாக்கால் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்:

கடகம்:

இந்த மாதம் , உங்கள் தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். செவ்வாய் மற்றும் சந்திரன் உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு அதிகம் உதவுவார்கள். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளை கவனமாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் காதல் வாழ்க்கை சற்று சூடாக இருக்கும். உங்கள் பொருளாதார முதலீடுகளில் சற்று நிதானித்து கால் வைப்பது நல்லது. நல்ல நேரம் வரும் வரை காத்திருந்து எந்த ஒரு முதலீட்டையும் தொடங்கவும். அதுவரை பொறுமை அவசியம்.

சிம்மம் :

சிம்மம் :

இந்த மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக முன்னேற்றம் தென்படும். சமூகத்துடன் இணைந்து தொடர்பில் இருப்பதால் உங்கள் தொழிலில் நீங்கள் வளர்ச்சியைக் காணுவீர்கள். இந்த மாதம் முழுவதும் உங்கள் காதல் வாழ்க்கை சொர்க்கத்தில் இருக்கும் சந்தோஷத்துடன் மிகவும் அழகாக பயணிக்கும். உங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த எந்த ஒரு வாய்ப்பும் இந்த மாதம் உங்கள் கைக்கு வராது.

கன்னி :

கன்னி :

கிரகங்களின் செல்வாக்கால், இந்த மாதம் உங்கள் சமூக மற்றும் காதல் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும். இந்த மாதம் 21 தேதிக்கு பிறகு உங்கள் ஆரோக்கியம் நலிவடையும். தொழில் ரீதியாக லாம் சம்பாதிப்பதற்காக சிலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட எத்தனிக்கலாம். இந்த மாதம் உங்கள் உறவு மற்றும் காதல் வாழ்க்கையில் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரலாம்.

துலாம் :

துலாம் :

இந்த மாதம், உங்கள் தொழில் மற்றும் குடும்பத்திற்கு சம முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இந்த மாதம் இல்லை. ஆனால் உங்கள் துணைவரின் ஆரோக்கியத்தை சற்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மைகள் நிறைந்திருக்கும்.

விருச்சிகம் :

விருச்சிகம் :

இந்த மாதம் உங்களை நல்லவிதமாக ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். தேவைபட்டால், மசாஜ் நிலையங்கள் சென்று அல்லது வீட்டிலேயே கூட உடலை மசாஜ் செய்து கொள்ளலாம். உங்கள் ராசியில் உள்ள குரு, பொருளாதாரத்தில் ஒரு அபிவிருத்தியை உண்டாக்கலாம். உங்களால் மற்றவர்களும் லாபம் அடைவார்கள். உங்கள் துணையுடன் உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

தனுசு:

தனுசு:

இந்த மாதம் புகழ் மற்றும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். உங்கள் ஆரோக்கியம் மிகவும் நல்லதாக இருக்கும். உடல் மற்றும் மனதளவில் மிகவும் வலிமையாக உணர்வீர்கள். லாபம் தரும் பல புதிய தொழில் அல்லது திட்டங்களில் நீங்கள் காலடி எடுத்து வைக்க இது ஒரு சிறப்பான காலம். உங்கள் வேலை பளு இந்த மாதம் அதிகரித்துக் காணப்படுவதால் காதல் வாழ்க்கையில் சில சின்ன சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்புகள் ஏற்படலாம்.

மகரம் :

மகரம் :

இந்த மாதத்தில் நீங்கள் குடும்ப கடமைகளில் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது உங்கள் ஆரோக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அனுபவிப்பீர்கள். உங்கள் பணியிடத்தில் மிகவும் கடினமான சூழ்நிலையை அனுபவிப்பீர்கள். இந்த மாதம் 21ம் தேதி வரை உங்கள் காதல் வாழ்க்கை பல்வேறு சந்தோஷங்கள், ரொமாண்டிக் தருணங்கள், வேடிக்கை, வதந்தி என்று மிகவும் மகிழ்ச்சியாக நகரும்.

கும்பம் :

கும்பம் :

இந்த மாதம் முழுவதும் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த மாதம் முழுவதும் போதிய அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களை நீங்கள் அடிக்கடி ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். பணி இடத்தில், உங்களுக்கும் உங்கள் உடன் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் மோதலுக்கான வாய்ப்புகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் வரும் வாய்ப்புகள் இருக்கும். அதனால் கவனம் தேவை. காதல் வாழ்க்கையில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. அமைதியான ஓடம் போல் பயணிக்கலாம்.

மீனம்:

மீனம்:

இது உங்கள் உணர்ச்சி பலம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கும் மாதமாக இருக்கிறது. உங்கள் சுய விருப்பங்களுடன் கூடிய தொழில் வளர்ச்சி இந்த மாதம் மிகவும் முக்கியமாகத் தோன்றும். உங்கள் பணி இடத்தில் எந்த ஒரு அரசியலிலும் சிக்காமல் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். உங்கள் காதல் வாழ்க்கையில், உங்கள் துணையிடம் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

monthly predicitions of may 2018

as a person, you are determined and also seem to have strong willpower, which are the positive aspects of your zodiac
Desktop Bottom Promotion