For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது?

2018 ஜூன் மாதத்திற்கான ராசி பலன்களை எங்கள் ஜோதிட வல்லுநர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். கடக ராசிக்குரிய மாதப் பலன்களை இங்கே விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

By Suganthi Rajalingam
|

2018ம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. ஆம். இந்த ஆண்டினுடைய 6 ம் மாதத்தின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம்.

ராசிகள்

இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுநரால் கணித்துத் தரப்பட்டுள்ளது. இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெற்றியை கொண்டாடும் கடக ராசியே!

வெற்றியை கொண்டாடும் கடக ராசியே!

இந்த மாதம் கடக ராசிக்காரர்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை பெறுவீர்கள். முக்கியமான நிகழ்வுகள் இந்த மாதத்தில் நடக்கும். உங்களை மறந்து விடக் கூடும் நபர்களுக்கு மத்தியில் சிலர் உங்களை எதிர்பார்ப்பார்கள். இது உங்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வேலையில் ஏற்படும் சிறிய தடங்களும் காற்றோடு கலந்து கரைந்து போகும். கடின உழைப்பை காட்டாமலே வெற்றிக் கனியை ஈட்டிச் செல்வீர்கள்.

பணி வாழ்க்கை குடும்ப வாழ்க்கை இரண்டையும் சமநிலையில் எடுத்துச் செல்வீர்கள். எதையும் திட்டம் போட்டு செயல்படுவது நன்மை அளிக்கும். பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சி காணப்படும். பணியை சீக்கிரமாக முடித்து விட்டு பேரும் புகழும் வாங்குவீர்கள். பணியிடங்களில் மிகவும் திறமையாகவும் மரியாதையுடனும் நடந்து கொள்வீர்கள்.

உங்கள் சொந்த விஷயங்களில் மற்றவர்களை நம்பாமல் நீங்களே தீர்வு காணுங்கள். காதல் வாழ்க்கை, பொருளாதாரம், உடல் நலம், தொழில் இப்படி எண்ணற்ற பலன்களை பற்றி கீழ்க்கண்டவாறு பார்க்கலாம்.

உடல் நலம்

உடல் நலம்

இந்த மாதம் இறுதி வரை உங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. அதிகமான வேலைப்பளுவால் உங்கள் மூட்டுகளில் வலி உண்டாகலாம். உங்கள் பிஸியான வாழ்க்கை ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்ள தூண்டும்.இதனால் சீரண பிரச்சினையை சந்திக்க நேரிடும். எனவே இதை அறவே தவிர்ப்பது நல்லது. கால்சியம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் உபாதைகளுக்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. இந்த உடல் நல பிரச்சினைகளால் உங்கள் வேலைகளும் பாதிப்படையலாம். எனவே கவனமாக இருங்கள். அதிகமான வேலையை எடுத்து நீங்களே மன அழுத்தத்தை ஏத்திக் கொள்ளாதீர்கள். பிறர் உதவி பெற்றோ அல்லது மெதுவாக செய்தோ வேலையை முடிக்கலாம் என்று உங்களுக்கு தோணும். ஆனால் உங்கள் வேலையை நீங்கள் முடிப்பதே நல்லது. யோகா பயிற்சி போன்றவை மன அமைதி தந்து உடல் நலத்தை காக்கும்.

தொழில்

தொழில்

தொழிலில் நல்ல முன்னேற்றம் தலைதூக்கும். சில உடல் நலக் குறைவால் வேலையில் திருப்தி ஏற்படாமல் போகலாம். ஆனால் அதுவும் கடந்து போகும். ஒரே நேரத்தில் பல விஷயங்களை எடுத்து செய்யாமல் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம். உங்கள் உழைப்புக்கு மேலதிகாரியிடமிருந்து பாராட்டு கிடைக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். உங்கள் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி பிரதிபலியுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருந்து தன்னம்பிக்கை கொடுப்பார்கள். இதனால் வருகின்ற சவால்களை சாதித்து காட்டுவீர்கள்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுகளால் நிதி நிலையில் பாதிப்புகள் உண்டாகும். கடந்த கால முதலீட்டிற்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். உங்கள் ஜாதக பலன் பொருளாதார ரீதியாக இந்த மாதத்தில் மட்டுமல்ல வருடம் முழுவதும் வளர்ச்சியை கொடுக்கப் போகிறது. புதிய தொழில் தொடங்க நிறைய வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கும். இருப்பினும் பணத்தை முதலீடு செய்யும் போது கவனம் தேவை.

எதிர்காலத்திற்கு சேர்த்து வைத்து கொள்வது ஒரு நிலையான வரவை கொடுக்கும். அதே நேரத்தில் உங்கள் குடும்ப செலவுகளை இறுக்கி பிடிக்காதீர்கள். இதனால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் துணைக்கு பரிசு வாங்குவதில் கணக்கு பார்க்காமல் வாங்கி கொடுங்கள். இதனால் உங்கள் உறவும் நீடிக்கும். அதே நேரத்தில் தேவையற்ற செலவுகளை குறைத்து சேமித்து வளம் பெறுங்கள்.

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை

இந்த மாதம் கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துணையை கவருவீர்கள். குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செல்லுதல் பயனளிக்கும். இது உறவின் நெருக்கத்தை அதிகரிப்பதோடு மன அமைதியையும் இருவருக்கிடையே நிலவச் செய்யும்.

இந்த மாத அதிர்ஷ்டம்

இந்த மாத அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டமான நிறங்கள் :வெள்ளை மற்றும் மென்மையான நிறங்கள்

அதிர்ஷ்டமான எண்கள் :4,1,12,16.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

monthly predicitions of cancer at june 2018

as a person, you are determined and also seem to have strong willpower, which are the positive aspects of your zodiac
Desktop Bottom Promotion