For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புனித மாதமான புரட்டாசியில் உங்கள் ராசிக்கு எப்படியிருக்கும்? பெருமாள் வரம் தரும் ராசி எது?

|

இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம். இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுனரால் கணித்துத் தரப்பட்டுள்ளது.

monthly prediction

இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள். புனித மாதமான புரட்டாசியில் எந்த ராசிக்கு என்ன பலன்கள் உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

தாய்வழியிலான உறவினர்களிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். அதேபோல செய்கின்ற வேலைகளிலும் கொஞ்சம் நிதானமாகவே செயல்படுங்கள். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடனுதவிகள் கிடைக்கும். வேலைகளில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்துப் போவது தான் நல்லது. அது தேவையில்லாத பிரச்சினைகளைத் தீர்க்கும். பொது நல காரியங்களில் ஈடுபடுவதற்கான ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்களுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வெளி வட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். தாய்வழியிலான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். தொழில் சம்பந்தமாக புதிதாக ஏதாவது முடிவெடுக்க விரும்பினால் கொஞ்சம் நிதானமாகவே செயல்படுவது நல்லது. விநாயகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். உங்களுடைய வினைகள் அத்தனையும் தீர்ந்து நன்மை உண்டாகும்.

ரிஷபம்

ரிஷபம்

வீட்டில் மகிழ்ச்சிக்கும் கலகலப்புக்கும் பஞ்சம் இருக்காது. கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன பனிப்போர்கள் முற்றிலுமாக விலகி, அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் மரியாதை உயரும். வீட்டில் குழந்தைகளின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். அது மற்றவர்கள் முன்பாக, உங்களைப் பெருமைப்படுத்தும். நீங்கள் எதிர்பார்த்த பண வரவு முற்றிலுமாக உங்கள் கைக்கு வந்து சேரும். உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களுடைய நட்பு கிடைக்கும். அதனால் மனம் குதூகலத்தில் இருக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். கூட்டுத் தொழிலிலட இருந்து தனியே தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். நிறைய பாராட்டுக்களைப் பெறுவார்கள். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு துறை சார்ந்த அறிவு மேம்படும். அரசாங்கத் தரப்பிடம் இருந்து ஆதாயம் ஏற்படும். ஆன்மீக வழிபாட்டை மனம் நாடிச் செல்லும். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை அணிவித்து, வழிபட்டு வாருங்கள். எடுத்த காரியமெல்லாம் வெற்றியாகும்.

மிதுனம்

மிதுனம்

வெகுதூர வாகனப் பயணங்களினால் தொழிலில் லாபம் பன்மடங்கு உயர ஆரம்பிக்கும். பெரியோர்களுடைய ஆலோசனைகள் பெற்று அதன்படி நடக்க ஆரம்பிப்பீர்கள். உங்களுக்குள் மறைந்து கொண்டிருந்த பல்வேறு திறமைகளையும் முழுமையாக வெளிக்காட்டவதற்கான சந்தர்பங்கள் உண்டாகும். அந்த அரிய வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். வீட்டில் பிள்ளைகளுடைய தேவைகளைப் புரிந்து கொண்டு, அதை நிறைவேற்றி வைப்பீர்கள். எடுக்கின்ற எல்லா காரியங்களிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்ற சக வேலையாட்களிடம் கொஞ்சம் நிதானமாகச் செயல்படுவது நல்லது. தொழிலில் சில வீண் அலைச்சல்களும் வந்து போகும். ஆனால் லாபகரமாகவே இருக்கும்.பல நாட்களாக இருந்த வந்த சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வை எட்டுவீர்கள். நவ கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட்டு வாருங்கள். தடைகள் விலகி, லாபம் உண்டாகும்.

கடகம்

கடகம்

தொழிலை அபிவிருத்தி செய்து அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உடன் பிறந்தவர்களின் மூலமாக உங்களுக்குப் பெரும் லாபம் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளால் நீங்கள் பெருமையடையும் தருணங்கள் வந்து போகும். எடுத்த காரியங்கள் எதுவாக இருந்தாலும், அதை மன தைரியத்துடன் செயல்பட்டு, அந்த காரியங்களை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். சின்ன சின்ன உடல் உபாதைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு கவனம் தேவை. வேலையில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் மனதுக்குள் வந்து வந்து போகும். நீங்க்ள செய்யும் செயல்களில் சிறிது கவனம் தேவை. போட்டி மற்றும் பந்தயங்களில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பொருள்களைக் கையாளுகின்ற போது, கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள்.

சிம்மம்

சிம்மம்

பண வரவுகள் உண்டாகும். அதன்மூலம் உங்களுடைய சேமிப்புகள் கிடுகிடுவென உயர ஆரம்பிக்கும். உங்களுடைய தொழிலில் புதுப்புது வாடிக்கையாளர்களுடைய அறிமுகங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களுடைய சக ஊழியர்களுடைய ஒத்துழைப்புகள் உண்டாகும். பெற்றோர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நிலுவையில் இருந்து வந்த வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் கணவன், மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்பு அதிகரிக்கச் செய்யும். தொழிலில் உங்களுடைய கூட்டாளிகளால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய பொருளாதார மேன்மைக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் வெற்றி பெறும். புதிய நட்பு வட்டாரங்கள் உருவாகும். அதனால் உங்களுடைய பழக்க வழக்கங்கள் விரிவடையும். நவ கிரகங்களில் இருக்கும் சுக்கிர தேவனை வழிபாடு செய்யுங்கள்.

கன்னி

கன்னி

வேலையில் நீங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களை நீங்களே தான் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதற்கான முழு முயற்சியில் இறங்குங்கள். உங்களுடைய செயல்களில் வேகம் அதிகரிக்கும். மூத்த உடன் பிறப்புகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். கடல்வழிப் பயணங்களின் மூலமாக, உங்களுக்கு நன்மை உண்டாகும். கால்நடைகளின் மூலமாக, நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான லாபங்கள் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக, சின்ன சின்ன சுப விரயச் செலவுகள் உண்டாகும். பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வேள்விகளில் கலந்து கொண்டு, மந்திர உபதேஷங்கள் பெறும் பெரும் வாய்ப்புகள் உண்டாகும். சிவனை அதிலும் குறிப்பாக, சிவனும் சக்தியும் இணைந்திருக்கின்ற அர்த்தநாரீஸ்வரரை வழிபடுங்கள். துன்பங்கள் விலகி, நன்மைகள் பிறக்கும்.

துலாம்

துலாம்

தொழிலில் உள்ள கூட்டாளிகளின் மூலமாக சின்ன சின்ன விரயச் செலவுகள் உண்டாகும். உங்களுடைய முன்னேற்றத்துக்கான முயற்சியில் உங்கள் நண்பர்களுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் உருவாகலாம். அரசாங்கத் தரப்பிடமிருந்து நடந்து முடிய வேண்டிய, வேலைகள் கொஞ்சம் காலதாமதமாகவே முடியும். விரும்பிய பொருள்களை வாங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடன் பிறந்த சகுாதரர்கள் உங்களுக்கு அனுகூலமாகவே நடந்து கொள்வார்கள். பணியில் உள்ளவர்களுக்கு உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். பெற்றோர்களுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். புதிய பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். உங்களுடைய முயற்சிகள் ஈடேறும் மாதமாக இது அமையும். லட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள் கஷ்டங்கள் விலகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

கலைத்துறையில் உள்ளவர்களுடைய முழு திறமைகளும் வெளிப்படும். பெற்றோர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் நலத்தில் இருந்து வந்த சின்ன சின்ன சிக்கல்களும் தீர்ந்து போய், உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் கொஞ்சம் அமைதியுடன், அன்போடு நடந்து கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான லாபங்கள் உண்டாகும். கால்நடைகளுக்கு மருத்துவ செலவுகள் வரலாம். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டுக்கு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு உங்களுடைய முயற்சி வெற்றி உண்டாகும். உயர் கல்விக்கான முயற்சிகள் மாணவர்களுக்கு கைகூடி வரும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் லட்சுமிதேவியை வழிபடுதல் செய்ய வேண்டும்.

தனுசு

தனுசு

இதுவரை செய்து வந்த ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிப்பை அதிகரிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரங்களில் இருந்த போட்டிகளைச் சமாளித்து லாபம் அடைவீர்கள். திரும்பிக் கொடுக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த கடன்களைத் திருப்பிக் கொடுப்பதற்கான முயுற்சிகளைச் செய்வீர்கள். ஆன்மீகத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே இருந்து வந்த, கருத்து வுறுபாடுகள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய வாக்கு வன்மையினால், பெருமை உண்டாகும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையைக் கடைபிடியுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளினால் உங்களுக்கு உங்களுடைய முன்னோர்களிடம் இருந்து தகுந்த ஆலோசனையும் வழிகாட்டுதலும் உங்களுக்குக் கிடைக்கும்.

மகரம்

மகரம்

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக, வெளியூா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். வியாபாரத்தில் உங்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட சில முக்கிய நுணுக்கங்களையும் சூட்சமங்களையும் கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்யும் பணிகளில் மற்றவர்களுடைய விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு உண்டு. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செயல்படுங்கள். செய்கின்ற காரியம் எதுவாக இருந்தாலும் அதை நிதானமாகச் செய்து முடியுங்கள். தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். வீணான அலைச்சல்கள் உண்டாகும். இதுவரையில்லாத கடன் தொல்லைகள் இப்போது குறைய ஆரம்பிக்கும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். வாகனப் பயணங்களில் கொஞ்சம் கவனத்துடன் செல்லுங்கள். சிந்தனையின் போக்கில் உங்களுக்கு மாற்றங்கள் உண்டாகும். ஞாயிற்றுக் கிழமைகளில் சிவ பெருமானை வழிபட்டு வாருங்கள்.

கும்பம்

கும்பம்

உங்களுடைய ஆரோக்கியத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுக்கு பதவி உயர்வு உண்டாவதற்கான வாய்ப்புகளும் உண்டாகலாம். உயவினர்களால் உங்களுக்குப் பெரும் ஆதாயங்கள் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் குறைந்து ஒரு தெளிவு பிறக்கும். உங்களுடைய நண்பர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். சர்வதேச அளவில் வணிகம் சார்ந்த முதலீடுகளில் கொஞ்சம் கவனம் தேவை. அரசு அதிகாரிகளிடம் கொஞ்சம் அமைதியாகச் செயல்படுங்கள். கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் துர்க்கா தேவியை வழிபட்டு வாருங்கள்.

மீனம்

மீனம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் இன்னல்கள் உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் எளிதாகச் சமாளித்து விடுவீர்கள். உங்களுடைய சந்தேக புத்தியினால் நெருக்கமானவர்களைக் கூட சந்தேகப்பட்டு, கருத்து மோதல்களை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. வேறு வேலை தேடுகின்றவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய உடல் நலத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் நீங்கி, உடல் நலத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உடன் பிறந்த சகோதரர்களிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதத்தைத் தவிர்த்து விடுங்கள். பொன், பொருள் சேர்க்கைள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடன் உதவிகள் கிடைக்கும். நவ கிரகத்தில் உள்ள சூரிய தேவனை வழிபடுங்கள். நல்லதே நடக்கும். சிறு கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனி போல விலகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

monthly predicitions for tamil month of puratasi

as a person, you are determined and also seem to have strong willpower, which are the positive aspects of your zodiac
Story first published: Monday, September 17, 2018, 13:41 [IST]
Desktop Bottom Promotion