Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பீர் வாங்க முதலையுடன் கடைக்குள் சென்ற நபர் - (வீடியோ)
பீர் வாங்க முதலையுடன் கடைக்குள் சென்ற நபர் - (வீடியோ)
செல்ல பிராணிகள் வளர்ப்பது பிரச்சனை அல்ல, ஆனால், அந்த பிராணிகளால் சுற்றி இருக்கும் நபர்களுக்கும், அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். அக்கறையுடன் வளர்க்க வேண்டும்.
செல்ல பிராணிகளை குழந்தைகள் போல வளர்ப்பவர்களும் ஏராளாமானோர் இருக்கிறார்கள். வாக்கிங் என்று மட்டுமில்லாது, சிலர், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் போதும், ஷாப்பிங் செல்லும் போதிலும் கூட செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

ஆனால், ஃப்ளோரிடாவை சேர்ந்த ஒரு இளைஞர், தான் வளர்க்கும் முதலை குட்டியை காரில் உடன் அழைத்து சென்றது மட்டுமின்றி. ஒரு சூப்பர் மார்கெடிற்குள் பீர் வாங்க அந்த முதலையுடன் நுழைந்து மற்றவர்களை அச்சுறுத்தியும், கேலி செய்தும் விளையாடி இருக்கிறார். இதனால், ஷாப்பிங் செய்ய வந்த சிலர் பயந்து ஓடியதாகவும் அறியப்படுகிறது.
முதலையை வைத்து விளையாட்டு காட்டி அச்சுறுத்திய அந்த இளைஞரின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஃப்ளோரிடாவை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் அந்த இளைஞர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தேடி விசாரணை செய்து வருகிறார்கள்.
காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள் என்று வகை பிரித்து வைத்திருந்தாலும் அமெரிக்கா போன்ற பெரும் நாடுகளில் மக்கள் காட்டு விலங்குகளையும் வீட்டில் வைத்து வளர்த்து அட்டகாசம் செய்து வருகிறார்கள். சிலர் லைசன்ஸ் வாங்கி, லீகலாக சிங்கம், புலிகள் எல்லாம் கூட வளர்க்கிறார்கள். ஆனால், அவற்றை வளர்க்கும் அளவிற்கு இடம் மற்றும் பொருள் வசதி இருக்க வேண்டும்.
இப்படியான அபாயகரமான விலங்குகளை வளர்ப்பதில் ஆர்வம் இருந்தால் அதை பண்ணை வீட்டில் மட்டும் வைத்து வளர்க்க வேண்டும் அதை விடுத்து, பொதுமக்கள் வெகுவாக வந்து செல்லும் சூப்பர் மார்கெட்டுக்கு எல்லாம் அழைத்து வந்து அட்டூழியம் செய்வதென்பது சற்றே திமிர் பிடித்த காரியமாக காணப்படுகிறது.
அதிலும், வீடியோவில் தோன்றி இருக்கும் இந்த இளைஞர் ஒரு முதலை குட்டியை எடுத்துக் கொண்டு சூப்பர் மார்கெட்டுக்குள் ஓடி பிடித்து பயம் காட்டி விளையாடி இருக்கிறார். அவர் முதலையின் வாயை கட்டி இருந்தாலுமே கூட சிலர் பயந்து ஓட, சிலர் அந்த இளைஞரை முதலையுடன் வீடியோ எடுத்துக் கொண்டும் இருந்தனர். சூப்பர் மார்கெட்டில் வேலை செய்து வந்த ஒருவர், அருகே சென்று தொட்டு பார்த்து மகிழ்ந்தார்.
முதலை நிலத்தில் வேகமாக ஓடாது என்றாலும், ஒருவேளை இவர் தவற விட்டுவிட்டாலோ, அல்லது சிறுவர், குழந்தைகளை அந்த முதலை தாக்கிவிட்டாலோ அசம்பாவிதமான காரியம் உண்டாவது நிச்சயம். எனவே, கேலி, விளையாட்டு என்ற பெயரில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை இத்தகைய இளைஞர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications