அம்மா, காருல இருக்க பிரா யாருது? ஒரு கேள்வியில் அப்பாவை வீட்டில் இருந்து ஓட வைத்த மகள்!

அம்மா, காருல இருக்க பிரா யாருது? ஒரு கேள்வியில் அப்பாவை வீட்டில் இருந்து ஓட வைத்த மகள்!

By Staff

ஒரு விஷயம் கணவன் - மனைவி உறவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்றால்? அது என்ன? யாரிடம் கேட்டாலும் பெரும்பாலும் இதற்கு கிடைக்கும் பதில் வேறு ஒரு நபருடன் உறவில் இருப்பது என்று கூறுவார்கள். வேறொரு நபருடன் தவறான உறவில் இருப்பது துணைக்கு தெரியவந்து சிக்குவதை காட்டிலும் வேறென்ன விஷயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.

little-girl-innocently-asked-mum-what-her-bea-was-doing-in-the-car

இங்கே ஒரு தம்பதியின் நான்கு வயது மகள் ஒருவர், அம்மாவிடம் நேராக சென்று... "அம்மா, ஏன் அப்பாவின் காரில் பிரா இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்? அவ்வளவு தான் வேறென்ன செய்ய வேண்டும் இதை விட... ஒரு நொடியில் அதிர்ந்து போய்விட்டார் அந்த தந்தை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்விட்டர்!

ட்விட்டர்!

Angrymantv என்ற முகவரியில் ட்விட்டர் பக்கத்தில் செயற்பட்டு வரும் நபர் ஒருவர், கேலியான பதிவொன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவை கண்ட பலருக்கும் ஒருவிதமான அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அந்த நபரின் மகள்... நேராக அம்மாவிடம் சென்று... உள்ளாடை ஏன் காரில் இருக்கிறது என்று ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறாள். திடீரென மகளிடம் இருந்து இப்படியான கேள்வியை அப்பா - அம்மா இருவரும் எதிர்பார்க்கவில்லை.

சந்தேகம்!

சந்தேகம்!

ஆனால், அப்பாவுக்கு சந்தேகம்... என் காரில் கடைசியாக நான் பார்த்த போது பிரா போன்ற பொருள் எதுவுமே இல்லையே என்று வியக்கிறார். ஒருபுறம் சந்தேகம் வலுக்க மறுபுறம் மனைவியின் கண்களில் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது. அவரது கண்களில் இருந்து பேசாமலேயே கேள்வி கணைகள் இவரை நோக்கி பாய்ந்துக் கொண்டிருந்தன. அப்போ எனக்கு தெரியாம யாரோ ஒரு பொண்ணு உன் வாழ்க்கையில இருக்காளா? என்பது போல முறைக்கிறார்.

ஓட்டம்!

ஓட்டம்!

இதுக்கு மேலேயும் காத்திருந்தால்... அடுத்த நாளே விவாகரத்தாகிவிடுமோ என்ற அச்சத்தில்... மகளை தூக்கிக் கொண்டு காருக்கு ஓடுகிறார்கள் அப்பாவும், அம்மாவும். எங்கே பிரா இருக்கிறது என்று தேடிய கணவன் மனைவிக்கு அப்படியாக எந்த பொருளும் கிடைக்கவில்லை. மேலும், கணவன் சந்தேகத்தில் தேட, மனைவி யாரந்த பெண் என்று அறிந்துக் கொள்ள தேடுகிறார்.

என்னது அது?

என்னது அது?

இப்படியாக தேடிக் கொண்டே இருக்க கணவன் - மனைவி இருவருக்குமே அப்படியான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. கடைசியில், அப்பா அம்மா விழுந்து, விழுந்து தேடுவதை கண்டு சோர்ந்து போன குழந்தை. கண்ணு முன்னாடியே இருக்கு இது உங்களுக்கு தெரியலையா என்று ஒரு பொருளை காட்டினார். அது இருவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது.

ஃபேஸ் மாஸ்க்

நான்கு வயது மட்டுமே நிரம்பிய அந்த பெண் குழந்தை காண்பித்தது பிரா அல்ல. ரெஸ்பிரேட்டரி ஃபேஸ் மாஸ்க் (Respiratory face-mask) அதை கார் ஓட்டி வீட்டு முன் நிறுத்திய பிறகு, தனது கியர் பாக்ஸ் அருகிலேயே வைத்துவிட்டு வந்திருக்கிறார் அப்பா. அந்த மாஸ்கை தான் பிரா என்று தவறாக கருதிய பெண் குழந்தை ஒரு நிமிடத்தில் பெற்றோர் வயித்தில் புளியை கரைத்திருக்கிறார். முக்கியாமாக அப்பா மிகவும் பாவம்.

நகைச்சுவை!

நகைச்சுவை!

@angrymantv என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து ஒரு நபர் தனது மகள் செய்த காரியம் என்று இந்த நிகழ்வை குறித்து பதிவிட, இது ட்விட்டர் பயனாளிகள் மத்தியில் பெரும் கேலிக்கூத்தாக மாறியது. அந்த பதிவை லைக், ரீ-ட்வீட், கமெண்ட் பண்ணி ஏகபோகமாக டிரெண்ட் ஆக்கிவிட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு நொடியில் கண்டதை நினைக்க வைத்துவிட்டாள் அவர்களது நான்கு வயது செல்ல மகள்.

வைரல்!

வைரல்!

@angrymantv என்ற டிவிட்டார் முகவரி கொண்ட அந்த நபரின் இந்த பதிவு 1.70 இலட்சம் லைக்ஸ், 65 ஆயிரத்திற்கும் மேலான கமெண்ட்டுகள் மற்றும் ரீ-ட்வீட்கள் ஆகி ட்விட்டரில் வைரல் பதிவாக மாறியது.

அந்த பதிவை படிக்க துவங்கியுடன்... அனைவருமே என்னவோ ஏதோ என்று நினைக்க... முடிவு நகைச்சுவையாக அமைய... அனைவரும் அதை விரும்பி ரசித்து பகிர துவங்கினார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion