For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாய் மட்டுமல்ல இந்த மிருகங்களும் உங்களுக்கு மரணம் ஏற்படபோவதை முன்கூட்டியே அறிய இயலும்

|

மரணம் என்பது பூமியில் பிறந்த அனைவருக்குமே நிகழும் பொதுவான நிலையாகும். ஆனால் அது எப்போது நிகழும், எப்படி நிகழும் என்பதே நமது வாழ்வின் ஆகச்சிறந்த மிகப்பெரிய ரகசியம் ஆகும். அனைவருக்குமே தங்கள் மரணத்தை பற்றி தெரிந்து கொள்ள சிறிது ஆர்வமும், நிறைய பயமும் இருக்கும். மற்ற உயிரினங்களை விட அறிவு அதிகமாக இருக்கிறது என்று கூறப்படும் நம் மனித இனத்தால் மரணம் நிகழப்போவதை அறியமுடியாது. ஆனால் மற்ற உயிரினங்களால் நம் மரணத்தை முன்கூட்டியே அறிய முடியும்.

list of animals which can predict death

உண்மைதான், நமக்கு மரணம் நேரப்போவதை நம்மை விட நம்மை சுற்றியுள்ள சில உயிரினங்களால் உணர இயலும். பொதுவாக எமன் வருவது நாய் கண்களுக்கு தெரியுமென்று கூறுவார்கள், நாய்க்கு மட்டுமல்ல வேறு சில உயிரினங்களுக்கும் எமன் வருவது தெரியும். இந்த பதிவில் எமன் வருவது எந்தெந்த உயிரினங்களுக்கு தெரியும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆந்தை

ஆந்தை

மேற்கு நாடுகளில் உள்ள ஒரு பிரபலமான பழமொழி " ஒரு ஆந்தை அலறும்போது ஒரு இந்தியர் மரணிப்பார் ". இந்த ஆந்தை அலறும்போது அந்த இடத்திற்கு நெருக்கமான ஒருவர் விரைவில் மரணிக்க போகிறார் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நம்பிக்கையானது கான்ஸ்டன்ட் சமயத்தில் தோன்றியது, சில கத்தோலிக்க புனிதர்கள் ஆந்தைகள் தீயசக்திகளின் பறவை எனவும் அவை இரவில் கூடி அலறும்போது அவை துர்சகுனத்தின் அடையாளம் என நம்பப்படுகிறது.

கருப்பு பட்டாம்பூச்சி

கருப்பு பட்டாம்பூச்சி

இது பூர்வ காலங்களில் இருந்த நம்பிக்கையாகும், இன்றும் இது பல நாடுகளில் நிலவி வருகிறது. அவற்றின் நிறம் மற்றும் உருவம் காரணமாக அவை தீயசக்திகள் மற்றும் மந்திரவாதிகளுடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது. இதனால்தான் இன்றும் மக்கள் வீட்டிற்குள் கருப்பு பட்டாம்பூச்சி நுழைந்தால் அச்சம் கொள்கிறார்கள். அப்படி நுழைந்தால் விரைவில் அந்த இல்லத்தில் மரணம் சம்பவிக்கும் என்பது நம்பிக்கை.

வௌவால்

வௌவால்

இது உலகம் முழுவதும் நிலவி வரும் கலாச்சாரமாகும், பண்டைய நாகரிகங்களான மாயன், ஆஸ்டெக்ஸ் போன்ற காலங்களிலேயே வௌவால் தீயசக்தியாக கருதப்பட்டது. கருப்பு பட்டாம்பூச்சி போலவே வௌவால் ஆனது மரணம் மற்றும் இருள்சக்திகளுடன் தொடர்புடையது. இரவு நேரத்தில் வௌவால் கதவு அல்லது ஜன்னலில் இறக்கை கொண்டு மோதினால் அங்கு உறங்குபவர் விரைவில் மரணிக்க வாய்ப்புள்ளது.

வெள்ளை ஆந்தை

வெள்ளை ஆந்தை

மாந்திரீகம் மற்றும் தீயசக்திகளுடன் தொடர்புடைய விலங்குகளில் மற்றொரு விலங்கு வெள்ளை ஆந்தையாகும். வெள்ளை ஆந்தை ஆனது கெட்ட சகுனம் மற்றும் துரதிர்ஷ்டத்தை கொண்டுவர கூடியது என்பது பல நூறாண்டுகளாக நிலவும் நம்பிக்கையாகும். நோய்வாய்ப்பட்டவர்கள் வெள்ளை ஆந்தையை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் அன்றே இறக்க நேரிடலாம். மேலும் இது அழுவதை கேட்க நேர்ந்தால் விரைவில் உங்களுக்கு நெருக்கமானவர் இறக்க வாய்ப்புள்ளது.

MOST READ: வெறும் ரூ.234யுடன் தெருவில் அழுதுக் கொண்டிருந்த நடிகர், இன்று 1500 கோடிகளுக்கு அதிபதி!

கருப்பு குதிரை

கருப்பு குதிரை

கருப்பு குதிரையும் ஒருவரின் மரணத்தை அறிவிக்க இயலும். கருப்பு குதிரையானது ஒருவரை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தால் அவருக்கு விரைவில் மரணம் ஏற்படும்.

கோழி

கோழி

இது பரவலாக நிலவும் ஒரு நம்பிக்கையாகும், கோழியுடன் ஒரு சேவல் இருப்பதை பார்த்தால் அவருக்கு தெரிந்த திருமணம் ஆகாத ஒரு பெண் விரைவில் மரணிப்பார். இரண்டு கோழிகளுடன் ஒரு சேவலை பார்த்தால் தம்பதிகளாக இறக்க வாய்ப்புள்ளது.

பூனை

பூனை

பூனையால் ஒருவர் இறப்பதற்கு முன் அவர் உடலில் இருந்து வெளிப்படும் வாசனையை அறிய இயலும். அந்த வகையில் ராட் தீவில் ஒரு மருத்துவமனையில் வசித்து வந்த ஆஸ்கர் என்னும் ஒரு பூனை அந்த மருத்துவமனையில் 50 நபர்கள் இறக்கும்போதும் அந்த அறையில் இருந்தது. ஏனெனில் சடலங்களாக மாறும் முன் மனித உடலில் வெளிப்படும் மணத்தை பூனைகள் உணர இயலும்.

நாய்

நாய்

பூனைகள் போலவே நாய்களாலும் இறப்பதற்கு முன் மனிதர்கள் வெளிப்படுத்தும் வாசனையை உணர இயலும். குறிப்பாக தங்கள் உரிமையாளரின் மரணத்தை நாய்கள் முன்கூட்டியே அறிய இயலும். அதனால்தான் நாய்கள் இப்போது பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் நாய்களால் சுனாமி, பூகம்பம் போன்றவற்றை முன்கூட்டியே அறிய இயலும்.

MOST READ: ஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்

நரி

நரி

நீங்கள் பயணத்தில் இருக்கும்போது இந்த விலங்கு வலது புறம் இருந்து இடப்புறம் நோக்கி சென்றால் அது மிகவும் மோசமான சகுனம் ஆகும். ஒருவேளை இது உங்கள் வீட்டுக்குள் நுழைய நேர்ந்தால் விரைவில் உங்கள் இல்லத்தில் மரணம் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

list of animals which can predict death

Some animals have the super power to predict death before it happens. Check out the list of animals which can predict death.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more