Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
இந்த நடிகர், நடிகைகளின் இயற்பெயர் என்னன்னு உங்களுக்கு தெரியுமா?
இந்த நடிகர், நடிகைகளின் இயற்பெயர் என்னன்னு உங்களுக்கு தெரியுமா?
திரைப்படத்தில் நடிக்க வருவோர் பலர் தங்கள் பெயரை மாற்றிக் கொள்வார்கள். ஆனால், அப்படி பெயர் மாற்றிக் கொண்டவர்கள் எல்லாம் திரையுலகில் வெற்றியாளர்களாக, சாதனையாளர்களாக மாறினார்களா என்றால், இல்லை என்பதே உண்மை.

சிலர் தங்கள் பெயரை ராசிக்காக மாற்றிக் கொள்வார்கள். சிலர் ஏற்கனவே அந்த பெயரில் ஒரு நடிகை இருப்பதால் தங்கள் பெயர மாற்றிக் கொள்வார்கள். சிலருக்கு அவர்களை அறிமுகம் செய்து வைக்கும் இயக்குனர்கள் பெயரை மாற்றி வைப்பார்கள்.
இப்படி ஏதேனும் ஒரு காரணத்தால் தங்கள் பெயரை மாற்றி, ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பெற்ற தமிழ் பிரபல நடிகர், நடிகைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

ஜம்ஷத் சேதிராகத்!
நடிகர் ஆர்யாவின் இயற்பெயர் ஜம்ஷத் சேதிராகத். ஜம்ஷத்தின் பெயரை ஆர்யா என்று மாற்றியவர், இவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் ஜீவா. உள்ளம் கேட்குமே படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது, ஜம்ஷத்தின் பெயரை ஆர்யா என்று மாற்றிக் கொள்ள அறிவுறுத்தினார் இயக்குனர் ஜீவா. ஜீவா கூறியதும் சற்றும் தயங்காமல் தன் பெயரை ஆர்யா என்று மாற்றிக் கொள்ள சம்மதம் தெரிவித்தார் ஜம்ஷத் என்கிற நடிகர் ஆர்யா.

திலீப் குமார்!
எ.எஸ். திலீப் குமார் என்றால் உங்களில் எத்தனை பேருக்கு இவரை அடையாளம் தெரியும். இவரது தீவிர ரசிகர்கள் வேண்டுமானாலும் இன்னும் இவரது இந்த பெயரை மனதில் நினைவு கொண்டிருக்கலாம். ஆம். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று வந்த ஏ.ஆர். ரஹ்மானின் இயற்பெயர் தான் திலீப் குமார். தனது சகோதரி நோய்வாய்ப்பட்டு போன சமயத்தில் கிடைத்த உதவியின் காரணத்தால் திலீப் அவரது அம்மா மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள் மதமாற்றம் செய்துக் கொண்டனர். அப்போது தான் திலீப் தனது பெயரை அல்லா ரக்கா ரஹ்மான் என்று மாற்றிக் கொண்டார்.

அமர்!
நடிகர் அமீர் கான் தெரியும், இயக்குனர் அமீர் தெரியும்.. யார் இந்த நடிகர் அமர்... தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்திரி அவர்களின் இளைய மகன் ஜீவாவின் இயற்பெயர் தான் அமர். சம்ஸ்க்ருத மொழியில் அமர் என்றால் இறப்பு இல்லாத, அழிவில்லாத என்ற பொருள் ஆகும். நடிக்க வந்த பிறகு அமர் தனது பெயரை ஜீவா என்று மாற்றிக் கொண்டார். ஜீவா என்றால் உயிர் என்ற பொருளாகும்.

டயானா மரியம் குரியன்!
இசை அமைப்பாளர் ரஹ்மானை போலவே இடையே மதமாற்றம் செய்துக் கொண்டனர் டயானா. ஆம்! நாம் அனைவரும் அறிந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் டயானா மரியம் குரியன். பிரபு தேவாவை காதலித்து வந்த நயன்தாரா ஒருக்கட்டத்தில் திருமணம் செய்துக் கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். அப்போது தான் கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் டயானா மரியம் குரியன். ஆனால், எதிர்பாராத பிரச்சனைகள் காரணத்தால் அந்த காதல் முறிந்தது. ஆனால், அதன் இறகு நயன்தாரா மீண்டும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறவில்லை. திரைப்படங்களில் நடிக்க துவங்கிய பொது தான் தன் பெயரை நயன்தாரா என்று மாற்றிக் கொண்டார் இவர்.

சிவாஜி ராவ்!
நாம் அனைவரும் அறிந்த பெயர் மாற்றம் தான் இது. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ். இவர் தமிழ்நாட்டிற்கு வந்து நாடங்களில் நடித்து வந்த போதிலும் இதே பெயருடன் தான் மேடை ஏறி வந்தார். ஆனால், சிவாஜி ராவின் குருநாதர் கே.பி. அவர்கள் தான் திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைத்த போது, சிவாஜியை ரஜினிகாந்த் என பெயர் மாற்றினார். அதுவே பின்னாளில் இந்திய திரை யுலகில் யாராலும் மறக்க முடியாத பெயராக நிலைபெற்றது.

ஆஷா குட்டி!
ரேவதியின் இயர் பெயரே மிக அழகான, கியூட்டான பெயர் தான். ஆனால், எனவோ, நடிக்க வந்த பிறகு தனது ஆஷா குட்டி என்ற பெயரை ரேவதி என்று மாற்றிக் கொண்டார்.

சுஹாஷினி ராஜாராம்!
தனது இயர் பெயர் கொஞ்சம் நீளமாக இருப்பதாக கருதினாரா, அல்லது தன் பெயரில் ஏற்கனவே ஒரு பெரும் திரை குடும்பத்தை சேர்ந்த நடிகையின் பெயர் இருக்கிறது என்று கருதினாரோ தெரியவில்லை. நடிக்க வந்த பிறகு தன் பெயரை சிநேகா என்று மாற்றிக் கொண்டார் சுஹாஷினி ராஜாராம். சிநேகா என்ற பெயருக்கு ஏற்ப அனைவராலும் விரும்பப்பட்டவர் சுஹாஷினி ராஜாராம்.

சரவணன்!
நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சரவணன் நடிப்பில் ஆர்வம் இன்றி, சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்து வந்தார். ஆனால், வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. தேடி வந்த வாய்ப்பினை தட்டிவிடாமல் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு பெரும் உயரத்தை தொட்டார் சரவணன். சிவகுமார் முருக பக்தர் என்பதால் தன் இரு மகன்களுக்கும் முருகனின் பெயரையே சூட்டினார். ஆனால், திரைப்படத்தில் அறிமுகம் ஆகும் போது சரவணன் தன் பெயரை சூர்யா என்று மாற்றிக் கொண்டார்.

ஜோசப்!
ஜோசப் என்ற பெயர் எச். ராஜாவினால் மிகவும் சர்ச்சைக்கு ஆளானது. நடிகர் விஜயை அவரது இயற்பெயரை சுட்டிக் காட்டி மதவாத பிரிவினையை தூண்டுகிறார் எச். ராஜா என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர். விஜய் தன் பெயரை பெரிதாக மாற்றிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, திரைப்படத்தில் தன் பெயரை சுருக்கிக் கொண்டார் என்றே கூற வேண்டும். ஜோசப் விஜய் எனும் தன் பெயரை விஜய் என்று அடையாளப்படுத்திக் கொண்டார் தளபதி விஜய்.

கென்னடி ஜான் விக்டர்!
இவரது தீவிர ரசிகர்களில் வெகு சிலருக்கு மட்டுமே இந்த இயர் பெயர் தெரியும். கென்னடி ஜான் விக்டர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த அப்பா மற்றும் இந்து மதத்தை சேர்ந்த அம்மாவிற்கு மகனாக பிறந்தவர். கென்னடியின் தந்தை துணை நடிகராக நடித்து வந்தவர். ஆகவே, சிறு வயதில் இருந்தே நடிகராக வேண்டும் என்பது கென்னடிக்கு பேரார்வமாக இருந்தது. அதே போல பல கடினமான சூழல்களை கடந்து வந்து டப்பிங் கலைஞராக பணியாற்றி பிறகு பெரும் நடிகராக வளர்ந்து ஜாம்பவானாக நிலை கொண்டிருக்கிறார் விக்ரம் என்கிற ஜாம் கென்னடி விக்டர்.

பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன்!
தமிழ் திரை யுலகில் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய கலைஞர். ஆனால், பார்த்தசாரதி என்றால் இவரை பற்றி யாருக்கும் தெரியாது. ஆம்! பன்முக கலைஞர், நடிப்பு வித்தகன் கமல்ஹாசன் அவர்களுக்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் பார்த்தசாரதி தான். இவரது தகப்பனார் ஸ்ரீனிவாசன் அவர்கள் ஒரு வழக்கறிஞர். பின்னாளில் இவரது குடும்பத்தில் ஹாசன் எனும் பெயர் குடும்ப பெயராக உருவானது அப்படி தான் பார்த்தசாரதி கமல்ஹாசன் ஆனார் என்றும் அறியப்படுகிறது. பரமக்குடியை பூர்விகமாக கொண்ட பார்த்தசாரதி என்கிற கமல்ஹாசன் தன்னை தானே நாத்திகவாதியாக அறிவித்துக் கொண்டவர்.

வெங்கட் பிரபு!
வெங்கட் பிரபு என்றால் நம் அனைவருக்கும் இயற்குனர் வெங்கட் பிரபுவை தான் தெரியும். ஆனால், இந்த வெங்கட் பிரபுவும் ஒரு இயக்குனர் தான். ஆனால், இவர் ஒரு நடிப்பு அரக்கன், சிறந்த தயாரிப்பாளரும் கூட. நிறைய இளம் திறமையாளர்களை தமிழக திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த, வளர்த்து விட்ட பெருமை இந்த வெங்கட் பிரபுவை சேரும். துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகம் ஆன போது, இவரது பெயரை ராசிக்கு ஏற்ப தனுஷ் என்று மாற்றி வைத்தனர். ஆரம்பத்தில் நிறைய அவமான பேச்சுக்களுக்கு ஆளானாலும், பின்னாளில் இவர் தேசிய விருது, ஹாலிவுட் திரைப்பட வாய்ப்பு என தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார்.

பிரகாஷ் ராய்!
கர்நாடகாவை சேர்ந்த இவரது இயர் பெயர் பிரகாஷ் ராய். ஆனால், இவரது குருநாதார் கே.பி. இவரது பெயரை திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கும் போது பிரகாஷ் ராஜ் என்று மாற்றினார். கர்நாடகாவில் துளு மொழி பேசும் குடும்பத்தை சேர்ந்தவர் இவர். அறிமுகமான முதல் படத்தில் இருந்தே தனக்கான ஒரு தனி இடத்தை பற்றிக் கொண்டவர். தனித்துவமான நடிப்பின் மூலம் ஐந்து முறை தேசிய விருதுகள் வென்றவர் பிரகாஷ் ராஜ். தெனிந்திய சினிமாவால் மறக்க முடியாத, அசைக்க முடியாத நடிகனாக நிலை பெற்றிருக்கிறார் இந்த செல்லம்.



Click it and Unblock the Notifications











