Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
அர்ஜுனன் தன் மகன் கையாலேயே கொல்லப்பட்ட கதை
மகாபாரத போருக்கு பிறகு கர்ணனின் மகன் விரிஷகேது பாண்டவர்களுடன் இணைந்தான். வில்லாற்றலில் சிறந்து விளங்கிய விரிஷகேதுவிற்கு அஸ்திர வித்தைகளை பயிற்றுவித்தான் அர்ஜுனன். இறுதியில் அர்ஜுனன் மகன் இரவானுடன் நடந
மகாபாரத போரில் பாண்டவர்கள் பெற்றது இராஜ்ஜியமாய் இருந்தாலும், இழந்தது ஏராளம், ஐந்து புதல்வர்கள், அன்பு மகன் அபிமன்யு, மூத்த சகோதரன் கர்ணன், பிதாமகர் பீஷ்மர் என பாண்டவர்களின் இழப்புகள் நீண்டுகொண்டே செல்லும். இதில் கர்ணன் இறந்த பிறகுதான் அவர் தங்களின் அண்ணன் என்பதை அறிந்து வருந்தினர். தன் ஆருயிர் நண்பன் கர்ணன் தன் எதிரிகளுடைய சகோதரன் என்பதை அறிந்து துரியோதனன் அதிர்ச்சி அடைந்தாலும் தன் நண்பனின் மரணத்தை நினைத்து அழுது துடித்தான்.

மகாபாரதத்தில் கர்ணனின் இழப்பு பாண்டவர்கள், கௌரவரக்ள் இருவரையுமே நிலைகுலைய செய்தது. கர்ணனின் இறப்பிற்கு பின் அவருடைய மனைவி மற்றும் மகன்கள் என்ன ஆனார்கள் என்பது பலரும் அறியாத ஒன்று. கர்ணனுக்கு மொத்தம் பத்து புதல்வர்கள் இருந்தார்கள் ஆனால் அதில் ஒருவரை தவிர மீதி அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். மீதம் இருந்த அந்த ஒரு புதல்வன் அர்ஜுனனால் வளர்க்கப்பட்டு இறுதியில் அர்ஜுனனின் மற்றொரு மகன் கையாலேயே கொல்லப்பட்டார்.

கர்ணன்
பாண்டவர்களுக்கு மூத்தவராய் இருந்தும் இறுதிவரை தன் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமலேயே உயிரைவிட்டார் கர்ணன். பீஷ்மர் இருக்கும் வரை போர்க்களம் புகமாட்டேன் என சபதம் புரிந்த கர்ணன் பீஷ்மரின் மறைவுக்கு பின் களம் புகுந்து தன் வீரத்தால் பாண்டவ சேனைகளை துவம்சம் செய்தார். பாண்டவர்களில் அர்ஜுனனை தவிர ஏனைய பாண்டவர்களை எளிதில் வென்றாலும் தன் தாய் குந்திக்கு கொடுத்த வாக்கின் காரணமாய் அவர்கள் யாரையும் வதைக்காமல் விட்டுவிட்டார்.

கர்ணனின் மரணம்
போரின் பதினேழாம் நாள் அர்ஜுனனும், கர்ணனும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போரிட்டனர். இருப்பினும் பரசுராமரின் சாபம், சல்லியனின் துரோகம், கிருஷ்ணரின் சாதுரியம், அர்ஜுனனின் அஸ்திரம் என அனைத்தும் சேர்ந்து மாவீரன் கர்ணனை மண்ணில் சாய்த்தது. தாங்கள் சாய்த்தது தங்களுடைய சகோதரனை என அறிந்த பாண்டவர்கள் தங்களின் புரிந்தது மாபெரும் பாவம் என்பதை அறிந்தனர். கர்ணனின் பிறப்பு இரகசியத்தை முன்னரே கூறாத தங்கள் தாய் குந்தியின் மீது கோபம் கொண்டனர், இனி பெண் இனத்தால் இரகசியத்தை பாதுகாக்க முடியாமல் போகட்டும் என சாபம் அளித்தார் தர்மன்.

கர்ணனின் குடும்பம்
கர்ணன் விருஷாலி என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். பின்னர் துரியோதனனின் வேண்டுகோளுக்கிணங்க சுப்ரியா என்னும் பெண்ணை திருமணம் முடித்தார். சுப்ரியா துரியோதனன் மனைவி பானுமதியின் நெருங்கிய தோழி ஆவார். கர்ணனுக்கு விருஷாலி மூலம் பத்து மகன்கள் பிறந்தனர். அவர்களின் பெயர்கள் முறையே விரிஷேசன், சுதாமா, விரிஷகேது, சித்ரசேனா, சத்யசேனா, சுசேனா, சத்ருஞ்சய, திவிபாதா, பனசேனா மற்றும் பிரசேனா. குருசேத்திர போரில் விரிஷகேதுவை தவிர மீதி அனைவரும் பாண்டவர்களால் கொல்லப்பட்டர்கள்.

போருக்குப்பின்
போருக்கு பின் விரிஷகேது தன் சிறிய தந்தைகளான பாண்டவர்களின் அரவணைப்பில் வளர தொடங்கினான். கர்ணனை தன் கையால் கொன்றதால் என்னவோ அர்ஜுனன் விரிஷகேது மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தான். சொல்லப்போனால் அபிமன்யுவின் இடத்தை விரிஷகேது நிரப்பினான். அர்ஜுனனே தன் தமையனின் மகனுக்கு ஆசானாய் இருந்து வில்வித்தையை கற்றுக்கொடுத்தான். விரிஷகேதுவும் தன் தந்தை கர்ணனை போலவே வில்வித்தையில் சிறந்து விளங்கினான். மேலும் கிருஷ்ணர் விரிஷகேது மீது அதிக அன்பு பாராட்டினார்.

போரில் விரிஷகேது
அர்ஜுனனுடன் சேர்ந்து விரிஷகேது பல போர்களில் பங்கு கொண்டு தன் வீரத்தை சிறப்பாய் வெளிப்படுத்தினான். மேலும் போரில் வெற்றிக்கொண்டு யவனத்தின் இளவரசியை விரிஷகேதுவிற்கு மணம் முடித்தான். பல நாடுகளை வெற்றிகொண்ட அர்ஜுனனும் விரிஷகேதுவும் இறுதியில் நாகா உலகத்திற்கு சென்றனர்.

அர்ஜுனன் மற்றும் விரிஷகேது மரணம்
அர்ஜுனனும், விரிஷகேதுவும் நாக உலகத்தை சென்று போர் புரிய விரும்பினர். அங்கு இரவான் என்ற வீரன் இவர்களை போருக்கு அழைத்தான். தன் எதிரே இருப்பது தன் மகன் என்பதை அறியாத அர்ஜுனன் அவனின் சவாலை ஏற்றுக்கொண்டு விரிஷகேதுவு இணைந்து போர்புரிய தொடங்கினான். போரில் இரவானின் கையே ஓங்கியது. வில்லாற்றலில் அவன் அர்ஜுனனையும் மிஞ்சியவனாக இருந்தான். ஏனெனில் அவன் அர்ஜுனன் மற்றும் நாக உலக இளவரசி உலூபி க்கு பிறந்தவனாயிற்றே. போரின் இறுதியில் அர்ஜுனனும், விரிஷகேதுவும் இரவானால் கொல்லப்பட்டனர்.

அர்ஜுனனின் மறுபிறப்பு
தன் மகன் புரிந்த செயல் கண்டு அதிர்ச்சியடைந்த உலூபி தன் சக்தி மூலம் அதிசய நாகமணியை கொண்டுவந்தார். ஆனால் அதனை வைத்து ஒருவரைத்தான் உயிருடன் கொண்டு வரமுடியும் என்பதால் கிருஷ்ணருடைய ஆலோசனை பேரில் அர்ஜுனனை மீண்டும் உயிருடன் கொண்டுவந்தார். விரிஷகேது வீரமரணம் அடைந்து வீரசொர்க்கம் சென்றடைந்தான். தன் மரணத்திற்கு பிறகு விரிஷகேதுவிற்கு முடிசூட்ட நினைத்திருந்தார் யுதிஷ்டிரன் ஆனால் காலம் அர்ஜுனனுடைய மகன் கையாலேயே கர்ணனுடைய மகனின் உயிரை பறித்துவிட்டது.



Click it and Unblock the Notifications











