For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ணனோட கவச குண்டலத்துக்குள்ள அப்படி என்ன ரகசியம் இருக்குன்னு தெரியுமா?

கர்ணன் மகாபாரதத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த மற்றும் மிகப் பிரபலமான கதாபாத்திரம். ஓர் போர்வீரன், சிறந்த நண்பன், தேடி வரும் வறியவர்க்கு இருப்பது அனைத்தையும் வாரி வழங்கும் கொடை உள்ளம் கொண்டவன்

|

கர்ணன் மகாபாரதத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த மற்றும் மிகப் பிரபலமான கதாபாத்திரம்.

facts about karna birth

ஓர் போர்வீரன், சிறந்த நண்பன், தேடி வரும் வறியவர்க்கு இருப்பது அனைத்தையும் வாரி வழங்கும் கொடை உள்ளம் கொண்டவன், திருப்பங்கள், சோகம், சாபம் என வாழ்வு முழுதும் பல போராட்டங்களை சந்தித்தவன் கர்ணன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ணனின் பிறந்த கதை

கர்ணனின் பிறந்த கதை

Image Courtesy

பிருதை, ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான ஸ்ரீ வசுதேவரின் தங்கை. குந்திபோஜ மஹாராஜாவால் தத்தெடுக்கப்பட்டதால் குந்தி தேவி என்றும் அழைக்கப்பட்டார். ஒரு முறை துர்வாஸ முனிவர் அவர்களை சந்தித்த போது, அவர்களின் வரவேற்பில் மனம் மகிழ்ந்து, குந்தி எதிர்காலத்தில் இதனை பயன்படுத்துவாள் என்று நினைத்து அவளுக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்கிறார். அந்த மந்திரத்தை பயன்படுத்தி, நினைத்த தெய்வத்தின் அம்சமாக ஒரு குழந்தையை பெற முடியும்.

சூரிய பகவான்

சூரிய பகவான்

ஆர்வத்தின் மிகுதியால் அந்த மந்திரத்தை சோதிக்க நினைத்த குந்தி, சூரிய பகவானை நினைத்து, மந்திரத்தை கூறுகிறாள். உடனே சூரிய பகவான் அவள் முன் தோன்றி அவளுக்கு ஒரு குழந்தையை அளிக்க விழைகிறார்.

இதைப் பார்த்து பதறிய குந்தி, "சூரிய தேவா, நான் ஒரு கன்னிப் பெண் ஆவேன். எவ்வாறு நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பேன்?" என வினவினாள்.

கங்கை ஆற்றங்கரை

கங்கை ஆற்றங்கரை

அவள் மீது அக்கறை கொண்டு சூரிய பகவான், அவளுக்கு களங்கம் வராதவாறு சடயோக கர்ப்பத்தின் மூலம், கவச குண்டலத்துடன் கூடிய ஒரு குழந்தையை குந்திக்கு வழங்குகிறார்.

சூரிய பகவான் மறைந்தவுடன், தன்னைச் சுற்றியுள்ள மக்களை எண்ணி பயந்த குந்தி, குழந்தையை எடுத்துக்கொண்டு கங்கையை நோக்கி விரைகிறாள். குழந்தையை, ஆற்றில் மிதந்து வந்த ஒரு கூடையில் வைத்து கங்கையில் விடுகிறாள்.

கர்ணன் வளர்ப்பு

கர்ணன் வளர்ப்பு

ஆற்றில் மிதந்து சென்ற அந்த கூடை, மன்னரின் சாரதியான அதிரதனிடம் சென்றடைகிறது. அதிலிருந்த குழந்தையை எடுத்து அவர், தன் மனைவி ராதையிடம் அளிக்கிறார். அவர்களது இல்லத்தில் கர்ணன் இராதேயனாக வளர்கிறான். இப்போது கர்ணனின் கவசத்திற்கும் குண்டலத்திற்கும் பின்னால் இருக்கும் கதையை பார்ப்போம்.

மகா விஷ்ணு

மகா விஷ்ணு

ஒரு முறை அரக்கன் ஒருவன், பிரம்ம தேவரை வணங்கி, 1000 கவசங்களுடன் கூடிய வெல்ல முடியாத ஆயுதத்தை வரமாகப் பெறுகிறான். அதை வைத்து, மக்களையும் தேவர்களையும் சித்ரவதை செய்கிறான்.

அவனது தொல்லை தாங்காமல் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்களிடம் மகா விஷ்ணு, "கவலை கொள்ளாதீர்கள், நான் நரனாகவும் நாராயணனாகவும் பதரிகா வனத்தில் தியானத்தில் உள்ளேன். நேரம் வரும்போது அவன் என் கையால் மடிவான்" என்று கூறுகிறார்.

இந்த கதையை புரிந்து கொள்ள நாம் பகவான் விஷ்ணு, நரனாகவும் நாராயணனாகவும் அவதரித்த கதையை தெரிந்து கொள்ள வேண்டும்.

நரசிம்ம அவதாரத்தில், ஹிரண்ய கசிபுவை வதம் செய்த பிறகு, சிங்க தலையும் மனித உடலும் கொண்ட நரசிம்மர், நரனாகவும், நாராயணனாகவும் பிரிந்து, தர்மா என்ற துறவியின் குடும்பத்தில் பிறக்கிறார்.

பிறவியிலேயே தைரியம் மற்றும் வீரம் கொண்ட அவர்கள், பதரிகா வனத்தில் த்யானமும், போர்ப்பயிற்சியும் செய்து வந்தனர். ஒரு முறை அந்த வழியாக வந்த பிரஹலாதன், ஆயுதங்களை வைத்துக்கொண்டு அவர்கள் த்யானம் செய்வதை பார்க்கிறான். அதைப் பார்த்து சந்தேகித்த பிரஹலாதன், அவர்களை தன்னுடன் போரிடுமாறு அழைக்கிறான். அந்த போரானது, பல நாட்களுக்கு தொடர்கிறது. எந்த பக்கமும், வெற்றி பெற முடியவில்லை.

பின்பு ஸ்ரீ மகா விஷ்ணுவை வணங்கி பிரஹலாதன், நர நாராயணர்களின் உண்மையை அறிந்து கொண்டு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடை பெறுகிறான்.

அரக்கர் போர்

அரக்கர் போர்

சில வருடங்கள் கழித்து, சஹஸ்ர கவசன் அவர்கள் இடத்திற்கு வந்து, அவர்களை போருக்கு அழைக்கிறான். அவனிடம் நாராயணர், "நாங்கள் உன்னுடன் போரிட ஒப்புக் கொள்கிறோம். ஆனால் எங்களில் ஒருவர் போரிடும்போது, இன்னொருவர், த்யானத்தில் இருப்போம். த்யானத்தில் இருப்பவரை நீ தொந்தரவு செய்யக்கூடாது. இதற்கு சம்மதமா?" என்று கேட்கிறார்.

இதற்கு ஒப்புக்கொள்ளும் சஹஸ்ர கவசன், நாராயணருடன் போரிடுகிறான். இந்த போர் 1000 வருடங்கள் தொடர்கிறது. களைப்படைந்த நாராயணர், நரனிடம் சண்டையிட சொல்லிவிட்டு, தியானிக்கச் செல்கிறார். 1000 வருடங்கள் போரிடும் நரன், அரக்கனின் ஒரு கவசத்தை வெட்டுகிறார். பிறகு நரன் தியானத்தில் இருக்க, நாராயணர் சண்டையிட்டு அடுத்த கவசத்தை வெட்டி விடுகிறார். இப்படியே அவனது 999 கவசங்களை அவர்கள் வெட்டி விடுகின்றனர்.

ஒரே ஒரு கவசம் மட்டும் மிச்சமிருக்க, பயந்து போன அரக்கன், போர்க்களத்தை விட்டு ஓடி, சூரிய பகவானிடம் தஞ்சம் புகுந்தான். அவனிடம் சூரிய பகவான், "என்னால் எப்போதும் உனக்கு பாதுகாப்பு தர முடியாது. நரனும் நாராயணனும் அவர்களது வாழ்நாளை முடித்த பிறகு, உன்னை நான் விட்டு விடுவேன்" என்று கூறுகிறார்.

கவச குண்டலம்

கவச குண்டலம்

குந்தி சூரிய பகவானை நினைந்து, துர்வாஸர் அருளிய மந்திரத்தை கூறிய போது, சூரிய பகவான், சஹஸ்ர கவசனை ஒரு குழந்தையாக மாற்றி குந்தி தேவியிடம் அளிக்கிறார். அதனால் தான் கர்ணன் பிறக்கும்போதே கவச குண்டலங்களுடன் பிறக்கிறான்.

தேவர்களுக்கு வாக்களித்தது போலவே, நரனும் நாராயணனும், அர்ஜுனனாகவும், க்ருஷ்ணனாகவும் பிறந்து, குருக்ஷேத்திரத்தில் கர்ணனாக இருக்கும் சஹஸ்ர கவசனை வதம் செய்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Karna – secret of his birth with armor and ear rings.

Karna is one of the most famous and special character of Mahabharata. A warrior, best friend, a man with a heart to give anything.
Story first published: Tuesday, July 24, 2018, 13:26 [IST]
Desktop Bottom Promotion