For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸ் வாழ்க்கை ஜோரா இருக்கணும்னா 12 ராசிக்காரர்களும் எதிலெல்லாம் கவனம் செலுத்தணும்?

|

அவரை பார்த்திருக்கிறேன், அவளுடன் பேசியிருக்கிறேன். ஆனால்... என்று உதட்டைப் பிதுக்கி தயக்கம் காட்டுவது காதலை சொல்லும்போது மட்டும் தான். எச்சில் விழுங்கி, கைகளைச் சொறிந்து, தொண்டையில் ஒரு உருண்டை நகர்ந்து அப்பப்பா... அந்த தருணத்தில் அத்தனை பெரிய இன்பமான இம்சை அது.

அதேபோல டேட்டிங் அழைப்பதும் இது மாதிரியான ஒரு ரசவாத சிக்கல்தான். ஒருவர் மீது இன்னொருவர் தனிமையில் கொடுத்து வாங்கும் தனிக்கவனத்துக்கு இவ்வளவு போராட்டங்களா என்று நினைக்கலாம். இருக்கிறது... இதனுடைய சூட்சமம் உங்கள் ராசிக்குள் பொதிந்து கிடக்கிறது என்றால் நம்புவீர்களா.. நம்பித்தான் ஆக வேண்டும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இவர்கள் தாம் வகுத்துக் கொண்ட பாதையில் செல்ல விரும்புபவர்கள். இறையாண்மையை விட்டுக் கொடுக்காத இவர்கள், உறவுகளால் இழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எப்போதும் இருக்கும். பயப்பட வேண்டாம், உங்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடாது. உங்களுக்கு தேவையானதை மற்றவர்களிடம் சொல்லி விடாதீர்கள். உங்கள் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்கும், மற்றவரிடம் ஆழ்ந்த அணுகூலத்தை கொடுக்கவும், போட்டு வாங்கும் பயிற்சியை கற்றுக் கொள்ளுங்கள். உங்களை விரும்புபவரிடம் கவனிப்புகள் பற்றி விரைவில் எதையும் கேட்டு விடாதீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்

அர்ப்பணிப்பு மனப்பான்மை உள்ளவர்கள். சரியான நபரை தேர்வு செய்ய நீங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுவது நல்ல விஷயம். நிரந்தரமாக ஒன்றை தேர்வு செய்து விட்டால் அதுவாகவும், அதிலிருந்து மீளவும் போராட வேண்டியிருக்கும். பயம் உங்கள் நிம்மதியை கெடுக்கிறது. உறவுகளிடையே வளரும் இணக்கத்திற்கு தடையாக இருக்கிறது. ஆகையால் காதலை வளர்த்தெடுப்பதற்கு முன் அன்பாலும், தழுவலாலும் உண்மையான மாற்றத்தை அடைய வேண்டும்.

மிதுனம்

மிதுனம்

ஆழமான உறவுகளில் நீண்ட நேரம் கழிக்காதீர்கள் அது மேம்போக்காக சலிப்பையும், பயத்தையும் உருவாக்கி விடும். உணர்ச்சி பெருக்கை செயற்கையாக உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டாம். இணையில் ஒருவருக்கு பயத்தை மறைக்கும்போது அதனை நீங்கள் வெளிக்கொணர வேண்டும். உங்களில் ஒருவர் அன்பின் ஒளியை ஏற்றிப் பாருங்கள் பிரகாசமாக இருக்கும்.

கடகம்

கடகம்

அடிவயிற்றில் பயத்தை வைத்துக்கொண்டு பேசுபவர். உங்கள் உணர்வுகள் மேலோட்டமாக தெரிவதால் நீங்கள் விரும்பியதை விட அதிகம் கிடைக்கிறது. நீங்கள் உங்கள் ப்ரியமானவரின் கருணையில நனைகிறீர்கள். மற்றவர் பெறும் அன்பை விட நீங்கள் அதிக பாசத்துடன் அணுகும் ஒருவரை பெற்றுள்ளீர்கள். அதனால் அழுவதற்கும், காயம்படவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்களுடைய வெளிப்பாடுகள் மற்றவருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கிறது.

சிம்மம்

சிம்மம்

கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில் கடினமாக இருப்பீர்கள். நீங்கள் திறமையானவர். ஆதலால் நீங்கள் உங்களை சாத்தியப்படுத்தலாம். உடனே வசப்பட்டு விடாமல் உங்களுக்குள் உள்ள ஆற்றலை பரிமாறிக் கொள்ள வேண்டும். உங்களை நீங்கள் தெரியப்படுத்துங்கள், விருப்பமானவர்களிடம் வேகமாக உணர்ச்சி வசப்படுவதை நிறுத்தி அமைதியாக முன்னேறுங்கள்.

கன்னி

கன்னி

உப்புப் பெறாத உணர்ச்சிகள் தான் உங்களிடம் உள்ள பெரிய குறை. தன்னிடம் உள்ள மைனஸ்களை சொன்னால் உங்களைவிட்டு விலகி விடுவார்கள் என்று நீங்கள் அச்சப்படுகிறீர்கள். உங்களை நீங்களே அமைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்த தரத்தை யாரும் வைத்துக்கொள்ள முடியாது என்பதை உணர வேண்டும். உங்கள் பகுப்பாய்வு திறனும், அறிவுக்கூர்மையும் உங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடக் கூடாது.

துலாம்

துலாம்

கடின உழைப்பால் அழகானதும் இணக்கமானதுமான வாழ்க்கையை பெற்றவர் நீங்கள். சிலர் சலனங்களை உருவாக்கி நெருக்கத்திலிருந்து இடைவெளியை ஏற்படுத்துகிறார்கள். உங்களுடைய சுறுசுறுப்பான மூளையும் தோற்றமும், உணர்ச்சிகளை தூண்ட வைக்கும. குழப்பம் நிறைந்த உலகத்தில் சஞ்சரிக்கிறீர்கள். அதுதான் பயமுறுத்துகிறது.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்களை யாரோ ஒருவர் அச்சுறுத்துவதாக உணருவது உங்களுக்கு பெரிய தடையாக இருக்கிறது. நெருங்கிய உறவுகளை தவிர்க்காத நீங்கள், சிக்கல்களை தீர்க்க ஆழமாக யோசிப்பவர்கள். உங்கள் திறமை, நேர்மையை கண்டு வியப்பதாக கருதலாம். உங்கள் உணர்ச்சிகளை உங்களுக்குள்ளேயே போட்டு புதைப்பீர்கள். வெளிப்படுத்தினால் துரோகிகள் என நினைப்பார்கள் என்று யோசிக்கிறீர்கள். உண்மையாக நடந்து கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள்.

தனுசு

தனுசு

நீங்கள் ஒரு சாசுவத சந்நியாசி . எதையும் விரும்பாதவர். சுதந்திரமாக திரிய விருப்பமுள்ளவர். உங்களிடம் நெருக்கமாக வருபவர்களிடம் விலகி ஓடுகிறீர்கள். இது அப்படியா இப்படியா என பல்வேறு யோசனைகளுக்கு பிறகு மாட்டுகிறீர்கள். நீங்கள் சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும்

மகரம்

மகரம்

நீங்கள் வலிமையான ஒருவரை தேர்வு செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாக வெளிக்காட்ட வெட்கப்படுகிறீர்கள் உங்களுடைய காயங்களை காட்டினால் அவர்கள் நிராகரிக்ககூடும் என நினைக்கிறீர்கள். நீங்கள் அடுத்தவரின் கடந்தகால காதல் அனுபவங்கள் கற்றுக் கொடுப்பது உங்களுக்கு தேவையாக இருக்கிறது. உங்கள் பாதுகாப்பைக் கடந்த நபரை அனுமதிப்பதோடு உங்களை நேசிப்பதை கற்றுக்கொள்ள வேண்டும்

கும்பம்

கும்பம்

அற்பமான விஷயங்களுக்காக உங்கள் மனம் தர்க்கம் செய்ய விரும்புகிறது. சுயமாகவும், மென்மையாகவும் இருப்பதாக கருதும் நீங்கள், உண்மையை வெளிப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. வேகமான போக்கு கொண்ட நீங்கள் எல்லாத் தேவைகளும் பூர்த்தியாக வேண்டும் என நினைக்கிறீர்கள். மற்றவர்களிடம் இருந்து விடுபட்டால் சுதந்திரத்தை இழந்து விடுவதாக கருதுகிறீர்கள்.தனிமையின் தலைவிதியை மாற்ற நீங்கள் உள்ளத்தை திறந்து பார்க்க வேண்டும்

மீனம்

மீனம்

சுய அறிவோ, சுய சிந்தனையோ உங்களிடம் இல்லாததுதான் மிகப்பெரிய பின்னடைவு, எல்லோருக்கும் அதுவாகவே நடக்கும் நீங்கள் சரியான பச்சோந்தியாக இருக்கிறீர்கள். அடுத்துவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள சில மணி நேரத்தையாவது ஒதுக்குங்கள். உங்கள் வாழ்க்கையில் சிலரையாவது காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். அப்போது உண்மையின் வலிமை உங்களுக்குப் புரியும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Intimacy issues according to your zodiac

Each different sign tends to react in a different manner in any given situation. check here your zodiac sign.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more