200 ரூபாய் சம்பளத்திற்கு 15 வயதில் வேலை செய்யத் துவங்கியவர் இன்று! Wonder Women #12

Posted By:
Subscribe to Boldsky

பிரதமர் மோடியின் அமைச்சவரையில் இளவயது அமைச்சர் என்று போற்றப்படக்கூடியவர் ஸ்மிருதி இரானி. 2003 ஆம் ஆண்டு பாரதிய ஜனதாவில் இணைந்ததிலிருந்து இவரது அரசியல் பிரவேசம் ஆரம்பமானது, அதற்கு முன்னால் சினிமா நட்சத்திரமாக இருந்தார்.

அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் 42 வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் கியூன்கி சாஸ் பி கபி பஹூ தி என்ற தொலைகாட்சித் தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர் இன்று மத்திய அமைச்சராக இருக்கிறார். பள்ளிப்பருவத்திலிருந்தே திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அப்பா பஞ்சாபி அம்மா பெங்காலி டெல்லியில் உள்ள நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தார். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடையில் பணியாற்றிக் கொண்டே ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை சம்பாதித்தார். அப்போதிருந்தே குடும்பத்திற்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும். பொருளாதார ரீதியாக பெற்றோருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தார்.

Image Courtesy

#2

#2

இயல்பாகவே அதிக புத்தகங்களை படிக்கும் பழக்கம் கொண்டவரான இவர், பத்திரிக்கையாளராகவோ அல்லது ஆட்சியாளராகவோ ஆக வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் வாய்புகளும் வாழ்க்கையும் அவரை வேறு திசைக்கு கொண்டு சென்று விட்டன.

Image Courtesy

#3

#3

1998 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மிஸ் இந்தியா போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். இவர் முதன் முதலில் பணியாற்றிய வேலையை கேட்டால் அதிர்ந்துவிடுவீர்கள். பந்த்ராவில் உள்ள எம்சி டொனால்டில் டேபிள் மற்றும் தரையை துடைக்கும் வேலை இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது அவருக்கு இருந்த கனவு என்ன தெரியுமா? கடையின் வாசலில் நின்று கொண்டு வாடிக்கையாளர்களை உள்ளே வர அழைக்கும் வேலை தனக்கு கிடைக்க வேண்டும் என்று மிகவும் விருப்பியிருக்கிறார்.

Image Courtesy

#4

#4

சீரியலில் நடித்ததற்காக நான்கு முறை இந்தியன் டெலிவிஷன் அகாதெமி விருதுகள் இவருக்கு கிடைத்திருக்கிறது.

தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த ஸ்ம்ருதி இரானிக்கு சறுக்க ஆரம்பித்தது, பல தோல்விகளை சந்தித்தார் நிராகரிப்புகள், கடன் சுமை அதிகரித்தது. ஆரம்பத்தில் கியூன்கி சாஸ் பி கபி பஹூ தி குழுவும் இவரை இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கமாட்டார் என்று கருதி நிராகரித்து விட்டனர். அதன் பிறகு ஏக்தா கபூர் தான் இவரே இருக்கட்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார்.

Image Courtesy

#5

#5

2001 ஆம் ஆண்டு ஜுபின் இரானியை திருமணம் செய்து கொள்கிறார் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொள்கிறார். 2004 ஆம் ஆண்டு மஹாராஸ்டிரா இளைஞர் அணிக்கு துணைத்தலைவராக நியமிக்கப்படுகிறார்.

Image Courtesy

#6

#6

2010 ஆம் ஆண்டு பாரதிய ஜனதாவின் தேசிய செயலராக அறிவிக்கப்படுகிறார், அதே ஆண்டு பா.ஜ.கவின் பெண்கள் அணிக்கு தலைவராக்கப்படுகிறார். 2011 ஆம் ஆண்டு குஜராத்தில் சட்டசபையில் போட்டியிட்டு ராஜ்யசபாவிற்கு எம்.பியாக தேர்வாகிறார். தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்த்தேன் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

Image Courtesy

#7

#7

அதே ஆண்டு மனித வள மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்படுகிறார் 2016 ஆம் ஆண்டு மினிஸ்ட்ரி ஆஃப் டெக்ஸ்டைல்ஸ் கிடைத்தது. கூடுதலாக தற்போது செய்தி மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்தையும் கண்காணித்து வருகிறார். இவருக்கு ஜோஹர், ஜோயிஷ் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கூடுதலாக ஷான்லே என்ற தத்து மகளும் இருக்கிறார்.

Image Courtesy

#8

#8

ஷான்லே கணவர் ஜுபின் இரானியின் முதல் மனைவி மோனா இரானிக்கு பிறந்த குழந்தையாகும். ஜூபின் மற்றும் ஸ்ம்ரிதி இருவருமே குழந்தை பருவத்திலிருந்தே நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அப்போது ஜூபின் இரானிக்கு போனி டெயில் எல்லாம் போட்டுவிடுவாராம். அதோடு நிறைய கிண்டல் செய்வாராம்.

Image Courtesy

 #9

#9

இவர் உகர்யா எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தினார் அதன் மூலமாக தோடி சி ஜமீன் தோடா ச ஆஸ்மான் என்ற தொலைகாட்சித் தொடரை தயாரித்தார். நீலம் கோதாரி தொகுத்த வழங்கிய ஓ ல லலா..... நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஸ்ம்ருதிக்கு கிடைத்த பிறகே அவரது வாழ்க்கையே மாறியது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse women wonder women
English summary

Interesting Facts About Central Minister Smirithi Irani

Intresting Facts About Central Minister Smirithi Irani
Story first published: Friday, March 23, 2018, 17:02 [IST]