சுதந்திர இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் என்ன செய்தார் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யாரென்று தெரியுமா ? இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே முதல் பெண்ணாக உலக சுகாதார மையத்தில் பொறுப்பு வகித்தவர், அதோடு எய்மஸ் மருத்துவமனை நிறுவியவர் என பல சாதனைகளை செய்த பெருமைகளின் சொந்தக்காரர் தான் ராஜ்குமாரி அம்ரிட் கவுர்.

பிப்ரவரி இரண்டாம் தேதி 1889 ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள கபுர்தலா எனும் இடத்தில் பிறந்தார். அம்ரிட் கவுரின் தந்தை ராஜா ஹர்னாம் சிங்,கபுர்தலா அரசரின் தம்பி இவர் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறி உத்திரபிரதேசத்தில் வசிக்க ஆரம்பித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அம்ரிட் கவுருக்கு மிகச் சிறந்த கல்வி வாய்ப்பு அமைந்தது, ஆக்ஸ்வோர்டில் கல்வி கற்றார், இளவரசிக்கான அத்தனை சொகுசு வாழ்க்கையும் தாண்டி அவருக்கு கல்வியின் மீது தான் அத்தனை அபிப்ராயம் இருந்தது.

அவரது வாழ்க்கையில் திருப்பு முனை என்பது 1919 ஆம் ஆண்டு நடந்தது.

Image Courtesy

#2

#2

அன்று அவர் அப்பாவின் நெருங்கிய நண்பரான கோபாலாகிருஷ்ண கோகலேவை சந்திக்கிறார். அவர் அம்ரிட் கவுரின் வாழ்க்கைப் பயணத்தையே அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார் அல்லது திசையை மாற்றி வழி காட்டினார் என்றே சொல்லலாம்.

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க வேண்டும் என்ற சுதந்திர தாகம் இப்போது அம்ரிட் கவுரையும் பற்றிக் கொண்டது.

Image Courtesy

#3

#3

அதே காலத்தில் தான் அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடைப்பெற்றது, இதே நேரத்தில் கோகலேவின் வார்த்தைகள் அம்ரித் கவுரின் மனதை தட்டி எழுப்பியது.

அரச பரம்பரையிலிருந்து போராட்ட களத்திற்கு வருவது என்பது அவ்வளவு சாதரணம் கிடையாது. அதுவும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படியான கனவுகளைக்கூட யாரும் கண்டிருக்க மாட்டார்கள்.

Image Courtesy

#4

#4

அப்போதிருந்த விடுதலை போராட்ட வீரர்கள் எல்லாரும் அம்ரிட் கவுரை ஈர்த்தார்கள், தன் நாட்டிற்காக தானும் எதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். 1930 ஆம் ஆண்டு களத்திற்கு வந்தார் அம்ரிட் கவுர்.

Image Courtesy

#5

#5

குறிப்பாக இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை கொண்டிருந்தார். குழந்தை திருமணத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார். அதோடு குழந்தைகளின் திருமண வயதை உயர்த்த கோரி போராடினார்.

போராட்டத்தின் விளைவு முதலில் 14 என்று உயர்த்தப்பட்டு பின்னர் 18 என்று உயர்ந்தது.

Image Courtesy

#6

#6

தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் அதிக ஈடுபாட்டுடன் பங்கேற்றார்.மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையில் பங்கேற்று உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார்.அதோடு தொடர்ந்து காந்தியின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று காந்தியின் ப்ரைவேட் செக்கரட்ரி என்னும் அளவிற்கு உயர்ந்தார்.

ஒரு பக்கம் சுதந்திர இந்தியா என்று கனவு கொண்டு செயல்பட்டாலும் இன்னொரு பக்கம் பெண் விடுதலைக்கான போராட்டங்களும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

Image Courtesy

#7

#7

1942 ஆம் ஆண்டு மிகத் தீவிரமாக இயங்க ஆரம்பித்திருந்தார் அம்ரிட் கவுர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். போராட்டங்களில் பங்கேற்று பல முறை கைதாகியிருகிறார் அதோடு பலமுறை லத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறார்.

Image Courtesy

#8

#8

1945 ஆம் ஆண்டு யுனெஸ்கோஅமைப்பு ஒரு கான்ஃபிரன்ஸ் நடத்தி போது இந்தியாவின் சார்பில் அம்ரிட் கவுர் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து சட்டசபைக்குச் சென்ற வெகு சில பெண்களில் இவரும் ஒருவர்.

அவர்கள் பெண்ணுரிமை தொடர்பான சட்டம் இயற்ற வலியுறுத்தினார்கள்.

Image Courtesy

#9

#9

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை பொறுப்பேற்றது, அதில் அம்ரிட் கவுரும் இடம்பெற்றார். இவர் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறுப்பேற்றதும், பொது சுகாதாரம், பெண்களின் ஆரோக்கியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Image Courtesy

#10

#10

1950 ஆம் ஆண்டு உலக சுகாதார மையத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . இந்தியாவில் ஏன் ஆசியாவிலேயே முதன் முறையாக ஒரு பெண் உலக சுகாதார மையத்தை நிர்வகிப்பது என்பது அதுவே முதன் முறை.

Image Courtesy

#11

#11

அதன் பிறகு 1957 ஆம் ஆண்டு எய்மஸ் மருத்துவக் கல்லூரி நிறுவ அடிப்படை ஆதாரமாகவும் தூண்டுகோலாகவும் அம்ரிட் கவுர் இருந்திருக்கிறார். சிம்லாவில் தனக்கும் தன்னுடைய மூதாதையர்களுக்கும் இருந்த சொத்துக்களை எல்லாம் எய்மஸ் மருத்துவக் கல்லூரிக்கே எழுதிக் கொடுத்தார்.

#12

#12

பெண்கள் என்றால் பாதுகாப்பான ஒரு வளையத்திற்குள் தான் இருப்பார்கள் என்ற கட்டுப்பாடினை உடைத்து, அரச பரம்பரையில் பிறந்து ராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும் மக்களின் துயரைப் பார்த்து இவர்களுக்காக போராட வேண்டும் என்று களத்திற்கு வந்தவர் அம்ரிட் கவுர். நிச்சயம் இன்றைக்கு இருக்கக்கூடிய பெண்களுக்கு எல்லாம் ஒரு ஊக்கம் தரக்கூடியவர் என்றே சொல்லலாம்.

பல்வேறு சாதனைகளை படைத்து இடைவிடாது போராடிய அம்ரிட் கவுர் 1964 ஆம் வரும் தன்னுடைய 75வது வயதில் காலமானார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

India's First Women Cabinet Minister

India's First Women Cabinet Minister