ஒரே நேரத்துல எவ்ளோ வேலையத்தான் பாக்குறது!

ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்பவர்களை செய்கிறவர்களை எல்லாம் திறமைசாலிகள் என்று பாராட்டுவர் ஆனால் இவர்கள் என்ன செய்றாங்கன்னு பாருங்க

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ஒவ்வொரு வேலையையும் பார்த்து நிதானமாக செய்வதற்கெல்லாம் நமக்கு நேரமில்லைல், அதோடு ஒரு விஷயத்தை கவனம் செலுத்தினால் இன்னொரு விஷயத்தை மறந்து விடுவோம். திரையில் காண்பிப்பது போல இங்கு எல்லாரும் இங்கே சூப்பர் பவர் கொண்டிருக்கவில்லையே என்ன செய்ய? அதற்காகத்தான் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் மல்டி டாஸ்கிங்

சாப்பிட்டுக் கொண்டே, படுத்துக் கொண்டே,பாட்டுக் கொண்டே என நாம் செய்வதும் ஓர் வகை மல்டி டாஸ்கிங் தான். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட வேலைகளைச் செய்வது மல்டி டாஸ்கிங் என்ப்படும். இங்கு இவர்கள் செய்கிற மல்டி டாஸ்கிங் எல்லாம் வேற லெவல்... பார்த்தா நீங்களே அசந்திடுவீங்க ஒரு பக்கம் எப்டியா இப்டி என்று அசந்தாலும் இன்னொரு பக்கம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிற சில முத்தான தருணங்கள் இங்கே...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இது குழந்தைகளின் லீவ் சீசன் என்பதால் இந்த டெக்னிக் உங்களுக்கும் மிகவும் பயன்படலாம். பள்ளிகளுக்குத் தான் கோடை விடுமுறை அலுவலகங்களுக்கு இல்லை என்பது குழந்தைகளுக்கு எப்படி சொன்னாலும் புரியவைக்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளாவது நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்து எழுந்தால்... விளையாட கூட்டிட்டு போங்க என் பிரண்டோட அப்பா டெய்லி கூட்டிட்டு போறாரு என்று துவக்கி வைப்பார்.... ஒரு நாள் தான குழந்தை ஆசைப்பட்டு கேக்குது என்று வீட்டுக்கார அம்மாவும் தூபம் போட அதற்கு மேலும் நம்மால் வீட்டில் நிம்மதியாக உட்கார்ந்திருக்க முடியுமா என்ன?

எழுந்து போய்த்தான் ஆகவேண்டும். வேறு ஆப்ஷனே அங்கு இல்லை. அது போன்ற நேரங்களில் இந்த டெக்னிக்கை நீங்கள் பின்பற்றலாம். நீங்கள் ரிலேக்ஸ் ஆனது போல இருக்கும் குழந்தையும் விளையாடியது போலவும் இருக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

#2

#2

பள்ளி முடிந்து குழந்தையை அழைத்து வரும் போது நடந்த அவலம் தான் இது. அவருக்கு ஸ்கூல்ல என்ன அவ்ளோ வேலையோ தெர்ல அதவிட இந்த அப்பாடக்கருக்கு அப்டி என்ன முக்கியமான போன் கால்னு தெர்லயே.... அதுலயும் சார் டிரைவிங்ல வேற...

ஏலேய் தம்பி பெட் ரூம்ல படுத்திருக்கிறதா நினச்சு குப்புற கவுந்து விழுந்திராதடா.

#3

#3

வீட்டில் நம்ம செட் யாராவது இருந்துவிட்டால் கொண்டாட்டத்திற்கு அளவேயிருக்காது... கொண்டாட்டம் மட்டுமல்ல நாள்முழுவதும் சண்டையும் கூத்துமாய் இருக்கும். வீடியோ கேம் விளையாடும் சமயத்தில் லேசாக கண்ணசைந்தால் கூட நம்மை தோற்கடித்து விடுவார்கள். கண்ணசைவது என்ன கவனத்தை சிதறவிட்டால் கூட ஆட்டம் க்ளோஸ்....

நாம் சீரியசாக எதாவது ஒரு விஷயத்தை செய்யும் போது அல்லது நமக்கு மிகப் பிடித்தமான வேலைகள் செய்யும் போது தான் சில தொல்லைகள் நம்மை டார்ச்சர் செய்திடும். லீவ் கேட்டு வீட்டில் உட்கார்ந்திருந்தாலும் சரி, வொர்க் ஃபர்ம் ஹோம் என உட்கார்ந்திருந்தாலும் சரி ஆபிஸ் கால் என்றால் அட்டெண்ட் செய்து தான் ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதியோ என்னவோ இவ்வளவு மெனக்கெட்டு போனை அட்டெண்ட் செய்கிறார்.... எல்லாம் சரி அந்தப்பக்கம் பேசுவது யாராக இருக்கும்???

#4

#4

அக்கானா சும்மாயில்லடா....... இரண்டு குழந்தைகள் பிறந்தால் சமாளிப்பது கடினம் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஆனால் இப்படியிருந்தால் ஈஸியா சமாளித்துவிடலாம் போலயே, இன்றைய குழந்தைகள் வீடியோ கேம்ஸுக்கு அடிமையாய் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் படம் மட்டுமே சாட்சியாய் போதும்.

தம்பி பாப்பாவுக்கு பால் கொடுக்கச் சொல்லி பிஸி மம்மி வேலை கொடுக்க அக்கா அதைவிட பிஸி ஆனால் அம்மா பேச்சை தட்ட முடியுமா அதனால் இந்த மல்டிடாஸ்கிங்! பிஸி மம்மி தான் இதை க்ளிக் செய்திருப்பார் போலும்...

#5

#5

என்னடா நடக்குது இங்க.... ஒரே நேரத்துல ரெண்டு வேலைன்னா கூட பராவயில்ல சாரு நாலு வேலையும் சேத்து ஒண்ணா செய்றாரே... இப்பவே இப்டின்னா இன்னும் கொஞ்சம் வளர்ந்துட்டா ஐயையோ இதே டாஸ்க்கா என்றெல்லாம் யோசிக்கக்கூடாது மக்கா... பாவம் குழந்தை தானே காற்றோட்டமாய் இருந்துவிட்டு போகட்டும்.

#6

#6

இரண்டு இன்ச் சிகரெட் மட்டுமில்லங்க இதுவும் உயிரைக் கொல்லும். பழங்காலத்துல இதைத் தான் புகைப்பிடிக்க பயன்படுத்தியிருக்காங்க இப்பவும் பயன்பாட்டுல இருக்குன்றது ஐயாவ பாத்து தான் தெரியுது. பழச மறக்காம இருக்க நீங்க அத இப்பயும் பயன்படுத்துறது சரி.... அத வீட்ல ஓரமா ஒக்காந்து ஊதுறது. வண்டியோட்டிக்கிட்டே தான் நடக்கும்னு சொன்னா உங்கள சீக்கிரம் மறக்க வேண்டி வரும் ஜாக்கிறதை

#7

#7

முயற்சி திருவிணையாக்கும் தான்.... அதுக்காக நேரங்காலம் எல்லாம் இல்லையா? ட்ரம்பட் ரொம்ப புடிக்கும்னா வீட்ல உக்காந்து வாசிக்கிறது. இல்லன்னா கார ஓரமா நிப்பாட்டி கொஞ்ச நேரம் வாசிக்கிறது. இது என்னயா வண்டியோட்டிக்கிட்டே வாசிக்கிற பழக்கம்!

இப்டி உக்காந்து வண்டியோட்டினா முன்னாடி போற வண்டி தான் தெரியுமா இல்ல பின்னடி வர்ற வண்டியோட ஹாரன் சத்தமாவது கேக்குமா?

#8

#8

எதுக்கும் போன கொஞ்சம் நேரா வச்சு பேசிப்பாருங்க நல்லா கேக்கும்.... அனேகமா இது லாரியாத்தான் இருக்கும். ஹைவேஸ்ல தான ஓட்றோம். யாரு வரப்போறான்னு காட்டுற அசால்ட்டு சில நேரங்கள்ல விபரீதமா முடிஞ்சிடுது.

சாரு ரெண்டு போன் நோண்டிக்கிட்டே எவ்ளோ ஸ்பீடா போறாருன்னு நீங்களே ஜூம் பண்ணி பாத்துக்கங்க

#9

#9

இவரு ஓட்டுற பஸ்ல போறவங்க எல்லாம் உசுற கையில பிடிச்சுட்டுதான் போகணும் போல... சொன்ன இடத்துக்கு கொண்டு சேக்குறாரோ இல்லையோ ஸ்ட்ரைட்டா சொர்கத்துக்கே கொண்டு போய் சேர்த்துவாரு போல... வண்டியோட்டிக்கிட்டே போன் பேசுறதே தப்பு இங்க என்ன எல்லாம் பண்றாருன்னு பாருங்க.

ஒரு கையில டீ கிளாஸ்,வாய்ல தம்மு, காதுல போனு இன்னொரு கையில ஓசி பிஸ்கெட் வேற வாங்கிட்டு இருக்காரு. எல்லாம் செஞ்சு முடிக்கட்டும்னு காத்திருந்தா சாரு தான் டிரைவர் சீட்ல வேற உக்காந்திருக்காரு... இவரு சாப்டுவாரா, குடிப்பாரா, சிகரெட் ஊதுவாரா வண்டிஓட்டுவாரா? ஆக மொத்தம் டிரைவர் சீட்ல உக்கார்ந்துட்டு வண்டி ஓட்டுற வேலையத்தவிர மத்த எல்லா வேலையையும் கச்சிதமா செய்றாரு.

 #10

#10

இந்த அடுத்து ஒருத்தர்.... அந்து மனுஷன் என்னடான்னா அவ்ளோ பெரிய பஸ்ஸையே அவ்ளோ அசால்ட்டா ஓட்றாரு... இது குட்டியூண்டு கார் தான... ஏண்டா சாப்பாடு எல்லாம் வீட்ல சாப்டு வரமாட்டீங்களா? எல்லாத்தையும் கார்ல அதுவும் வண்டி ஓட்டிக்கிட்டே தான் பண்ணனுமா? இவனுங்களுக்கு எல்லாம் வீடுன்னு ஒண்ணு இருக்கா இல்லையா?

சாப்டுறது மட்டும்தான் இங்கயா.... ஒரு கன்ஃபூசன் தான் போங்க

All Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion