Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா?
உங்க ராசிக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் இருக்கா?... எந்த ராசிக்காரர்கள் இதுல தீயா வேலை செய்வாங்க...
உறவுகள் நல்ல முறையில் வளர, வேண்டியது எது வேண்டாதது எது என்று பிரித்துப் பார்ப்பது மிகவும் கடினம்.
உறவுகள் நல்ல முறையில் வளர, வேண்டியது எது வேண்டாதது எது என்று பிரித்துப் பார்ப்பது மிகவும் கடினம். காதல் என்ற ஒரு உணர்வை அடுத்தக்கட்டம் எடுத்துச் செல்ல ஒருவர் நினைக்கும்போது, திடீரென்று இதுவரை உங்கள் துணையிடம் நீங்கள் பார்க்காத ஒரு முகம் உங்களுக்கு வெளிப்படும். இதனால் உங்களுக்கு குழப்பம் உண்டாகலாம்.

அந்த நேரத்தில் யாரிடமாவது உங்கள் குறையைக் கூறி அதற்கான வழியைத் தேடுவீர்கள். ஆனால் உங்கள் உறவைப் பற்றி நீங்கள் முற்றிலும் தெரிந்து கொள்வதற்கான எந்த ஒரு வழியும் தெரியாது. ஆனால் உங்கள் துணையின் கணிக்க முடியாத இயல்பை அறிந்து கொள்ள ராசிகள் துணை புரியும். உங்கள் துணையின் விருப்பு வெறுப்பு, பலம் பலவீனம் போன்றவற்றை அவரின் ராசியைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும். கீழே உங்கள் ராசிக்கான தகவலைப் படித்து அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
நெருப்புடா! என்று சொல்லக்கூடிய அளவு இருப்பவர்கள் மேஷ ராசிக்கார்கள். இந்த ராசியினர் தடாலடியாக இருப்பார்கள். மிகுந்த ஆற்றல் உள்ளவர்கள். எதையும் வழி நடத்தி செல்கிறவர்கள். பயணத்தைப் பெரிதும் விரும்புகிறவர்கள். சாகசங்களில் அதிக விருப்பம் உள்ளவர்கள். இவர்களுடைய ஆற்றலுடன் யாராலும் போட்டியிட முடியாது. உங்கள் துணை மேஷ ராசியாக இருந்தால், வாழ்க்கை சமாதானமாக செல்வதற்கு ஒரே வழி, நீங்கள் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி அவர்களுக்கு வழிவிடுவது தான். ஆனால் ஒரு உண்மையை அவசியம் சொல்ல வேண்டும், வாழ்க்கையில் உங்களுக்கு சுவாரஸ்யம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும்.

ரிஷபம்
ரிஷபம், மேஷத்திற்கு முற்றிலும் நேர்மாறானது. இந்த ராசியினர் பொதுவாக மிகவும் மெதுவாக எந்த ஒரு செயலையும் செய்வார்கள். ஆனால் உறவில் மிகவும் ஸ்திரமாக இருப்பார்கள். பூமியை போல் எந்த ஒரு உயர்வையும் தாழ்வையும் மிகுந்த பொறுமையுடன் கடந்து வருவார்கள். இவர்கள் எந்த ஒரு மாற்றத்தையும் எளிதாக ஏற்க முடியாமல் இருப்பது இவர்களின் மறுபக்கமாகும்.

மிதுனம்
இவர்களுக்கு இரண்டு முகம் உண்டு. இதனால், இவரிடம் நெருங்கி பழக பலரும் பயப்படுவார்கள். ஆனால் இவர்களின் குணநலனில் இரண்டு பக்கம் உண்டு, இதற்காக கவலைப் படத் தேவையில்லை. இவர்கள் பொதுவாக உறவை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். காற்று இவர்களை ஆட்சி செய்யும் குறியீடாகும். நீண்ட கால தொடர்பை ஏற்படுத்துவதில் இவர்களுக்கு ஒருவித வெட்கம் உண்டாகும். மிதுன ராசியினருக்கு மன தூண்டுதல் மிகவும் அவசியம். உங்கள் உறவை அடிக்கடி புதுப்பித்துக் கொள்வதால் இவர்களை உங்களால் கட்டுப்படுத்த முடியும்.

கடகம்
இவர்களின் ஆட்சி குறியீடு தண்ணீர். தண்ணீர் போல், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவர்களால் பொருந்திச் செல்ல முடியும். ஆகவே இவர்கள் நல்ல துணையாக இருப்பார்கள். இவர்களுடைய கவர்ச்சி மற்றும் படைப்பாற்றலால், இருட்டிலும் வெளிச்சத்தைத் தருவார்கள். ஆனால் ஒரு சிறிய காயம்கூட இவர்களை ஒரு ஓட்டுக்குள் அடைத்து விடும். மறுபடி அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது சுலபம் இல்லை.

சிம்மம்
விசுவாசத்தின் மறுபெயர் சிம்ம ராசி. இவர்களின் ஆட்சி கூறு. நெருப்பு. அன்பு செலுத்துவதில் இவர்கள் வள்ளல்கள். அன்பைப் பெறுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அவர்களின் விசுவாசமே அவர்கள் உறவில் முதுகெலும்பாய் அமைவது. இதனால் இவர்கள் உறவு பாறை போன்று ஸ்திரமாக இருக்கும். தவறான உறவுக்குள் அவர்கள் ஈடுபட்டாலும், இதே விசுவாசம் அவர்களின் வாழ்க்கையை வீணாக்கி விடும்.

கன்னி
ஒரு வேலையை கன்னி ராசியினரிடம் கொடுத்து விட்டால் போதும், நாம் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வெடுக்கலாம். இவர்களின் ஆட்சி குறியீடு பூமி. பூமி சுழன்று கொண்டே இருப்பது போல், இவர்களும் சுழன்று கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு நாளும், இவர்களின் உறவை புதுபிக்கும் அல்லது முன்னேற்றும் வழிகளை ஆராய்ந்து கொண்டே இருப்பது இவர்களின் இயல்பு.

துலாம்
கேண்டில் லைட் டின்னர் , விக்டோரியா ஸ்டைல் காதல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர் உங்கள் துணைவர் என்றால், அவர், துலாம் ராசியாகத் தான் இருப்பார். இவரின் ஆட்சி குறியீடு காற்று. எல்லா ராசியிலும் , அதிக சம நிலை வகிக்கும் ராசி, இந்த துலாம் ராசி. சந்தோசம், சமத்துவம், காதல் என்று எல்லாவற்றிலும் மிகச்சரியாக இருப்பதும் கூட, இவர்களுக்கு எதிராக சில வேளைகளில் திரும்பும்.

விருச்சிகம்
பேரின்பம் அடைவது, விருச்சிக ராசியினரின் இரண்டாவது இயல்பு. இதனால் இவர்களின் உறவில் தீப்பொறி பறக்கும். இவர்களின் ஆட்சிக் குறியீடு தண்ணீர். அவர்களை அதிகம் பாதுகாத்துக் கொள்ளும் தன்மைக் கொண்டவர்கள். மக்கள் இவர்களிடம் தங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு மிகவும் நல்லவர்கள்.

தனுசு
வாழ்க்கை ஒரு பந்தயம் என்றால், தனுசு ராசியினரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அந்த அளவிற்கு, ஆற்றல் மற்றும் த்ரில் நிறைந்தவர்கள். இவர்களின் ஆட்சிக் குறியீடு, நெருப்பு. இவர்கள் துணையால் இவர்களைப் பிடிக்கவே முடியாது. புதுமையை விரும்பும் இவர்களுக்கு ஒரே உறவில் பல காலம் வாழ்வது கடினமாக இருக்கலாம்..

மகரம்
உருவத்தைப் பார்த்து எடை போடக் கூடாது என்பது மகர ராசியினருக்கு பொருந்தும். அவர்கள் பார்க்க கடினமாக இருந்தாலும், உண்மையில் மிகவும் அக்கறை கொண்டவர்கள். இவர்களின் ஆட்சிக் குறியீடு பூமி, அதனால் பூமி போல் கடின தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கு காரணம், இவர்கள் எந்த ஒரு செயலையும் எளிதாக எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக எந்த ஒரு உறவையும் இவர்கள் வாழ்க்கை முழுவதும் உறவின் அர்த்தத்தை உணர்ந்து வாழ விரும்புவார்கள்.

கும்பம்
கும்ப ராசியினர் மிகவும் அறிவாளி மற்றும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அவர்கள் திருமண வாழ்க்கையை முடிந்த அளவிற்கு தவிர்க்கும் அளவிற்கு அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. இவர்களின் குறியீடு காற்று. இவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள். நீங்கள் கும்ப ராசியினருடன் வாழ்வில் ஒன்று சேர விரும்பினால், அவர்களுக்கு உங்கள் உறவால் அவர்களுக்கும் இந்த உலகத்திற்கு நிச்சயம் நன்மை இருக்கும் என்ற புரிதலையும் நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும்.

மீனம்
ஒரு கிண்ணத்தில் உள்ள தங்க மீனைப் பாருங்கள். மென்மையாக, எதையும் தாங்கும் வலிமை இல்லாத மற்றும் மயக்கக் கூடியதாக இருக்கும். இது எல்லாம் இணைந்த ஒரு ராசி தான் மீன ராசி. உறவைத் தாண்டி இருக்கும் இவர்களின் அன்பு. மனித குலத்தை தாண்டி நிற்கும் இவர்களின் பண்பு. இவர்களின் மென்மையான இந்த இயல்பு துணைவரை இவரிடம் அன்பு கொள்ளத் தூண்டும். இவர்களின் ஆட்சிக் குறியீடு நீர். உங்கள் வாழ்வில் அன்பும், அக்கறையும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் மீன ராசியினரை மணமுடிக்கலாம்.
ஒவ்வொரு ராசியினரின் அடிப்படை குணங்களைப் பற்றி இந்த தொகுப்பின் மூலம் அறிந்து கொண்டீர்களா? இந்த பதிவின் மூலம் உங்கள் உறவில் விரிசல் ஏற்படுவதை தடுக்க முடியும். உங்கள் துணைவருக்கும் இந்த ராசியின் அடிப்படியில் குண நலன்கள் அமைந்துள்ளதா என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











