For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சிவபெருமான் பிறந்தது எப்படின்னு தெரியுமா?... இதுவரை எங்குமே இந்த கதையை கேட்டிருக்க முடியாது...

  By Bharathika @sivakumar
  |

  சிவ பெருமான் அடி முடி காண முடியாதவர் என்றும் அவருக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும்.

  story of God Shiva born in tamil

  ஆனால் இந்த பூமியில் முதன் முதலில் அவர் எவ்வாறு தோன்றினார் என்ற கதையும் நாம் இதுவரை அறிந்ததில்லை. அது பற்றிய புராணக் கதையை, அந்த வரலாறை தெரிந்து கொள்வோம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சிவபெருமான் எப்பொழுது பிறந்தார்?

  சிவபெருமான் எப்பொழுது பிறந்தார்?

  இந்து மதம் உலகின் உயர்ந்த மதங்களில் ஒன்று. இந்து மதத்தில் தான் உலகின் மிக உயர்ந்த கருத்துக்கள் பலவும் ஆய்ந்து அலசப்படுகின்றன. இதில் தான் பண்டை கால வேதங்களான ரிக்வேதம், யசூர் வேதம், சாம மற்றும் அதர்வண வேதங்கள் என்ற நான்கு வகை சமஸ்கிருத வேதங்களும், தமிழ் வேதங்களான பன்னிரு திருமுறைகளும் அதில் அடக்கம்.

  சிவ புராணம்

  சிவ புராணம்

  திருமுறைகள் என்பது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அடியார்களும், இறைவனின் மனதிற்கு உகந்தவர்ககளின் மூலமாக இறைவனே நேரடியாக தந்த சில போதனைகளும் அடக்கம். அவ்வாறு அருளப்பட்டட புராணங்கள் பன்னிரெண்டு திருமுறைகளாகத் தொகுப்பட்டன. அதில் சிவபுராணம் என்பது எட்டாம் திருமுறையாகும். அதில் சிவபெருமானது பெருமை முழுவதுமாக கூறப்பட்டிருக்கிறது.

  மாணிக்கவாசகர்

  மாணிக்கவாசகர்

  Image Courtesy

  சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந்நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது.

  பிரம்மன்

  பிரம்மன்

  பல யுகங்களுக்கு முன் படைக்கும் கடவுளான பிரம்மனுக்கும், அவரது தந்தையான பார்கடல் அதிபன் பரந்தாமனுக்கும் ஒரு பெரும் பிரச்சனை உருவெடுத்தது. அது யாதெனில் இருவரில் பெரியவர், அதாவது பெருமை மிக்கவர் யார்? என்பதுவே அந்த போட்டி. தன்னைப் படைத்த தந்தை மகா விஷ்ணுவிடமே தனது தோள் வலிமையைக் காட்டிக் கொண்டிருந்தார். படைக்கும் கடவுள் நான்முகன். அப்பொழுது தேவலோகத்தில் ஒரு அதிசயம் தோன்றியது.

   ஜோதி வடிவம்

  ஜோதி வடிவம்

  கண்ணிமைக்கும் கண நேரத்தில் ஒரு சோதி வடிவம் அவர்கள் முன்னே தோன்றியது. ஆயிரமாயிரம் சூரியனின் ஒளி சுவாலையுடன் நெருப்பு வடிவமாக, ஆனால் குளிர்ச்சி பொருந்தியதாக அது விளங்கியது.

  அந்த லிங்க வடிவத்தைக் கண்டவுடன் காக்கும் கடவுளும் படைக்கும் கடவுளும் முடியைக் காண ஒருவரும், அடியைக் காண ஒருவரும் முடிவெடுத்து ஆதியும் அந்தமும் அற்ற அந்த சோதியைத் தொடந்தனர். தேடல் பல யுகங்கள் தொடரவே இறுதியில் அலைந்து களைத்த இருவரும் தம்மை விட பெரிய சக்தி இவரே என அறிந்து அவன் பாதம் பணிந்தனர்.

  அவரே சிவம்...

  அவரே சிவம்...

  இதுவே இறைவனின் முதல் லிங்க தரிசனமாக அறியப்படுகின்றது. சரி அப்படியானால் பிரம்மனும், விஷ்னுவுமாகிய அவர்கள், தங்கள் இருவரையும் விட சக்திமிக்க மூலவனை அறிந்திருக்கவில்லையா? அப்படி ஒருவர் இருப்பதே அவ்விருவருக்கும் தெரியாதா? இல்லை சிவம் என்ற சர்வசக்தி மிக்க இறைவன் அன்றுதான் பிறந்தாரா?

  “இல்லை” என்பதே

  “இல்லை” என்பதே

  சிவனே முதல்வன் அவனே தலைவன் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டவே ஏற்பட்ட விளையாட்டு இது. உலகம் என்பது இங்கு மண்ணையும் வெறும் மனிதரையும் குறிப்பதல்ல. தேவர், அசுரர். கந்தர்வர், முனிவர், கிரகங்கள் அசுடதிக்கு பாலகர்கள், யக்சர்கள், மனிதர்கள் என அனைவருக்கும் உணர்த்தவே இந்த திருவிளையாடல்.

  விஷ்ணு

  விஷ்ணு

  ஆதியும் அந்தமும் அற்ற அந்த பரம்பொருளின் பெயர் சிவன் என்று சைவர்கள் அழைக்கிறார்கள். அந்த ஆதிப்பரம்பொருளையே சங்கு சக்கரம் தாங்கிய விஷ்ணுவின் மூலமாகக் கண்டு அவரையே மகாவிஷ்ணு என்றும் அழைப்பர் வடகலை தென்கலை நாமம் தரித்த வைணவ சிரோண்மணிகள்.

  ஆதியும் அந்தமும் அற்ற, உயர்வும் தாழ்வும் அற்ற, இகமும் பரமும் அற்ற, இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்ட ஆதி பரம்பொருளே ஈசன் என்று அழைக்கபடுகின்ற பரப்பிரம்மம்.

  அர்த்தநாரீஸ்வரர்

  அர்த்தநாரீஸ்வரர்

  இவர் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல. எனில் இவர் அர்த்தநாரியா?( இரண்டும் கலந்த அலித்தன்மையானவரா) என்ற கேள்வி எழுகின்றதா?

  மனிதரில் தான் ஆணும் பெண்ணும் உண்டு. பூமிதனில் படைக்கப் பெற்ற மற்ற உயிரினத்திலும் ஆணும் பெண்ணும் உண்டு. இவையனைத்தும் இறைவனின் படைப்பு. இப்படி இருபிரிவுகள் உலகில் வாழும் உயிரினங்களுக்கு மட்டும் தான் தேவை.

  ஏனெனில் உலகின் சுழற்சி என்பது உயிர்கள் தோன்றுவதில் தான் உள்ளது. ஒவ்வொரு வகை உயிரினமும் தனது வம்சத்தை விருத்தி செய்ய இனப்பெருக்கம் செய்கின்றது. அவ்வாறு உயிரினம் உண்டாக ஆண், பெண் அமைப்புகள் உயிரினங்களில் வேண்டும். அவ்வாறு இனப்பெருக்க உறுப்புகளைத் தாங்கி நிற்க உயிரினங்கள் இருபாலாக படைக்கப்பட்டன.

  அந்த இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டே அந்தந்த உயிரினங்களின் வழித் தோன்றல்கள் சீராக உருவாகின்றன.

  இப்பொழுது பரம்பிரம்மத்திற்கு வருவோம். இனப்பெருக்கம் செய்யவே உயிரினங்கள் ஆண் பெண்ணாக படைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். இவை அனைத்திற்கும் மூலவரான இறைவன் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவருக்கு கருப்பையில் பிள்ளை சுமந்து வம்சம் வளர்க்க வேண்டியது இல்லை. எனவே அவர் ஆண் என்றோ பெண் என்றோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

  எனவே தான் அவர் எதற்கும் அப்பாற்பட்டவர் என்று கூறுகின்றோம்.

  துர்க்கை

  துர்க்கை

  பர பிரம்மத்தின் ஆண் உருவகமே ஆதிசங்கரன். இந்த ஆதிசங்கரனே பிரம்மனாகவும், விஷ்ணுவாகவும், அழித்தல் தொழில் செய்யும் கால பைரவனாகவும் அவதரித்திருக்கின்றார்.

  பர பிரம்மத்தின் பெண் உருவகமே ஆதிஷக்தி (சீதளாதேவி என்றும் அழைப்பர்). இவளே சரசுவதியாகவும், லெஷ்மியாகவும், துர்க்கையாகவும் அவதரித்திருக்கின்றார்.

  திருமூலனின் திருமந்திரம் தனது வழினெடுகிலும் உருகி சீராட்டுவது இந்த பரப்ரம்மத்தையே.

  பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்

  இறைவனடி சேரா தார்.

  என புரந்து மனிதன் தனது மறுபிறப்பை தவிர்க்க வெண்டுமாயின் இந்த பிறவிலேயெ இறைவனைப் பற்ற வேண்டும் என வள்ளுவம் குறிப்பது இந்த பரம்பொருளையே.

  அல்லாஹ்

  அல்லாஹ்

  இங்கு சிவம் என்று எவர் அழைக்கப்படுகிறாரோ, அந்த பரம்பொருளே இஸ்லாத்தில் "அல்லாஹ்" என்று விளிக்கப்படுகிறார்.

  அவரே வைஷ்ணவத்தில் விஷ்ணு என்றும், அந்த பரம்பொருளே கிருஸ்தவத்தில் "ஜெகோவா" என்று அழைக்கப்படுகிறார்(இயேசுனாதர் அல்ல, வாசகர்கள் குழம்ப வேண்டாம்).

  பற்பல நாடுகளும், பல மொழிகளும், மக்களும், காலமும் பரப்ரம்மத்திற்கு வழங்கியிருக்கும் பெயர்கள் வெவ்வேறு.

  "அவன் ஒருவனே".

  அவனே ஆதியும் அந்தமும் அற்ற, உயர்வும் தாழ்வும், இகமும் பரமும் அற்ற இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்ட ஆதிப்பரம்பொருள ஈசன் என்று அழைக்கப்படுகின்ற பரப்பிரம்மம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  How was God Shiva born?

  Lord Shiva holds a pivotal position in the Holy Trinity. While Lord Brahma plays the role of a Creator and Lord Vishnu plays the role of the Preserver.
  Story first published: Saturday, July 21, 2018, 12:40 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more