உங்கள் ஆவியோடு தொடர்புடைய விலங்கு எதுன்னு தெரியுமா?... எப்படி கண்டுபிடிக்கலாம்?...

Posted By: Saravanan Kirubananthan
Subscribe to Boldsky

சில ஆன்மீக கலாச்சாரத்தில், ஆவி விலங்கு என்பது மனிதனை பாதுக்காத்து வழிநடத்திச் செல்ல உதவும் ஒரு ஆவியைக் குறிக்கிறது. இது ஒரு உருவமாக மனிதர்கள் அவற்றின் மீது ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்ளும்விதமாக அமையப்பெற்றிருக்கும்.

spritual

ஒவ்வொருவரும் தங்களுக்குரிய ஆவி விலங்கை கண்டடைந்துவிட்டாலே போதும். அதன்மீது நமக்கு ஒரு ஈடுபாடு உண்டாகும். அந்த ஆவி விலங்கு நம்மை வழிநடத்திச் செல்லும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆவிவிலங்கு கண்டுபிடிப்பது எப்படி.

ஆவிவிலங்கு கண்டுபிடிப்பது எப்படி.

ஒவ்வொருவருக்கும் ஒரு ஆவி விலங்கு உண்டு. அதனுடன் ஒரு அர்த்தமுள்ள தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள சில வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பகல் நேரக் கனவுகள், தியானம், இயற்கையைக் கூர்ந்து கவனிப்பது, போன்ற பல வழிகளில் உங்கள் ஆவி விலங்கை பற்றி அறிந்து கொள்ளலாம். பல்வேறு ஆவி விலங்குகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதின் மூலம் வாழ்க்கையின் பல பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிகளைக் காண முடியும்.

உங்கள் ஆவி விலங்கு உங்களை தேர்ந்தெடுக்கும்

உங்கள் ஆவி விலங்கு உங்களை தேர்ந்தெடுக்கும்

உங்களுடன் இணைக்கப்படிருக்கும் ஆவி விலங்கு எது என்பதை கண்டறிய பல வழிகள் உண்டு. இதற்கான தேடலை தொடங்குவதற்கு முன் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் ஆவி விலங்கை தேர்வு செய்ய முடியாது. அதுவே உங்களை தேர்ந்தெடுக்கும்.

தியானம், பகல் கனவுகள், இரவு நேர கனவுகள், வேறு மன நிலைகள் போன்ற வழக்கமான மனநிலயில் இருந்து நீங்கள் வெளியேறும்போது, ஆவி விலங்குகள் அதிகமாக இருக்கும். ஒரு குறுகிய கால இடைவெளியில் அசாதாரண நடத்தை அல்லது பல சந்திப்புகள் காரணமாக நீங்கள் அவற்றைக் கவனிக்கலாம்.

ஆவி விலங்கை காண்பதற்கான வழிகள்

ஆவி விலங்கை காண்பதற்கான வழிகள்

உங்கள் ஆவி விலங்கை கண்டுபிடிப்பது வேறுபட்ட அணுகுமுறைகளை மேற்கொள்ள உங்களை வழிநடத்தும். இதனை தொடங்குவதற்கு மிகவும் பொதுவான வழிகளில் சில:

இயற்கையை உற்று நோக்குங்கள். விலங்குகள் மற்றும் அவற்றின் நடத்தைகளின் மீது அதிக கவனத்தை செலுத்துங்கள். ஒரு விலங்கு உங்கள் வாழ்க்கையில் கவனிக்கத்தக்க விதத்தில் இருக்கும்போது , அது அசாதாரணமான நடத்தை கொண்டிருக்கும்போது கவனமாக இருங்கள்; உங்கள் கவனத்தை அடைய முயற்சிக்கும் ஒரு ஆவி விலங்கு அதுவாகக்கூட இருக்கலாம்.

விலங்குகளின் குறியீடு

விலங்குகளின் குறியீடு

குறிப்பிட்ட விலங்கை நேரடியாக அடிக்கடி சந்திப்பது அல்லது அவற்றின் குறியீட்டை (ஒரு பொருள் அல்லது படத்தின் மூலமாக) அடிக்கடி பார்ப்பது போன்ற செயல்கள் நடைபெறுகிறதா என்று கண்காணியுங்கள். விலங்குகளை பற்றி படிக்கும்போது குறிப்பிட்ட விலங்கினை பற்றிய சிந்தனை அதிகமாக வருகிறதா என்பதை கவனியுங்கள்.

கனவு வழி கண்டுபிடித்தல்

கனவு வழி கண்டுபிடித்தல்

பொதுவாக ஆவி விலங்கு அல்லது நீங்கள் இதற்கு முன்பே பார்த்த விலங்கை கண்டுபிடிப்பதற்கான ஒரு பொதுவான எண்ணத்துடன் தியானம் செய்யுங்கள்.

விலங்குகள் குறித்து வரும் கனவுகளின் மீது அதிக கவனம் கொள்ளுங்கள்.

பயணிப்பதற்கான செயல்முறைகளை அறிந்திடுங்கள்.

உங்கள் ஆவி விலங்கை கனவில் காண்பது. கனவில் விலங்குகள் தோன்றுவது பொதுவாக ஒரு வழிகாட்டுதலின் வெளிப்பாடு ஆகும். உங்களை ஏற்கனவே வழிநடத்திய ஆவி விலங்கு உங்கள் கனவில் வரும்பட்சத்தில் அந்த கனவு சொல்ல வரும் செய்தியை அதிக கவனமாக பதிவு செய்யுங்கள்.

தியானம் மூலம் கண்டுபிடித்தல்

தியானம் மூலம் கண்டுபிடித்தல்

தியானத்தின் மூலமாக உங்கள் ஆவி விலங்கை கண்டுபிடிப்பது எப்படி :

உங்கள் ஆவி விலங்குடன் உங்களை இணைக்க தியானம் பெரிதும் உதவுகிறது. தளர்வான முறையில் ஆழ்மனதிற்குள் பயணிப்பதை நாம் தியானம் என்று கூறுகிறோம். இந்த பயணத்தின் மூலமாக ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட விலங்குகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை குறிக்கோளாக கொள்ளுங்கள்.

தியானத்தின் மூலமாக நீங்கள் மாறுபட்ட மனநிலைக்கு தள்ளப்படுவீர்கள், அங்கு நீங்கள் விலங்கு ஆற்றல்களின் சக்தி மற்றும் உள்ளுணர்வு ஞானத்திற்கு அதிக வரவேற்பைப் பெறுவீர்கள்.

ஆவி விலங்கை கண்டுபிடித்தபின் என்ன செய்ய வேண்டும்?

ஆவி விலங்கை கண்டுபிடித்தபின் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் ஆவி விலங்கு என்ன என்று தெரிந்துவுடன் நீங்கள் செய்ய வேண்டியவற்றை பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆவி விலங்கை பற்றி அதிகம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். நேரடியாக அந்த விலங்கை காணும் போது, அதனை உற்று நோக்குங்கள். புத்தகங்கள் அல்லது மற்ற ஊடகங்கள் வாயிலாக அந்த விலங்கை பற்றி அதிகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள், அவற்றை உணர்ந்து கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உற்றுநோக்குங்கள்

உற்றுநோக்குங்கள்

அந்த விலங்கின் குண நலன்கள் மற்றும் பண்புகளை பட்டியலிடுங்கள் . இந்த கேள்விகளுக்கு உடனடியாக விடை அளியுங்கள். இந்த விலங்குடன் உங்கள் தொடர்பு மேலும் அதிகரிக்கிறதா என்று பாருங்கள்.

அதன் விலங்கின் பண்புகள் உங்களோடு எந்த விதத்தில் தொடர்பு கொள்கிறது ?

அந்த விலங்கு உங்கள் வாழ்கையின் அனுபவத்தில் எப்படி இணைக்கப்படுகிறது ?

அந்த விலங்கின் ஒலி , உங்களிடம் தற்போது கூறுவது என்ன ?

ஆவி விலங்கு கேள்வித்தாள் :

ஆவி விலங்கு கேள்வித்தாள் :

உங்கள் ஆவி விலங்கை கண்டுபிடிப்பதற்கான வழிகள் மற்றும் உங்களுக்கு அவற்றுடன் இருக்கும் இணைப்பு, மற்றும் அவை சொல்ல வரும் செய்தி பற்றிய விளக்கம். போன்றவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பின்வரும் கேள்விகள் எல்லா விலங்கிற்கும் பொருந்தும்.

கேள்வி 1

கேள்வி 1

விலங்கை பற்றியும் அந்த விலங்கு இருக்கும் போது உங்கள் உணர்வை பற்றியும் குறிப்பிடுங்கள்.

உங்கள் ஆவி விலங்கை காணும்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கும். உங்கள் உணர்ச்சியின் வேர் வரை சென்று யோசியுங்கள். பயம் வந்ததா ? பயத்தை உணர்ந்தீர்களா ? ஆவி விலங்கை கண்டதும் மகிழ்ச்சி அடைந்தீர்களா ?

கேள்வி 2

கேள்வி 2

உங்கள் ஆவி விலங்கிற்கும் உங்கள் வாழ்க்கையின் எதாவது ஒரு நிகழ்விற்கும் தொடர்பு உள்ளதா? ஆவி விலங்கை காணும்போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்விற்கும், உங்கள் வாழ்க்கையில் வேறு எதாவது ஒன்றை காணும்போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்விற்கும் எதாவது தொடர்பு உள்ளதா? உங்களுக்கு ஏதேனும் புது உணர்ச்சிகள் அல்லது தொடர்பு ஏற்பட்டு இன்று வரை அது பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறதா என்று யோசியுங்கள் . ஆவி விலங்கு, உங்கள் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட ,மனிதர்கள், அல்லது நீங்கள் கடந்து வந்த நிகழ்வுகள் அல்லது தற்போதைய நிகழ்வுகள் போன்றவற்றின் உணர்வை குறிக்கலாம்.

கேள்வி 3

கேள்வி 3

ஆவி விலங்குடன் உங்களின் எந்த குணநலன்களை இணைக்க முடிகிறது ?

நீங்கள் பொதுவாக உங்கள் ஆவி விலங்குக்குரிய பண்புகள் அல்லது குணங்கள் அல்லது கற்பனை குணங்கள் அல்லது அடையாளங்களைப் பாருங்கள். இதுவே உங்கள் ஆவி விலங்குடனான தொடர்பை வலுபடுத்தக் கூடிய மற்றும் அர்த்தம் உருவாக்கக்கூடிய நல்ல தொடக்க புள்ளியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: ஆன்மிகம்
English summary

How To Find Your Spirit Animal

Spirit animals are another form of spiritual guides, similar to a guardian angel. Spiritual guides present themselves to us however we are willing to see them, and it is natural for many people to connect with their guides through the face of an animal