Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிய பூஜை உங்களை சனிபகவானின் கோபத்திலிருந்து காப்பாற்றும்
ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் முக்கியமான கிரகம் ஆவார். இவர் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை பொறுத்தே ஒருவரின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் அமையும்.
ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் முக்கியமான கிரகம் ஆவார். இவர் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை பொறுத்தே ஒருவரின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் அமையும். இவர் சரியான இடத்தில் இருந்தால் அவர்களின் வளர்ச்சியை யாராலும், எதனாலும் தடுக்க இயலாது. அதேபோல தவறான இடத்தில் இருந்தால் அவர்கள் படும் பாட்டை நங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை.

கோபக்கார கடவுளான சனிபகவானை முறையாக வழிபடுவது அவரின் கோபத்திலிருந்து உங்களை சிறிது காப்பாற்றும். அதற்கான பூஜையை உங்கள் வீட்டிலிருந்தே செய்ய வேண்டியது அவசியம். இது அவரின் கோபத்தை குறைப்பதோடு உங்கள் இல்லத்தின்மீது அவரின் கருணை பார்வையை கொண்டுவர உதவும். இந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பிரிவில் பார்க்கலாம்.

சனி பூஜை
சனிபகவானை மகிழ்விக்கக்கூடிய இந்த பூஜை சனிக்கிழமைகளில் மட்டுமே வீட்டில் செய்ய வேண்டும். மற்ற நாட்களில் செய்வது அவரின் கோபத்தை தூண்டக்கூடிய ஒன்றாகும்.இந்த பூஜையை செய்யும்போது மனதில் சிவபெருமானையும், சனிபகவானையும் மனதில் நிறுத்த வேண்டியது அவசியம். அவ்வாறு வழிபடும்போது உங்கள் பாவங்களால் உங்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகள் குறையும்.

செய்யவேண்டியது
சனிக்கிழமையன்று இந்த பூஜையை செய்யும்போது காலை முதல் மாலை வரை விரதமிருப்பது நல்லது. காலை சீக்கிரமாகவே எழுந்து தலைக்கு எள் எண்ணெய் தேய்த்து குளிக்கவும். குளித்து முடித்த பிறகு அன்று கருப்பு நிற உடை அணியவும். என்று நாள் முழுவதும் விளக்கேற்ற எள் எண்ணெயை மட்டும் பயன்படுத்தவும்.

வழிபட வேண்டிய கடவுள்கள்
விநாயகரின் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், சனிபகவானின் சிலையையோ அல்லது படத்தையோ எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை சனிபாகவனின் படம் கிடைக்காவிட்டால் உங்கள் வழக்கமான பூஜையறையிலேயே அமர்ந்து மனதில் சனிபகவானை நிறுத்தி பூஜை செய்யுங்கள். வாயுபுத்திரன் அனுமனை வழிபடுவது உங்களுக்கு கூடுதல் பலனை அளிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. எனவே அனுமனின் படத்தையும் வைத்து வழிபடுங்கள். முன்பே கூறியது போல சிவபெருமானை வழிபடவேண்டியதும் அவசியம். ஏனெனில் சனிபகவான் சிவபெருமானின் தீவிர பக்தர் ஆவார்.

பூஜை வழிமுறை
பூஜையை முழுமுதற் கடவுளான விநாயகருக்கு விளக்கேற்றுவதன் மூலம் தொடங்குங்கள். சனிபகவானுக்கு கருப்பு எள்ளை வைத்து வழிபடுங்கள். சிவபெருமானுக்கும், அனுமனுக்கும் பூக்களை வைத்து வழிபடுங்கள். அதோடு நீங்கள் பூஜைக்காக தயாரித்த உணவை வைத்தும் வழிபடுங்கள். பின்னர் கற்பூரம் காட்டி பூஜையை முடித்துக்கொள்ளுங்கள். மாலை நேரத்தில் விரதத்தை முடிக்கும்முன் மீண்டும் இந்த பூஜையை ஒருமுறை செய்யவேண்டியது அவசியம். விரதத்தை முடிக்க சாதத்துடன் எள் அல்லது உளுந்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். சனிக்கிழமையன்று நிச்சயமாக அசைவ உணவு உண்ணக்கூடாது.

சனி காயத்ரி மந்திரம்
பூஜையின் போதும் அதற்கு பிறகும் மனதில் சனிபகவானை வேண்டி இந்த மந்திரத்தை கூறுவது நல்ல பலனை வழங்கும்.
" ஓம் சனாய்ச்சாரிய வித்மகே சூர்யபுத்ராயா தீமஹி
தன்னோ மந்தே ப்ரச்சோதயாத்தே "
பொருள்: சூரியபகவானின் மகனான சனிபகவானே உன்னை நான் வணங்குகிறேன். என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக.

கூடுதல் பலனிற்கு செய்யவேண்டியவை
பொதுவாக சனிபகவானை கோபக்கார கடவுளாகவே அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். நாம் வாழ்க்கையில் செய்த பாவங்களுக்கான தண்டனையை வழங்க வேண்டிய சிவபெருமான் வழங்கிய வேலையை மட்டுமே சனிபகவான் செய்கிறார். நமது முன்ஜென்மத்தின் பாவங்களுக்கான தண்டனையை மட்டுமே சனிபகவான் வழங்குகிறார். அவரின் அருளைப்பெற மேலேசொன்ன பூஜை மட்டுமின்றி பசுவிற்கு உளுந்து, எள் கொடுப்பது, வறியோர்க்கு உணவு அல்லது உடை கொடுப்பது போன்றவற்றையும் செய்யலாம். இந்த தானங்களை பூஜை செய்யும் சனிக்கிழமையன்று செய்யுங்கள். அதுமட்டுமின்றி நமது வாழ்க்கை முறையும் சனிபகவானின் அருளை பெற்றுத்தரும்.

ஒழுக்கம்
சனிபகவான் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கும் அடிப்படை பண்பு ஒழுக்கம்தான். நமது தினசரி வாழ்வில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். தினமும் குளிப்பது, இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, தனிமனித ஒழுக்கம் என அனைத்தும் இருந்தால்தான் சனிபகவான் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை வழங்குவார். இல்லையெனில் தண்டனைதான்.

வாய்மை
எப்பொழுதும் உண்மையை மட்டும் பேசுவது சனிபகவானின் நன்மதிப்பை பெற்றுத்தரக்கூடியது. கருணையும், வாய்மையும் அரிதான குணமாகிவிட்ட இந்த காலத்தில் நீங்கள் உண்மையை மட்டும் பேசுவது கடினம்தான். ஆனால் அதனால் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் அற்புதமானவை. இது உங்கள் வாழ்வில் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும்.

உண்மையை எதிர்கொள்ளுதல்
நீங்கள் செல்வந்தராக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி அதற்கு உண்மையான காரணம் யார் என்று சனிபகவான் உங்களுக்கு உணர்த்துவார். அந்த எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அதற்கேற்றாற் போல திட்டமிட்டு வாழ வேண்டும். ஒருபோதும் மற்றவர்கள் மீது பழியை சுமத்தவோ அல்லது அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்கவோ முயலாதீர்கள். எதார்த்தத்தை எதிர்கொள்ள எப்பொழுதும் தயாராக இருங்கள்.



Click it and Unblock the Notifications