Latest Updates
-
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது! -
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க.. -
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க -
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
எந்த காய்கறியும் தேவைப்படாத இந்த பாயாவை ஒருதடவை செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்ட்டகாசமா இருக்கும் -
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
பற்கள் விழுந்தது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம் - வாழ்க்கை எப்படி மாறும்?
பற்கள் விழுவதை போன்ற கனவுகள் நிகழ்ந்தால் அது நமக்கு பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டுகிறது. அதைப் பற்றி இங்கே விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
உங்கள் பற்கள் விழுவது மாதிரி கனவு கண்டால் என்ன நடக்கும்? வாங்க தெரிஞ்சுக்கலாம். நாம் தூக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவுகளும் நம்மிடம் எதாவது ஒன்றை சொல்லிச் செல்கின்றன. ஏன் சில சமயங்களில் நாம் கண்ட கனவுகள் கூட உண்மையாகுவதும் உண்டு. அப்படி இல்லையென்றால் அதற்குள் எதாவது அர்த்தம் ஒளிந்திருப்பதும் உண்டு.

நமக்கு வரும் கனவுகளை பற்றிய ஆராய்ச்சிப்படி பார்த்தால் பற்கள் விழுவதை போன்ற கனவுகள் நிகழ்ந்தால் அது நமக்கு பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனவின் அர்த்தம்
உங்களையே அறியாமல் உங்கள் பற்கள் விழுவதை போன்ற கனவு கண்டால் அதற்கு காரணம் வாழ்க்கையில் தோல்வி, வேலை இழப்பு, குடும்ப அழுத்தம் போன்ற சூழ்நிலைகளால் இந்த மாதிரியான கனவுகள் ஏற்படும். உங்கள் சூழ்நிலைகளின் கட்டுப்பாட்டை இழந்தது போன்ற ஒர் உணர்வு ஏற்படும்.

இழப்பதை போன்ற மனது
பணம் அல்லது குழந்தையை இழப்பது போன்ற உணர்வு இருந்தால் அப்பொழுது பற்கள் விழுகின்ற மாதிரி கனவு எழும். உள்ளே எழும் பயம் இந்த மாதிரியான கனவுகளுக்கு காரணமாக அமைகிறது.

வயதான தோற்றம்
நீங்கள் வயதாகுவதை நினைத்து மன அழுத்தம் கொண்டு இருந்தால் அப்பொழுது இந்த மாதிரியான கனவு நிகழும். வயது, உடல்நலம் மற்றும் வேறு சூழ்நிலைகளில் சரிவு ஏற்படும் போது இப்படி நிகழும். இதனால் உங்கள் சுய உணர்வை இழப்பீர்கள்.

குடும்ப உறுப்பினரின் உடல்நலம்
நீங்கள் அடிக்கடி உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்தை பற்றிய கவலை கொண்டு இருந்தால் உங்களுக்கு பற்கள் விழுவதை போன்ற கனவு எழும்.

பணப் பிரச்சினை
உங்களுக்கு சேமிப்பு இல்லாமல் பணத் தட்டுப்பாடு இருந்தால் பற்கள் விழுவது போன்ற கனவு எழுமாம். அதனால் உங்களுக்குப் பணப் பிரச்சினைகள் இருக்கும்போது இதுபோன்ற கனவுகள் வருவதுண்டு.

மன அழுத்தம்
இந்த மாதிரியான தகவல்கள் உண்மை என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் ஆழ்ந்த உறக்கத்தில் சுய நினைவை இழந்து இருக்கும் போது நம்முடைய ஆழ்மனதில் உள்ள எண்ணங்கள் இந்த மாதிரியான கனவு விளைவை ஏற்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications
