Latest Updates
-
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
தவறான நேரத்தில் சரியாக க்ளிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் போட்டோஸ்!
தவறான நேரத்தில் சரியாக க்ளிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் போட்டோஸ்!
நாம சாதாரணமா ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு செல்ஃபீ எடுக்கும் போதே... பத்து பேருல... ரெண்டு மூணு பேர் முகம் முகத்த கோணலாவும், வாய மூடி, கத்துற மாதிரி.. தூங்குற மாதிரியான முக பாவனை க்ளிக் ஆயிடும். இது சாதாரணம்.
இதுக்கே இப்படின்னா... மல்யுத்தம், டென்னிஸ், புட்பால், கிரிக்கெட், பேஸ்பால்ன்னு அடுத்த நொடி என்ன நடக்கும்ன்னு தெரியாம அசுரத்தனமா விளையாடிட்டு இருக்கவங்கள படம் பிடிக்கும் போது எசக பிசக... எப்படி எல்லாம் படம் க்ளிக் ஆயிருக்கும்.
நாம் பேப்பர்ல, வெப்சைட்ல பாக்குற போட்டோ எல்லாம் போட்டோகிராபர் எடுத்த நூற்றுக்கணக்கான படத்துல இருந்து செலக்ட்டான ஏதோ ஒன்னு ரெண்டு தான். மீதி ரிஜக்டான போட்டோஸ்ல இப்ப நாம பாக்கப்போற மாதிரியான போட்டோஸ் எக்கச்சக்கமா இருக்கும்.
சரி வாங்க... தவறான நேரத்தில் சரியாக க்ளிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் போட்டோஸ் கொஞ்சம் பார்க்கலாம்...

#1
அம்மா சத்தியமா... அவிங்க விளையாடுறதுக்கு பேரு மல்யுத்தம் தான். ஆனா, நம்ம போட்டோகிராபர் பயலுவ தான் ஏதோ, ரெண்டு பெரும் குஜால்ட்டியான பாட்டுக்கு ரொமான்ஸ் பண்ற மாதிரியான கோணத்துல எடுத்து வெச்சிருக்காயிங்க.

#2
ஃபுட்பால் ஆடும் போது.. அதுலயும் இந்த பெனால்டி ஷாட் அடிக்கும் போதுஎல்லாரும் கைய அங்குட்டு வெச்சுக்கிறது பாதுகாப்பானது தான். ஆனால், உன் சேஃப்டி மட்டும் போதுமா தம்பி, அந்த பய டவுசர புடிச்சு இப்படி இழுக்க.. படாத இடத்துல பட்டுருந்தா என்னத்துக்கு ஆவுறது...
Image Source: chilloutpoint

#3
மல்யுத்தம்ன்னு வந்துட்டா எங்க வேணாலும், எப்படி வேணாலும் தாக்கலாம். ஆனால், இப்படியெல்லாம் பண்றது ரொம்பவே தப்பு சகோதரி. புரட்டி, புரட்டி அடிக்கிறது கூட தாங்கிக்கலாம். இப்படி டிச்சு பண்றது எல்லாம் எப்படி தாங்கிக்க முடியும். அதுவும், பொம்பள புள்ளையா இருந்துட்டு இப்படி எல்லாம் நடந்துக்கலமா நீ?
Image Source: chilloutpoint

#4
நம்ம சிவப்பு சட்டையோட மைன்ட் வாய்ஸ்: அடேய்! சொட்டத்தலையா... பந்த அடிடான்னா... என் டவுசர புடிச்சு ஏண்டா இழுக்குற...
ஏம்பா... மேலாப்புல புடிச்சு இழுததுனால பரவாயில்ல... கொஞ்சம் ரணமா புடிச்சு இழுத்துருந்தா... என்னத்துக்கு ஆவுறது...
Image Source: ebaumsworld

#5
இதென்னடா ரொனால்டினோவுக்கு வந்த சோதனை... நம்மாளு இப்படி எல்லாம் பண்ணமாட்டாபுலயே... என்ன தான் பெரிய மனுஷனா இருந்தாலும்.. இப்படி ரெண்டு பேர பிடிச்சு இழுக்கிறது தவறு... ஃபவுல் கொடுத்து அனுப்பிச்சிடுவாங்க...
Image Source: picturescollection

#6
ரொம்ப பாவம்யா அந்த ஆளு! எத்தனை நாள் கோவமா வெறியா இருந்தாலும்... எருமைக்கிட்ட இப்படி எல்லாம் முட்டி மோதி காயப்படுறது ரொம்ப கஷ்டம்..
சிலருக்கு காலை கடன் வரது கஷ்டம்... இவருக்கு காலை கடன் போறதே சிலபல மாதங்களுக்கு கஷ்டமா இருந்திருக்கும்....
Image Source: askideas

#7
அடேய்.. நீல நிற சொக்கா... பால் அடிச்சு விளையாடுறதுக்கு பேரு தான் ஃபுட்பால்... உனக்கு யாரோ தப்பு, தப்பா சொல்லிக் கொடுத்திருக்காங்க... போய் பால அடிடா... என்ன விட்டுத்தொல... அட! சொன்ன கேட்குறானா இவன்...! ஒரு ஜென்டில்மேன் பண்ற காரியமா இது...
Image Source: gooddaynow

#8
நோ! நோ!! நோ!!!! முதல் போட்டோல பார்த்தது போல நீங்க இத தவறா நெனைச்சிட கூடாது. அவங்க ரெண்டு பேரும் சீரியஸா போட்டிய ஜெயிக்க மல்யுத்தம் தான் விளையாடிட்டு இருக்காங்க. மறுக்கா, மறுக்கா... அந்த போட்டோகிராபர் பயலுவ தான் தப்பு, தப்பான கோணத்துல எடுத்து வெவ்சிருக்காங்க!
Image Source: glyticia-empire

#9
ஓ மை கடவுளே... இந்த நுனி மூக்குல அடிப்படுறது... கால் சுண்டு விரல்ல முட்டிக்கிறது...கால் முட்டிக்கு கீழ நடு கால்ல இடிச்சிக்கிறது எல்லாம் மிக கொடுமையான வலிய கொடுக்கும். கண்டிப்பா.. நம்ம அண்ணாச்சிக்கு பொலபொலன்னு இரத்தம் கொட்டியிருக்கனுமே....!
Image Source: chilloutpoint

#10
இந்த ஃபுட்பால் ஆடுற பசங்க தான் இப்படி தப்பு, தப்பா கைய, அங்கிட்டு, இங்கிட்டு வெச்சிட்டு எதாச்சும் குறும்பு தனம் பண்ணிக்கிட்டே இருக்காங்க. ஒருத்தன் கோல் அடிச்சா... கட்டிப்பிடிச்சு பாராட்டு, கை குலுக்கு... முத்தம் கூட குடுப்பா... தப்பில்ல... ஆனா... இது ரொம்ப தப்புலே!
Image Source: hahahumor

#11
அடப்பாவி பயலே... உனக்கு பந்து பிடிக்க வேற வழியே இல்லையா... இப்படியா ஓடிவரும் போது என் குறுக்க வந்து நிப்ப... மேட்ச் முடிஞ்சதும் வாய பெனாயில் ஊத்தி தான் கழுவனும்.
Image Source: milenerd



Click it and Unblock the Notifications