For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் கடைந்தெடுத்த சோம்பேறிகள் இவர்களாக தான் இருக்க முடியும்...!

|

சோம்பேறிகளில் பலவகையுண்டு... யார் கூறினாலும் வேலை செய்ய மறுப்பவர்கள், தங்களுக்கு பிடிக்காதவர்கள் கூறும் வேலையை மட்டும் தவிர்ப்பவர்கள் அல்லது தங்களுக்கு பிடிக்காத வேலைகளை செய்ய மறுத்து வெளிநடப்பு செய்பவர்கள்.

ஆனால், இவை எல்லாவற்றுக்கும் மேல், வேற லெவல் சோம்பேறி வகை ஒன்றிருக்கிறது.. அதுதான்... கடைந்தெடுத்த சோம்பேறி... மற்றவர்களுக்கு தேவையான வேலைகளை மட்டுமல்ல, இவர்கள் தங்களுக்கு தேவையான வேலையை கூட வேறு யாராவது செய்துக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று கருதுவோர்.

இதோ! இந்த கேலிப் புகைப்படத் தொகுப்பில் நாம் காணவிருப்பது அப்படியான கடைந்தெடுத்த சோம்பேறிகளின் சில செயல்களை குறித்து தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அமெரிக்கா, ஐரோப்பியா, போன்ற நாடுகளில் குளிர் காலத்தில் அதிக பனிப்பொழிவு காணப்படும். இதனால், சாலை, வீடு, வாகனங்கள் என அனைத்தும் ஐஸால் மூடப்பட்டிருக்கும். அப்படியாக தான் இந்த நபரின் காரும் ஐஸால் மூடப்பட்டிருந்தது.

பெரும்பாலும் கார் உரிமையாளர்களுக்கு அதன் மீது சின்ன தூசு பட்டாலே மனது தாங்காது. ஆனால், இவரோ... கார் வைப்பர் இயங்கும் அளவுக்கு மட்டும் கண்ணாடியை சரி செய்துக் கொண்டு அசால்ட்டாக கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

© Unknown/ Imgur

#2

#2

நிச்சயமா இவரு ஒரு பேச்சுலர் சிங்கிள் சிங்கமாக தான் இருக்கணும். இல்லாங்காட்டி வீட்டுல அம்மா கண்டது பிய்ய, பிய்ய அடிச்சிருப்பாங்க. சின்ன வயசுல கண்டமேனிக்கு பில்டிங் பிளாக்ஸ் விளையாடி தள்ளியிருப்பாரு போல. மனுஷன் குப்படிய மலை மாதிரி கொட்டி வெச்சிருக்காப்புல.

© wilsond705 / Imgur

#3

#3

அருமை! இந்த நூற்றாண்டுக்கான பெஸ்ட் சோம்பேறி அவார்டுக்கு தகுந்த ஒரே ஒரு உன்னத போட்டியாளர் இவரா தான் இருக்க முடியும். அது எப்படிய்யா அந்த இடத்துல உட்கார்ந்து.. மன்னிக்கனும் படுத்துக்கிட்டு சாப்பட தோணுது.. வெயிட்டீஸ்.. முதல்ல இது அவனா, அவளான்னு வேற தெரியல... சரி! என்னவோ.. அதுவா இருந்தால்லும் இது உச்சக்கட்ட சோம்பேறித்தனம். பாத்ரூம்லையே குடியிருப்பாங்க போலயே! நாம எல்லாம் குளிக்கிறதுக்கு கூட அந்தப்பக்கமா ஒதுங்குறது இல்ல! ஹ்ம்ம்ம்!

© essayshark / Imgur

#4

#4

வேலையில மூழ்கி கிடக்குறான் பையன்... அதான் போன் பேசற நேரத்துல கூட வேலை கெடாம இருக்க இப்படி தலைப்பாகை மாதிரி ரிசீவர கட்டி வெச்சிருக்கான்னு நெனச்சிடாதீங்க... தம்பி அம்புட்டு ஆர்வமா பார்க்கும் போதே தெரியல.. இந்த மூஞ்சி எல்லாம் கோட் எழுதிட்டா இருக்கவா போவுது.. ஏதாவது கேம் விளையாடிக்கிட்டு தான் இருக்கும்.

© unstablereality / Reddit

#5

#5

அடடே ஆச்சரியக்குறி! அதே ஏன் கழட்டிகிட்டு... கிறிஸ்தமஸ், நியூ இயர் முடிஞ்சதும், அந்த கிறிஸ்தமஸ் மரத்த... அப்படியே பொட்டிய பிரிக்காம திரும்பி பார்சல் பண்ணிட்டா செலவு மிச்சம்... கடைக்காரன் காச திருப்பிக் கொடுத்திடுவான். இதெல்லாம் கோயமுத்தூர் லொள்ள காட்டிலும் ரொம்ப ஓவர்ங்க தம்பி!

© Poiszyn / Imgur

#6

#6

தட்... நான் இருட்டுலே வாழ்றவன்டா ஃபெல்லோவோட நெய்பர்னு நினைக்கிறேன். ரெஸ்டாரன்ட் போய் பீட்சா வாங்கி சாப்பிட ரோம்பேறியா இருக்காங்கன்னு டோர் டெலிவரி பண்ணா... அதக் கூட கீழ இறங்கி போய் வாங்காம... நூல் போட்டு வாங்கி சாப்பிடுறாப்புல நம்ம பய.

© millselle/twitter

#7

#7

இதெல்லாம் அநியாயத்தின் உச்சக்கட்டம். அந்த கவர பிரிச்சு எடுக்க என்ன ஹல்க் பலம் வேணுமா என்ன... ஒரு தடவ கைத்தவறி கீழ போட்டாலே அந்த கவர் கிழிஞ்சிடும். இவங்கள எல்லாம் வெச்சுக்கிட்டு இந்த லட்சணத்துல... AI டெக்னாலஜி வேற முழுசா வந்திடுச்சுன்னா உலகம் ரொம்ப சுறுசுறுப்பாயிடும்.

© windowsru / Pikabu.ru

#8

#8

நல்லவேளை சோபாக்கு கீழே டாய்லெட்க்கு ஒரு வழி செய்யாம இருந்தாங்களே... அதுவரைக்கும் சிறப்பு!. இருக்குறதுலயே முட்டாளான சோம்பேறி இவராதான் இருக்கும். டாயலெட் வரைக்கும் இந்த சேர தூக்கிட்டு போய், உட்கார்ந்து உச்சா போறதுக்கு.. அப்படியே போயிருக்கலாம். ஒருவேளை... இந்த சேர் தூக்க ரெண்டு பெற வேலைக்கு வெச்சிருப்பாரோ..?!

© PadraigS / Imgur

#9

#9

ப்ரேக்-ஃபாஸ்ட் தவிர்க்க கூடாத ஒன்னு.. கட்டாயம் காலை உணவு சாப்பிட்டே அகனும்.. அதன் மூலமா தான் நமக்கான எனர்ஜி கிடைக்கும்ன்னு நிபுணர்கள் எல்லாம் சொல்றாங்க... அதுக்குன்னு இப்படி சோம்பேறித்தனமா.. பவுல் எடுத்து கலந்து சாப்பிட கஷ்ட்டப்பட்டு கவர்லே பால மிக்ஸ் பண்ணி சாப்பிடுறது எல்லாம்..... ரொம்ப ஓவர்!

#10

#10

மொபைல் நம்மள சோம்பேறி ஆக்கிடுச்சுனு தெரியும்.. அதுக்குன்னு.. இப்படி ஆறு பாட்டில் ட்ரிங்க ஆறு ஸ்ட்ரா போட்டு ஒரே நேரத்துல குடிக்க வைக்கிற அளவுக்கு சோம்பேறி ஆக்கிடுச்சுன்னு தெரியல. பாப்பா ஆறேழு வயசுலையே கண்ணாடி போட்டாச்சு.. இப்படியே போனா.. வரும் காலத்துல பிறக்க போற குழந்தைக்கே கண்ணாடி போடா வேண்டிய நிலைமை வரும் போலயே!

© dmmaknae / Imgur

#11

#11

அங்கிள் நீங்களே ஒரு சூரியன சொந்தமா வெச்சிக்கிட்டு.. எதுக்கு வீணா இப்படி ஒரு சன்பாத். ஆமா.. எல்லாரும் இங்க அந்த பிளாஸ்டிக் பாட்டில மட்டும் தான பாக்குறீங்க.. அதுக்கு பின்னாடி இருக்க யாரையும் பார்க்கல தான... நானும் பார்க்கல...

#12

#12

இவர யாருப்பா இந்த லிஸ்ட்ல போட்டது.. இவரு சோம்பேறி இல்ல.. இந்த யுகத்தோட சூப்பர் டாடி... உல் பணியன வெச்சு எப்படி குட்டி சுட்டிய கட்டிப்போட்டு வெச்சிருக்காரு. இதுக்கெல்லாம் ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம். சிறப்பு.. மிகச்சிறப்பு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny Photos: The Most Laziest People in The World!

Here we have shown some of the most laziest people around the world. and what they have done to get place in this list. Lets Check it out.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more