For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஒன்னுக்கு ரெண்டு தடவ உத்து பாருங்க, அப்பறம் எங்கள தப்பு சொல்லக் கூடாது - # Funny Photos

  By John
  |

  சான்றோர்கள் வாக்குகள் சிலது எல்லாம் எடுத்த உடனே புரியாது ரெண்டு, மூணு தடவ நல்லா படிச்சா தான் பிரியும். அட போங்கய்யா எனக்கு ஆண்டவர் போடுற ட்வீட்டே புரியலன்னு சிலர் புலம்பலாம்.. அவரு ஒரு தனி உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கவரு... அவரு இப்ப சொல்றது நமக்கு பத்து வருஷம் கழிச்சு தான் புரியும். அத விடுங்க. பல சமயம் குடிக்காரங்க பேசுற கூட நமக்கு புரியாது.

  Funny Photos: Confusing Pics Looks Twice To Know The Truth Part 2!

  படிக்குறதுல மட்டும் இல்லைங்க பல சமயம் பார்க்குறது கூட நம்மள கன்ஃபியூஸ் பண்ணும். உதாரணமா சொன்ன சில போட்டோஸ் பார்க்கும் போது அடடே என்னடா இது இப்படி இருக்குன்னு தோணும். அப்பறமா உத்து பார்த்தா தான் அட இது இம்புட்டு தானானு ரியாலிட்டிய புரிஞ்சுக்க முடியும். அப்படி பார்ததும் நம்மள குழப்புற சில போட்டோஸ் தான் இந்த Funny Photosல நாம பார்க்க போறோம்....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  Image Source: needfunny / Credit

  நீ பாதி, நான் பாதி கண்ணேன்னு பாட்டு கேட்டிருக்கோம்... இதேனப்பா மெய்யாலுமே... மேல் பாதி, கீழ் பாதியா இருக்காங்க...

  #2

  #2

  Image Source: needfunny / Credit

  உண்மைய சொல்லுங்க... முதல்ல என்னடா இந்த பொண்ணுக்கு காலு ஆம்பளை மாதிரி இருக்குன்னு தானே யோசிச்சீங்க..

  #3

  #3

  Image Source: needfunny / Credit

  கையும், காலும் மெர்ஜ் ஆயிடுச்சான்னு டவுட்டு ஆவ வேண்டாம்.. அந்தம்மா கைய ஒரு டிசைனா சொரியும் போது யாரோ போட்டோ எடுத்துட்டாங்க...

  #4

  #4

  Image Source: needfunny / Credit

  என்னய்யா பார்க்க பெரிய மனுஷன் மாதிரி இருக்க, பொண்ணுக ட்ரெஸ் எல்லாம் போட்டிருக்கான்னு... அவராண்ட கேள்வி கேட்டா... கண்ணுக்குள்ள விளக்கெண்ண ஊத்திட்டு நல்லா பாருடா வெண்ணன்னு திட்டுனாலும் திட்டுவாரு...

  #5

  #5

  Image Source: needfunny / Credit

  அய்யோ பாவம் அழகான உடலை கொடுத்த ஆண்டவன், முகத்த மட்டும் கிரேட் காளி கொடுத்துட்டானேன்னு யோசிச்சா.. சார்! பாஸ்.. அது அந்த பொண்ணோட ஆளோட முகமாமே... அவரு முன்னால தான் தண்ணில நீந்திட்டு இருக்காரு.

  Most Read:1 வாரத்திற்கு தினமும் காலையில் 3 பேரீட்சைகளை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா..!

  #6

  #6

  Image Source: needfunny / Credit

  சத்தியமா நானே முதல்ல அத ஏதோ காபி கப்புன்னு தான் நெனச்சேன். மறுக்கா பார்த்தா தான் தெரியுது... ராஸ்கல் பூனை பக்கெட்டுல சுருண்டு படுத்துட்டு இருக்கு...

  #7

  #7

  Image Source: needfunny / Credit

  இதான் நமக்கு நாமே சூனியம் வெச்சிக்கிறது... ஆனாலும், நல்ல டைமிங் பிக்...

  #8

  #8

  Image Source: needfunny / Credit

  யாரு மனசுல யாரு அவருக்கு என்ன பேருன்னு சொல்றது எம்புட்டு கஷ்டமோ.. அப்படி தான் இங்க யாரோடது தலை அதுன்னு கண்டுபிடிக்கிறது கஷ்டமா இருக்கு.. நீங்க எதுவும் தப்பா நெனச்சுடல தான...

  #9

  #9

  Image Source: needfunny / Credit

  மெடிக்கல் மிராக்கல்... போன படத்துக்கு நாம கொடுத்த ரியாக்ஷன் மாதிரியே இருக்கு இந்த மரம்....

  #10

  #10

  Image Source: needfunny / Credit

  பாம்பு வேக்ஸிங் பண்ணிட்டு வந்துடுச்சோ.... உடம்பு முழுக்க மொழுமொழுன்னு பிங்க் கலர்ல இருக்குது...

  Most Read:வாழைப்பழம்+இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால், வெறும் 14 நாட்களில் தொப்பையை குறைத்திடலாம்...!

  #11

  #11

  Image Source: needfunny / Credit

  இதுவொரு நல்ல டைமிங் பிக்... போட்டோ ஷாப் பண்ணியிருக்க கூட வாய்ப்புகள் உண்டு...

  #12

  #12

  Image Source: needfunny / Credit

  டப்புன்னு பார்த்தா... புறாவுக்கு முன்னாடி பொம்மை காரு நிக்கிறது மாதிரி தெரியும். ஆனா, புறாவும் நிஜம் தான், காரும் நிஜம் தான். என்ன, புறா மாடியில இருக்கு, காரு கீழ பார்க்கிங்ல இருக்கு...

  #13

  #13

  Image Source: needfunny / Credit

  மெய்யாலுமே ரொம்ப நேரமா யாரோட காலு எங்க இருக்குன்னு தேடிக்கிட்டு இருந்தேன்...

  #14

  #14

  Image Source: needfunny / Credit

  அடேய்! பச்சை கண்ணா... உனக்கு என்னடா... புருவமே கண்ணு மாதிரி இருக்குது.. உன்ன மாதிரி பச்ச கண்ணு இருக்குறவங்கள... சாதாரணமா இராத்திரி பார்த்தாலே பயப்படுவாங்க... நீ என்னடான்னா நாலு கண்ணு வெச்சிருக்க மாதிரி பிறந்து தொலச்சிருக்க ராஸ்கல்...

  #15

  #15

  Image Source: needfunny / Credit

  மற்றுமொரு சிறப்பான டைமிங் பிக்.... போட்டோ எடுத்த கலைஞருக்கு பாராட்டுக்கள்... எப்படி மேட்ச் பண்ணிருக்கான் பாருங்கய்யா ஃபிரேம்ல....

  Most Read:ஒரு சாதாரண ஆசிரியராக பணியாற்றிய எல்.கே அத்வானி குறித்து நீங்கள் அறியாத கதை! #Life #Facts

  #16

  #16

  Image Source: needfunny / Credit

  ஹே! மேன்... என்ன கை ரொம்ப நீளுது.... ஓ! அதான் பார்த்தேன்... அது பக்கத்துல இருக்க பொண்ணோடதா....

  #17

  #17

  Image Source: needfunny / Credit

  எங்களுக்கு எல்லாம் சாதாரணமா தான் தெரியுது.. உங்க கண்ணுக்கு அது எசக பிசக தெரிஞ்சா கம்பெனி பொறுப்பாகாது மக்களே...

  #18

  #18

  Image Source: needfunny / Credit

  கார் வெறியனா இருப்பானோ... ரெம்ப அழகா பிலாம் பண்ணி பெயிண்டிங் பண்ணிருக்கான்... சிறப்பான சம்பவம் தான்...

  #19

  #19

  Image Source: needfunny / Credit

  மறுக்கா, மறுக்கா எப்படி தான் இப்படி போட்டோ எடுக்குறாங்களோ.. பயப்பக்கி கழுத்து மட்டும் ரெண்டு அடி இருக்கும் போல.... நான் கூட, என்னடா பிரம்மன் இவன மட்டும் இப்படி திணுசா படைச்சுட்டானேன்னு வருத்தப்பட்டேன்...

  #20

  #20

  Image Source: needfunny / Credit

  பில்டிங் எல்லாம் எதுவும் எரியல... எதுக்கப்புல சூரிய அஸ்தமனம் தான் அப்படியே பில்டிங் கண்ணாடியில ரிப்லெக்ட் ஆகுது...

  Most Read:உங்க கையில இருக்கிற பணக்கார ரேகை உங்க அதிர்ஷ்டத்த பத்தி என்ன சொல்லுது? வாங்க பார்க்கலாம்

  #21

  #21

  Image Source: needfunny / Credit

  பொதுவா இந்த பேச்சுலர் ரூம்ல பார்ட்டி நடந்துச்சுன்னா.. கண்டிப்பா ஒருத்தராவது நடுராத்திரி 1 மணியளவு இப்படி ஒரு படா சைஸ் ஆம்லேட் போடுவாங்க....

  #22

  #22

  Image Source: needfunny / Credit

  Foodieஸ்களுக்கு வெறும் சாப்பாடு மட்டும் தான் தெரியும்.. என்ன மாதிரி கிரியேட்டிவ் மைண்ட் உள்ளவங்களுக்கு மட்டும் தான் அங்கன கீழ, புலிக்குட்டி பதுங்கு வெளிய வர மாதிரி ஒரு ரூபம் வெளிப்படுறது தெரியும்.. என்னப்பா நீங்க Foodieயா இல்ல கிரியேட்டிவ் ஆளா...

  #23

  #23

  Image Source: needfunny / Credit

  ஹவ் இஸ் திஸ் பாசிபல் ஐ சே.... எப்படி... எப்படி... எப்படி... சத்தியமா புரியல... ஒருவேள மூணு காலு இருக்குமோ...

  #24

  #24

  Image Source: needfunny / Credit

  எந்த ஊருடா மக்கா இது.. இங்கன எல்லாம் எப்படி தான் வாழ்க்கைய நடத்துறாங்களோ... ஒருவேள மப்புல இருக்குவன் மட்டும் தான் நேரா நடப்பானோ இந்த ஊருல...

  #25

  #25

  Image Source: needfunny / Credit

  இது வெறும் தரை இல்ல.. அங்க ஒரு நாயார் நடந்து போயிட்டு இருக்கார்... பார்த்து கால் பட்டுடாம க்ராஸ் பண்ணி போங்க... கடிச்சிட போறாரு...

  Most Read:கொடூர அணுவுலை விபத்தால் சின்னாபின்னமாகி, உலகில் தனித்துவிடப்பட்ட நகரின் கோரமான படங்கள்!

  #26

  #26

  Image Source: needfunny / Credit

  இதென்னடா மனுஷ பய, மிருக பயலுக தான் க்ராஸ் பண்றாங்கன்னு பார்த்தா... கன்றாவி செடி, கொடி கூட க்ராஸ் கனக்ஷன் பண்ணிக்கிது போல....

  #27

  #27

  Image Source: needfunny / Credit

  கமிட்டட் ஆளுங்க எல்லாம் அழகுல பயங்கி ரொம்ப நேரமா அந்த பொன்னையே பார்த்திருப்பாங்க... பயந்திருக்க வாய்ப்பில்ல.. ஒருவேள பக்கத்துல இருக்க அந்த பேக் கவர் பார்த்து பயந்திருந்தா.. மக்கா நீங்களும் என் சிங்கிள் இனமே.... சொல்ல முடியாது சிங்கிள்ஸ் கூட ஆளு கிடைக்காத விரக்தியில ஜொள்ளு விட்டிருக்கலாம்.. ஆனா, முரட்டு சிங்கிள்ஸ் அப்படி இருந்திருக்க மாட்டாங்க... நிச்சயமா பயந்திருப்பாங்க....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Funny Photos: Confusing Pics Looks Twice To Know The Truth Part 2!

  Funny Photos: Confusing Pics Looks Twice To Know The Truth Part 2!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more