For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இதவிடவா உங்க நாள் மோசமாகிட போகுது... இப்படி வந்து கொஞ்ச நேரம் சிரிச்சுட்டுப் போங்க!

  |

  பொதுவாவே நிறையா பேரு அன்னிக்கு நாள் மோசமா இருந்தா, மேனேஜர் கிட்ட திட்டு வாங்குனா... பொண்டாட்டி சொன்ன வேலை செய்ய மறந்துட்டா அத Bad Dayன்னு சொல்லுவாங்க.

  சில மேதாவிங்க... லேட்டா ஆபீஸ் கிளம்பிட்டு... பஸ் லேட்டு, ட்ராபிக் ஜாம்ன்னு எல்லாம் போறப்போக்குல Bad Dayன்னு சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டுட்டு போவாங்க.

  Funny Photos Bad Day of People

  அப்படியான மக்களுக்கு தான் இந்த போஸ்ட். இதெல்லாம் உங்களுக்கு Bad Dayன்னு தோணுச்சுன்னா... அப்பறம் இதோ இந்த படத்துல இருக்க இவங்கள எல்லாம் என்னன்னு சொல்லுவீங்க. இவங்களுக்கு நடந்தது எல்லாம் அப்ப என்ன Dayங்க...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அடி கொஞ்சம் பலமோ....

  அடி கொஞ்சம் பலமோ....

  பிளாஸ்டிக் பால கொஞ்சம் வேகமா விட்டெறிஞ்சலே பழுத்திருக்கும். இது பேஸ்பால் பந்து... சைசும் பெரிசு.. வாங்குனா அடியில முகத்துல ஏற்பட்ட காயமும் பெரிசா இருந்திருக்கும். நாலஞ்சு மாசத்துக்கு குப்புற படுத்து தூங்கவே முடியாது. இதுக்குதா மூஞ்சி முழுசா கவர் ஆகுற மாதிரி ஹெல்மட் போட்டு விளையாடனும்னுங்கிறது.

  நல்ல வேலை...

  நல்ல வேலை...

  நல்ல வேலையா பின்னாடி சிக்கிச்சு... முன்னாடி சிக்கியிருந்தா.. என்னத்துக்கு ஆகிறது. இதாவது விழுந்த சமையத்துல உயிரு போற வலிய தான் கொடுத்திருக்கும். முன்னாடி சிக்கியிருந்தா உயிரே இல்ல போயிருக்கும். சரி! தலைக்கு வந்தது தலை பாகையோட போச்சுன்னு சொல்ற மாதிரி... எடுத்துக்க வேண்டியது தான்.

  மழை காலம் வந்தாலே...

  மழை காலம் வந்தாலே...

  இந்த மழை காலம் வந்தாலே இதொரு பெரிய ரோதனையா இருக்கும். ரோட்டுல நடந்து போறவங்க மேல பைக்கு, காரு, லாரி, பஸ்ஸு எல்லாமே சேத்து தண்ணிய வாரி அடிச்சுட்டு போகும்.

  முதல்ல இதுக்கொரு சட்டம் கொண்டு வரணும். சிலரெல்லாம் மக்கள் நடந்து போறத கூட கவனிக்காம கொஞ்சம் லார்டு வூட்டு கொலாப்புட்டு மாதிரி வண்டி ஓட்டிட்டு போவாங்க பாருங்களேன்... கோபம் அப்படி வரும்!

  ஆடு மாதிரி!

  ஆடு மாதிரி!

  படத்த பார்த்ததும் பலருக்கு சிரிப்பு வந்திருக்கலாம். ஏன்னா, ஏதோ குல தெய்வம் கோயிலுக்கு நேர்ந்து விட்ட ஆட்ட வெட்டும் போது எப்படி குனிஞ்சு நிக்குமோ அப்படி இருக்காங்க அந்த அக்கா. ஆனாலும், அந்த சிட்டுவேஷன்ல இருந்து பார்த்தா தான் அந்த ரணமும், வலியும் தெரியும். என்னங்க பண்றது... பாவம்ன்னு சொல்லி உச்சுக்கொட்ட மட்டும் தான் முடியும்.

  MOST READ: பொண்ணுங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா அவங்களுக்கு பாலியல் தேவை அதிகமாக இருக்குனு அர்த்தமாம்...

  ரொம்ப கஷ்டம்!

  ரொம்ப கஷ்டம்!

  ரெண்டு நாள் சரியா காலையில மோஷன் போகலன்னாலோ... இல்ல காரம் அதிகமா சாப்பாடு சாப்பிட்டாலே... யப்பா அப்படி எரியும், வலிக்கும். இப்படி எல்லாம் குத்து வாங்குனா அவன் கதி என்ன ஆகுறது. வயித்துல இருந்து குடல் வரைக்கும் மொத்தமும் வெளிய வந்திடுமே.

  பர்பெக்ட்!

  பர்பெக்ட்!

  போட்டோகிரபியில பர்பெக்ட் டைமிங் ஷாட்ஸ்ன்னு ஒன்னு சொல்வாங்க. அது இதுதான். சிஜி வர்க் பண்ணா கூட இப்படி கனகச்சிதமா பண்ணிட முடியாது. அம்புட்டு பர்பெக்ஷன் இதுல இருக்கு. நெனச்சு பாருங்களே... அந்த பயலோட மைண்ட் வாய்ஸ் என்னவா இருந்திருக்கும்... ஆண்டவா புயல் வேகத்துல ஓட்டிட்டு வரேன்.. எதிருல மணல் லாரி எதுவும் வந்திடாமா பார்த்துக்கடா சாமின்னு வடிவேலு கூவுற மாதிரி இருந்திருக்குமோ...

  அச்சச்சோ!

  அச்சச்சோ!

  ஏடாகூடமா அங்குட்டு போய் தலைய மாட்டி சிக்க வெச்சதே தப்பு. ஒரு பொண்ணு ஆபத்தான நேரத்துல இருக்கும் போது இப்படியா அநாகரிகமான செயல்ல ஈடுபடுறது மிஸ்டர் காளை. உங்களுக்கெல்லாம் கவ்சாட்சியே இல்லையா? நீங்களும் ஒரு மாடு தானே???

  தெறிக்க விட்டாப்புல!

  தெறிக்க விட்டாப்புல!

  லோடு ஏத்தும் போதென்னவோ கூலா இல்லாம இருந்திருக்கலாம். ஆனா, தம்பி ஏசி போட்டு கார் ஓட்டிட்டு வந்திருப்பாரு போல.. கூலிங் ஜாஸ்தி ஆடி.. வண்டி குலுங்குன குலுக்கல்ல... சோடா ஜோரா பொங்கி வண்டி முழுக்க தெறிச்சிருக்கு.

  இதுக்கு தான் சொல்றது...

  இதுக்கு தான் சொல்றது...

  70, 80 ஏக்கராவுல கிரவுண்டு கட்டி விளையாட தெரிஞ்ச உங்களுக்கு... கொஞ்சம் பெரிய வண்டியா வாங்கி அதுல ஓட்டலாம்ன்னு தெரியாம போச்சே. பெரிய வண்டியா பார்த்து வாங்கி இருந்தா இந்நேரத்துக்கு இப்படி கவுந்து விழாம இருந்திருக்கலாம்ல... என்னவோ போங்கப்பா... இந்த பெரிய மனுஷங்களே இப்படி தான் இருக்காங்க...

  MOST READ: கிம் ஜோங்-உன் மனைவி கடைப்பிடிக்க வேண்டிய 9 ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்

  அடடே!

  அடடே!

  பொண்ணு நல்ல மாடல் அழகி மாதிரி இருக்கு. சன் பாத் எடுக்க வந்த பொண்ண, இந்த நாயி மூச்சா பேஞ்சு வாட்டர் பாத் எடுக்க வெச்சிருச்சே. ஏதாவது முன் பகை இருந்திருக்குமோ... என்ன இருந்தாலும் இப்படி எல்லாம் பண்ணலாமா டாகி.

  ஷிட்!

  ஷிட்!

  எப்பவுமே இந்த இங்கிலீஷ் அதிகம் படிச்சவங்க... எதுக்கு எடுத்தாலும் ஷிட், ஷிட்ன்னு சொல்லுவாங்க. அதாவது அவங்க எதிர்பார்த்த விஷயம் நடக்காட்டி, மொக்கையா, மோசமாக, கோபம் வர மாதிரி நடந்தா இப்படி சொல்றத வழக்கமா வெச்சிருப்பாங்க. இத பாருங்களேன்... ஸ்வீட் ஸ்டாலே பணியாரம் சாப்பிடுகிறதேங்கிற மாதிரி.. ஷிட்டுக்கே ஷிட் சொல்ற மாதிரியான ஒரு சிட்டுவேஷன். செம்மையா இருக்குள்ல....

  அடப்பாவத்த!

  அடப்பாவத்த!

  மழை சாரல் மாதிரி பெப்பர் தூவுடானா... பயபக்கி மலை தொடர் மாதிரி பெப்பர் தூவி வெச்சிருக்கான். ஏதாவது ஒரு முட்டையில இப்படி பெப்பர் கொட்டுனாலே செம்ம காண்டாகும். நம்ம பய நாலஞ்சு முட்டை சேர்ந்து பெருசா பல்பு வாங்கி இருக்காப்புல....

  நைஸ் பன்ச்!

  நைஸ் பன்ச்!

  கவுண்டமணி அண்ணன் ஒரு காமெடியில, "ஏண்டா நீ சொன்ன இடம் எவ்வளோ அப்புல இருக்கு... அடிப்பட்ட இடம் எங்க இருக்கு... நீ ஏதோ வேணும்னே பழைய பகை எல்லாம் வெச்சு செஞ்ச மாதிரி தான் இருக்கு"ன்னு சொல்ற மாதிரி தான்.. பந்து எங்க இருக்கு.. இந்த பொண்ணு கைய கொண்டு எய்ம் பண்ணி அடிச்ச இடம் எங்க இருக்கு... இதே ஏதோ ப்ரீ-பிளான்டு மர்டர் தான் போலயே.

  பெட்டர் லக்...

  பெட்டர் லக்...

  அதாவது மனுஷனுக்கு நூலிழையில வாய்ப்புகள் பறிபோகலாம். அதுக்குன்னு இந்த அளவுக்கு நூலிழை எல்லாம் ரொம்ப ஓவர். எல்லா நம்பர்லையும் ஒரு நம்பர் முன்ன, பின்ன அதிகமாக இருக்கு. பாவம்யா... தமிழ்நாடு தாமரைய விட மோசமான ஜாதகம் வெச்சிருப்பாரு போல அன்னணாச்சி.

  அடேய்!

  அடேய்!

  கட்டுப்பாடு இல்லாம கார் ஓட்டி மரத்துல இடிக்கிறது, பாதாளத்துல விடுறது, ஆறு, குளத்துல விழுந்த கார் கூட பார்த்திருக்கோம். கேட்டுக்கு முன்னாடி தாண்டா கார் பார்க் பண்ணுவாங்க. இதென்னடா புதுசா... கேட்டு மேல கார பார்க் பண்ணி வெச்சிருக்க. ஏலியன் வேலையா இருக்குமோ...

  MOST READ: தப்பி தவறி கூட இந்த செடிகளை தொட்டு விடாதீர்கள்..! மீறி தொட்டால் மரணம் கூட நேரலாம்...!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Funny Photos Bad Day of People

  Funny Photos Shows A Day Cant Be More Bad Than This.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more