TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
முடியை பிய்த்துக் கொண்டு சூப்பர் மார்கெட்டில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை - வைரல் வீடியோ!
நம் ஊருகளில் என்ன தான் குழாயடி சண்டைகளில் பெண்கள் அசிங்கசிங்கமாக திட்டிக் கொண்டாலும்... கட்டிப்பிடித்து, முடியை பிய்த்துக்கொண்டு நடக்கும் சண்டை எல்லாம் எப்போதாவது ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை தான் நடக்கும்.
அதற்குள் எப்படியாவது கணவன், மகன்கள், மகள்கள் நடுவே புகுந்து சண்டையை பிரித்துவிடுவார்கள், அல்லது அவர்களுக்குள்ளேயே இருக்கும் தலைவிகள் சண்டயை அடக்கிவிடுவார்கள்.
ஆனால், வெளிநாடுகளில் அப்படியில்லை.. முக்கியமாக ஆப்ரிக்க பெண்கள் மத்தியில் நடக்கும் சண்டையில் வேற லெவலில் இருக்கும்.. சண்டை என்பதை தாண்டி எப்படியாவது அவமானப்படுத்தி விட வேண்டும் என்பதே அவர்களது குறியாக இருக்கிறது.
நீங்களே கூட இணையங்களில் ஆப்ரிக்க பெண்களின் நிறைய குடுமிப்பிடி சண்டையை பார்த்திருக்கலாம், உடைகளை கிழித்து, முடியை பிய்த்து கொண்ட அடிதடி மோதலில் நடக்கும். அதை சுற்றி இருப்பவர்கள் வீடியோ எடுத்து வைரலாக்கி விடுவார்கள்.
அப்படியான ஒரு குடுமிப்பிடி சண்டை தான் சமீபத்தில் சூப்பர் மார்கெட் ஒன்றில் நடந்துள்ளது. ஊழியர்க எத்தனயோ முயற்சித்தும் அந்த ஆப்ரிக்க பெண்களின் சண்டையை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை...
எங்கே?
ஆப்ரிக்க பெண்களுக்குள் ஏற்பட்ட இந்த குடுமிபிடி சண்டை அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ரெனால்ட்ஸ்பர்க் என்ற பகுதியில் அமைந்திருக்கும் வால்மார்ட் சூப்பர் மார்கெட் மாலில் நடந்திருக்கிறது. சரசரவென சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்த அந்த நான்கு பெண்கள் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்க ஆரம்பித்துள்ளனர்.
ஸ்தம்பித்தது!
அவர்களது சண்டையை பார்த்து அந்த சூப்பர் மார்கெட்டே ஸ்தம்பித்து போனது என்று தான் கூற வேண்டும். சுற்றி இருந்த வாடிக்கையாளர்கள் யாவரும் வெலவெலத்துப் போயினர். அந்த பெண்கள் சண்டையிட்டுக் கொண்டனர் என்பதை தாண்டி, அவர்களது முடிகளை வேகமாக இழுத்து பிடிங்குவதில் தான் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.
பிய்த்து எடுத்துள்ளனர்!
ஆப்ரிக்க பெண்களிடையே முடி அலங்காரம் அதிகமாக காணப்படும். ஆனால்,, அவை அனைத்தும் அவர்களது உண்மையான முடியாக இருக்காது என்பது தான் நிதர்சனம். ஆப்ரிக்க பெண்கள் சவுரி முடி போன்ற எக்ஸ்டன்சன் செயற்கை முடிகளை பொருத்திக் கொள்ளும் வழக்கம் கொண்டிருப்பார்கள். ஆனால், அவை உண்மையான முடியுடன் கொஞ்சம் வலிமையாக பின்னப்பட்டிருக்கும்.
சூப்பர் மார்கெட்டில் சண்டையிட்டு கொண்ட அந்த நான்கு பெண்களும், ஒருவரை மாற்றி ஒருவர் மற்றொருவரின் முடியை பிய்த்து சூப்பர் மார்கெட் முழுவதும் சலூன் கடை போல ஆக்கிவிட்டார்கள்.
பயங்கரம்!
மிக சிலருக்கு மட்டுமே இவர்கள் எதற்காக சண்டையிட்டு கொண்டனர் என்ற விபரம் அறித்துள்ளது. பெரும்பாலானோர் இவர்கள் ஏன், எதற்கு சண்டையிட்டு கொள்கிறார்கள் என்பதை அறியாமல் வேடிக்கை மட்டும் பார்த்துள்ளனர். சிலர் அந்த காட்சிகளை வீடியோவாக பதிவும் செய்துள்ளனர்.
ஆனால், அவர்கள் சண்டையிட்டு கொண்ட விதம், கொடூரமாகவும், திகிலூட்டும் விதமாகவும், வன்முறை அதிகமாகவும் இருந்தது என்று சுற்றி இருந்தவர்கள் கூறி இருக்கிறார்கள்.
வீடியோ துவக்கம்!
இந்த நான்கு ஆப்ரிக்க பெண்கள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபடுவதை ஒருவர் வீடியோ எடுத்து வைரலாக்கி இருக்கிறார். அந்த வீடியோவின் துவக்கத்தில்...
அந்த ஆண் சூப்பர் மார்கெட் எங்கிலும் அவர்கள் பிய்த்து எறிந்த முடிகளை காண்பிக்கிறார்... அப்படியே கேமராவை கொந்தளிப்புடன் சண்டை நடந்துக் கொண்டிருக்கும் பெண்களை பார்த்து திருப்புகிறார்.
குத்து!
மாற்றி, மாற்றி ஒருவரை ஒருவர் முடியை பிடிச்சு இழுத்தும் முகத்தில் குத்தியும் சண்டை இடுகிறார்கள். அவர்கள் அப்போது தான் வால்மார்ட் சூப்பர் மார்கெட் உள்ளே நுழைந்திருக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளே வந்ததும் கத்தி கூச்சலிட்டு திட்டிக் கொண்டே சண்டையிடுகிறார்கள்.
ஒரு பெண் மட்டும் குறிப்பிட்டு இன்னொரு பெண்ணின் முடியை பிய்த்து எடுக்கிறார்.. ஏதோ ஒன்றோ இரண்டோ இல்லை.. முடிந்த வரை முடிகளை பிய்த்து சூப்பர் மார்க்கெட் தரையில் வீசுகிறார்.
ஊழியர்கள்!
இப்படி ஒரு சண்டையை சற்றும் எதிர்பார்க்காத வால்மார்ட் ஊழியர்கள் முதலில் அதிர்ந்து போயினர். பின்னர் உடனே சுதாரித்துக் கொண்ட அவர்கள், அந்த பெண்களை சண்டையில் இருந்து பிரித்துவிட முயன்றனர். ஆனால், அவர்களுக்கு ஈடுகொடுத்து இவர்களால் பிரிக்க முடியவில்லை.
ஒருவழியாக!
கடைசியாக இரண்டு ஆட்கள் வந்து அந்த பெண்களை, முக்கியமாக பெரிதாக சண்டையை ஏற்படுத்திக் கொண்டிருந்த இருவரை பிடித்து இழுத்து வால்மார்ட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்.அதன் பிறகு வால்மார்ட் ஊழியர் ஒருவர் அவர்கள் பிய்த்து வீசிய முடிகளை எல்லாம் தரையில் இருந்து எடுத்து சுத்தம் செய்கிறார். அத்துடன் இந்த வைரல் வீடியோ காட்சி முடிவடைந்துவிட்டது.
வீடியோ!
இந்த ஒட்டுமொத்த சண்டையும் சில நிமிடத்தில் அங்கே ஷாப்பிங் செய்ய வந்தவர்களை வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக மாற்றியது. இவ்வளவு கொடூரமாக பெண்கள் அடித்துக் கொள்வார்களா? இப்படியா முடியை பிய்த்து கொண்டு சண்டை இடுவார்கள் என்று பலரும் இந்த சண்டை காட்சியை கண்டு புலம்புகிறார்கள்.