உலகில் ரத்த ஆறு! தடை செய்யப்பட்ட பகுதியின் இதுவரை வெளிவராத புகைப்படங்கள்

Posted By:
Subscribe to Boldsky
உலகில் தடை செய்யப்பட்ட பகுதியின் இதுவரை வெளிவராத புகைப்படங்கள்- வீடியோ

தொழில் நுட்பத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் மனிதன் ஆரோக்கியமான வளர்ச்சியை பெறுவான். ஆனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது சுயநலத்திற்காகவே, சுயலாபத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அசுரத்தனமான வளர்ச்சிகண்டு வரும் அதே சூழ்நிலையில், வீழ்ச்சியையும் கண்டு கொண்டிருக்கிறோம்.

இப்போது நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய வரப்பிரசாதம் இணையம் தான். இணையத்தின் உதவியுடன் எத்தகைய தகவலையும் பெற முடியும். அதே சமயம், உங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்து உங்களுக்கென ஒரு தனி வட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. செய்திகளை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா? செய்திகள் நடந்த இடத்திற்கு செல்ல வேண்டாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ரோன் டெக்னாலஜி :

ட்ரோன் டெக்னாலஜி :

அதற்காகத்தான் இருக்கிறது ட்ரோன் டெக்னாலஜி. இதன் மூலமாக மனிதர்களால் செல்ல முடியாத, பெருமாபத்தான இடங்களில் கூட இந்த ட்ரோன் நுழைந்து படங்களை பிடித்துக் கொண்டுவருகிறது. உலகம் முழுவதும் இந்த ட்ரோன் டெக்னாலஜி மூலமாக எடுக்கப்பட்ட படங்கள் உங்களுக்காக தேடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

கணத்த இதயத்துடன் தொடருங்கள்.

சிரியா :

சிரியா :

பல ஆண்டுகளாக சிரியாவில் சிவில் வார் நடந்து கொண்டிருக்கிறது தெரியும். அதன் போது டேங்க் ஒன்று வெடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய போது ட்ரோன் மூலமாக பிடிக்கப்பட்ட படம்.

பெரிய நகரம் :

பெரிய நகரம் :

இப்போது நீங்கள் பார்த்த இந்த படம், சிரியாவின் மிகப்பெரிய நகரங்களில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. நான்கு ஆண்டுகள் அரசாங்கத்திற்கும் எதிர் அணியினருக்கும் நடந்த குண்டு வீச்சு மற்றும் போரில் முற்றிலுமாக நாசமடைந்தது இந்த நகரம்.

இங்கிருக்கும் பெருபாலானோர் கொல்லப்பட்டனர் மீதம் இருப்பவர்களோ உயிருக்கு அஞ்சி வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து சென்று விட்டனர்.

சீனா :

சீனா :

சீனாவின் பீஜிங் நகரில் இருக்ககூடிய ஏகாதிபத்திய அரண்மனை ஏன் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறார்கள் என்பதை அமெரிக்காவின் எக்ஸ்பாட் ட்ரே ராட்க்ளிஃப் எனப்படுகிற ட்ரோன் கண்டு பிடித்திருக்கிறது.

சீன அரசாங்கம் :

சீன அரசாங்கம் :

இந்த ராட்கிளிஃப் பறந்து படங்கள் பிடித்துக் கொண்டிருப்பதை அறிந்து சீன அதிகரிகாள் கைப்பற்றுவதற்கு முன்னாதகவே சில படங்களை அமெரிக்காவிற்கு அனுப்பி விட்டிருக்கிறது. அதனை ஏவியவர் சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

உக்ரைன் :

உக்ரைன் :

உக்ரைனில் 1986 ஆம் ஆண்டு கெர்னோபைல் எனப்படுகிற நியூக்கிளியர் டிசாஸ்டர் நடந்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து தான் நியூக்ளியர் விபத்து நிகழ்ந்தால் அது எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும் என்பது தெரிந்தது அதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

கைவிடப்பட்ட பகுதி :

கைவிடப்பட்ட பகுதி :

இந்த கெர்னோபில் எக்ஸ்க்ளூசன் இடத்திலிருந்து மிசைல் அட்டாக் ஏற்படக்கூடுமா என்று ரேடார் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறது. இதன் ‘க்ளிக்' சிக்னலைக் கூட ரேடியோ பயன்பாட்டாளர்களுக்கு கேட்கிறது. இதனை ரஷ்சியன் வுட் பெக்கர் என்று அழைக்கிறார்கள். இந்த பகுதி சில காலங்களாக பராமரிப்பு ஏதுமின்றி கைவிடப்பட்ட பகுதியாக இருக்கிறது.

அட்டாமிக் எனர்ஜி :

அட்டாமிக் எனர்ஜி :

க்ரிமியன் அட்டாமிக் எனர்ஜி ஸ்டேஷன் 1976 ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளிலிருந்து கட்டப்பட்டு வருகிறது. வருடக்கணக்கில் பணமும்,உழைப்பும் கொட்டிய நிலையில் அங்கு ஏற்பட்டிற்கும் காலச் சூழ்நிலை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் இந்த முயற்சி அப்படியே நிறுத்தப்பட்டிருக்கிறது.

இசைத் திருவிழா :

இசைத் திருவிழா :

இந்த செரிமியன் அட்டாமிக் எனர்ஜி ஸ்டேஷனை கஜாண்டிப் எலக்ட்ரானிக் மியூசிக் திருவிழா நடக்கும் இடமாக 1993 முதல் 1999 வரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை 2005 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாங்கிவிட்டிருக்கிறார்.

ஜப்பான் :

ஜப்பான் :

ஜப்பான் நாட்டில் ஒக்குமா என்ற இடத்தில் 9.9 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது. பூகம்பத்தை தொடர்ந்து சுனாமியும் வந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்த சம்பவம் அங்கிருந்த நியூக்ளியர் பவர் பிளாண்ட்டையே இனிபயன்படுத்த முடியாத நிலையில் தள்ளிவிட்டிருக்கிறது.

பேய்களின் நகரம் :

பேய்களின் நகரம் :

இங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த நியூக்ளியர் கரையத்து அல்லது வெளியேற்ற துவங்கியதும் மக்களுக்கு பல உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊரை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் அங்கே வெகு சில மனித நடமாட்டம் மட்டுமே இருந்திருக்கிறது.

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் மனிதர்கள் அங்கே சென்று வாழத் துவங்கியிருக்கிறார்கள்.

ரஷ்யா

ரஷ்யா

பல ஆண்டுகள் நீடித்த போரைத் தொடர்ந்து ரஷ்யா உக்ரைனை இணைத்துக் கொண்டது. 2014 ஆம் ஆண்டு வரை நீடித்த இந்த போரின் எச்சங்களாக போர் நடந்த இடத்தில் கேட்பாரற்று கிடக்கும் ப்ரோ பீரங்கி டேங்கர்கள்.

ராணுவ தளவாடங்கள்

ராணுவ தளவாடங்கள்

இந்த பகுதியின் பெயர் Debaltsevo Cauldron இந்த பகுதியில் தான் போர் பயங்கரமாக நடந்தது என்று கூறப்படுகிறது அதற்கு அடுத்த ஆண்டு இந்த புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றும் அங்கே ராணுவ தளவாடங்கள் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

ரத்த ஆறு :

ரத்த ஆறு :

மக்கள் நடமாட்டம் இல்லாத, மிகவும் மறைமுகமாக இருக்ககூடியதாக இந்த பகுதி இருக்கிறது. வடக்கு கலிபோர்னியாவில் இங்கே இருக்ககூடிய சிகப்பு ஆறு, வண்ணம் அல்ல இது உண்மையிலேயே ரத்தம்.

அருகில் இருப்பது ரிசார்ட்டுகள் அல்ல பன்றிக்கறி தொழிற்சாலை. ஸ்மித்ஃபீல்ட் ஃபுட்ஸ் எனப்படுகிற இந்த தொழிற்ச்சாலை தான் உலகிலேயே அதிகப்படியான பன்றிக்கறியை ஏற்றுமதி செய்கிறது.

இறைச்சி கழிவுகள் :

இறைச்சி கழிவுகள் :

ஆலையிலிருந்து வெளிவரக்கூடிய பன்றிகளின் ரத்தம்,பன்றிப் பண்ணைகளில் சேகரிக்கப்படும் கழிவுகள்,பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பின் மீதமாக பன்றிக்கறி போன்ற எல்லா கழிவுகளும் அருகிலிருக்கும் இந்த ஆற்றில் தான் கொட்டப்படுகிறது.

நார்வே :

நார்வே :

நார்த் போலில் இருந்து 650 மைல் தொலைவில் இருக்கக்கூடிய இந்த ஐஸ்லேண்டில் இருக்ககூடிய Svalbard archipelago என்ற இடத்தில் தான் நம்முடைய செடிகளுக்கான் விதைகள் பாதுகாக்கப்படுகிறது. அங்கே கிட்டதட்ட 8,60,000 விதைகள் இருக்கும்.

காலச் சூழ்நிலையில் அந்த செடிகள் அழிந்தாலும் இங்கு பாதுகாக்கப்பட்டிருக்கக்கூடிய விதைகளை கொண்டு செடியை உருவாக்க முடியும்.

விதை வங்கி :

விதை வங்கி :

இது 2006 ஆம் ஆண்டு டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் ஐஸ் கட்டி உருகினால் கூட உள்ளே ட்ரையாக இருக்கும் வகையில் கட்டமைத்திருக்கிறார்கள்.

All Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Forbidden Areas Around The World

Forbidden Areas Around The World
Story first published: Monday, January 22, 2018, 15:54 [IST]
Subscribe Newsletter